`அது பழைய காலம்... நீங்கள் பாட்டுக்கு பேசினால் எப்படி? நிரூபியுங்கள்' - திடீரென ...
15 வயது சிறுவன்: விளையாடும்போதே சுருண்டு விழுந்து உயிரிழப்பு - அதிர்ச்சி
கர்நாடக மாநிலம் தக்ஷிணா கன்னடா மாவட்டம் சுராத்கல் அருகே உள்ள சுரிஞ்சே கிராமத்தைச் சேர்ந்தவர் லிகித் அமீன். 15 வயதான இவர்10-ம் வகுப்பு படித்து வந்தார். புதன்கிழமை (ஆகஸ்ட் 5) தனது நண்பர்களுடன் வாலிபால் விளையாடிக்கொண்டிருந்த லிகித் அமீன், ஆட்டத்தின் இடையே பந்தை சர்வ் செய்துவிட்டு வலைக்கு அருகில் ஓடிவந்து, திடீரென தனது கைகளை உயர்த்தி மைதானத்தை விட்டு வெளியேற முயன்றார். அப்போது நிலைகுலைந்து கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தத் திடுக்கிடும் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது. மாணவன் லிகித்தின் இந்தத் திடீர் உயிரிழப்பிற்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவரவில்லை என்றும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழு விவரமும் தெரியும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று, உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 13 வயது சிறுவன் ஒருவன் கிரிக்கெட் விளையாடும் போது உயிரிழந்தார். சஹாரா கிராமத்தைச் சேர்ந்த விராட் சிங் சவுகான் என்ற 6-ம் வகுப்பு மாணவன், ஞாயிற்றுக்கிழமை காலையில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றுள்ளான். பந்துவீசிக்கொண்டிருந்தபோது கையில் கடுமையான வலிப்பதாகக் கூறிய அச்சிறுவன், நொடிப்பொழுதில் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தான்.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அவரை மீட்டு உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதியளித்தனர். அச்சிறுவன் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்த நிலையில், பிரேதப் பரிசோதனை செய்யக் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.
சிறார்களின் இத்தகைய திடீர் உயிரிழப்புகள் விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


















