செய்திகள் :

15 நாள்களில் 31 கோடி லிட்டர் தண்ணீர் சேமிப்பு... சத்தமில்லாமல் சாதித்த சத்தீஸ்கர் கிராம மக்கள்!

post image

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கிராம மக்கள் ஒன்றிணைந்து, வெறும் 15 நாள்களுக்குள் சுமார் 31 கோடி லிட்டர் மழைநீரைச் சேமித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் மகாசமுந்த் (Mahasamund) மாவட்டத்தில் உள்ள 551 கிராம பஞ்சாயத்துகளைச் சேர்ந்த 1,140-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த அசாத்தியமான நீர் மேலாண்மைப் பணியை மேற்கொண்டுள்ளனர்.

3.41 லட்சம் நீர்ச்சேமிப்பு கட்டமைப்புகள்

கோடைக் காலத்தில் ஏற்படும் கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன் கிராம மக்கள் போர்க்கால அடிப்படையில் களமிறங்கினர். வெறும் 15 நாள்களில், மாவட்டம் முழுவதும் உறிஞ்சுகுழிகள் (Soak Pits), நீர்வரத்து அகழிகள் (Trenches), தடுப்பணைகள் (Check Dams) மற்றும் புதிய குளங்கள் எனச் சுமார் 3.41 லட்சம் நீர்ச்சேமிப்பு கட்டமைப்புகளை மக்கள் உருவாக்கினர்.

மழைநீரைச் சேமித்து மிகப்பெரிய சாதனை

உயர்ந்த நிலத்தடி நீர்மட்டம்

இந்தக் கட்டமைப்புகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், அப்பகுதியில் பருவமழை பெய்யத் தொடங்கியது. முதல் மழையிலேயே, மக்கள் அமைத்த உறிஞ்சுகுழிகள் மற்றும் தடுப்பணைகள் மூலமாகச் சுமார் 31 கோடி லிட்டர் மழைநீர் வீணாகாமல் பூமிக்குள் செலுத்தப்பட்டும், குளங்களில் தேக்கப்பட்டும் சேமிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் மகாசமுந்த் மாவட்டத்தின் 1,140 கிராமங்களில் வறண்டு கிடந்த கிணறுகளில் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. அரசாங்கத்தின் உதவிக்காகக் காத்திராமல், பொதுமக்களே ஒன்றிணைந்து தங்களின் நீர் தேவையைப் பூர்த்தி செய்து கொண்ட சத்தீஸ்கர் கிராம மக்களின் இந்த முயற்சி, நாடு முழுவதும் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

மே வங்கம்: `திரிணாமுல் தலைவர்கள்மீது முட்டை வீச வேண்டுமென்பது அரசு உத்தரவு'- பாஜக கவுன்சிலர் சர்ச்சை

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்த பிறகு அக்கட்சியின் தலைவர்கள் மக்களின் எதிர்ப்புகளுக்கு ஆளாகி வந்தனர். அவர்கள் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் முட்டை மற்று... மேலும் பார்க்க

ஹரியானா: தொழிலதிபரைத் தாக்க வந்த ரௌடிகள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி!

ஹரியானா மாநிலம், குருகிராமில் நேற்று இரவு ரௌடிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த மோதலில், இரு தரப்பினரும் கிட்டத்தட்ட 60 சுற்றுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த மோதலின் முடிவில், நான்கு ரௌடிகள் க... மேலும் பார்க்க

`பலூன், மலர்களால் ஏ.சி முதல்வகுப்பு பெட்டி அலங்காரம்' - ரயிலை தேனிலவு அறையாக மாற்றிய புதுமணத்தம்பதி

ரயில்களை எதாவது நிகழ்ச்சிக்கு செல்வதாக இருந்தால் அதன் முழு இருக்கைகளும் முன்பதிவு செய்யப்படுவது வழக்கம். ஆனால் மகாராஷ்டிரா தம்பதியினர் சற்று வித்தியாசமாக ரயிலை தங்களது தேனிலவு அறையாக மாற்றியுள்ளனர். ப... மேலும் பார்க்க

விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்! | க்யூட் கிளிக்ஸ்

விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!... மேலும் பார்க்க

மகாராஷ்டிராவில் கனமழை: ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 3000 கேஸ் சிலிண்டர்கள்!

மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் பன்வெல் தாலுகாவில் உள்ளசவானே தொழிற்பேட்டையில் எச்பிசிஎல் நி... மேலும் பார்க்க

அதிகாலை 3 மணிக்கு போன்; காலையில் வந்தடைந்த பணம்- அமிதாப்பின் அயோத்தி முதலீடு குறித்து அபிநந்தன் லோதா

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை நிலத்தில் முதலீடு செய்து வருகிறார். அமிதாப் பச்சனின் சொந்த ஊரான உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இந்த முதலீடுகளை செய்து... மேலும் பார்க்க