செய்திகள் :

20 Years Of Venkat Prabhu: "அதே ஆர்வத்தோடு நல்ல கதைகளை வழங்குவேன்!" - நெகிழும் வெங்கட் பிரபு

post image

'சென்னை 28' திரைப்படம் வெளியாகி, 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இது இயக்குநர் வெங்கட் பிரபுவுக்குச் சினிமாவில் 20-ம் ஆண்டு.

சினிமாவில் 20-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பது பற்றியும், இத்தனை ஆண்டுகளாக அவர் சினிமாவில் எதிர்கொண்ட அனுபவங்கள் பற்றியும் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Venkat Prabhu
Venkat Prabhu

அந்தப் பதிவில், "இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில், 'சென்னை 600028' இல் ஒரு இயக்குநராக என் பயணம் தொடங்கியது. அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய எஸ்பிபி சார் அவர்களின் ஆசிகளாலும், சகோதரர் சரண் என் மீது வைத்த அசைக்க முடியாத நம்பிக்கையாலும் மட்டுமே இது சாத்தியமானது.

அந்த ஒரு வாய்ப்பு என் வாழ்க்கையையே மாற்றியமைத்தது. இன்று, என் திரைப் பயணத்தின் 20-வது ஆண்டில் நுழையும் இந்த வேளையில், மறக்க முடியாத நினைவுகளாலும் எதிர்காலம் குறித்த பேரார்வத்தாலும் என் மனம் நிரம்பியிருக்கிறது.

இந்தப் பயணத்தில் ஒருபோதும் செய்ததையே மீண்டும் செய்யக் கூடாது என்பதை நான் நோக்கமாகவே வைத்திருக்கிறேன். ஒவ்வொரு சினிமாவும் ஒரு புதிய வகை (GENRE), புதிய கதைசொல்லும் பாணி மற்றும் ஒரு புதிய சவாலை எதிர்கொள்வதற்கான வாய்ப்பாகவே எனக்கு அமைந்தது.

சில முயற்சிகளுக்கு உடனடி அன்பும் வரவேற்பும் கிடைத்தன; சில படங்கள் காலப்போக்கில் ரசிக்கப்பட்டன; சில படங்கள் எனக்குப் பாடங்களைக் கற்றுக்கொடுத்தன.

தொடர்ந்து புதிய முயற்சிகளைச் செய்வதற்கான தைரியம் எனக்குக் கிடைத்திருக்கிறது என்றால், அதற்கு இத்தனை ஆண்டுகளாக நீங்கள் என் மீது காட்டி வரும் அளவற்ற அன்பும் நம்பிக்கையும்தான் காரணம். என் வெற்றிகளைக் கொண்டாடியிருக்கிறீர்கள்.

கடினமான கட்டங்களில் என் பக்கபலமாக நின்றிருக்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் ஒரு புதிய படத்தோடு நான் வரும்போது அதே அன்போடு என்னை வரவேற்றிருக்கிறீர்கள். உங்களுடைய இந்த நம்பிக்கைதான் எனக்குத் தொடர்ந்து புதிய முயற்சிகளை எடுக்கும் துணிச்சலைக் கொடுக்கிறது.

அதற்கு நான் எத்தனை முறை நன்றி சொன்னாலும் ஈடாகாது. பின்னோக்கிப் பார்க்கையில் என் மனதிற்குள் நன்றியுணர்வு மட்டுமே நிரம்பியிருக்கிறது! என்னை நம்பிய ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும், நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், என் நண்பர்களுக்கும், இந்தப் பயணத்தின் அங்கமாக இருந்த ஒவ்வொருவருக்கும், அனைத்திற்கும் மேலாகச் சினிமாவைக் கொண்டாடும் ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகும், இன்றும் நான் சினிமாவின் தீவிர ரசிகனாகவே உணர்கிறேன். ஒவ்வொரு சினிமாவும் எனக்குப் புதிதாக ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிற்கு முன்பும் எனக்குள் இருக்கும் அந்தப் படபடப்பும் எதிர்பார்ப்பும் இன்றும் மாறவில்லை. மக்களை மகிழ்விக்கும், வியப்பில் ஆழ்த்தும், மற்றும் அவர்களோடு ஒன்றிப்போகும் கதைகளைச் சொல்ல வேண்டும் என்ற என் கனவு மேலும் வலுவடைந்து மட்டுமே இருக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அதே தீவிரமான ஆர்வத்தோடு உங்களுக்கு நல்ல கதைகளை வழங்குவேன் என்று உறுதியளிக்கிறேன். இன்னும் பல ஆண்டுகள், ஒன்றாகப் பயணிப்போம்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

DC Review: தேவதாஸின் அதிரடியும், அனிருத்தின் அட்டகாசமும்! ஆக்ஷன் சினிமா எனும் வாடாத பூ, மணக்கிறதா?

சிறையிலிருந்து தப்பி வந்து கேங்ஸ்டர் அரசோடு (தலைவாசல் விஜய்) கூட்டணி அமைத்திருக்கும் தேவதாஸ் (லோகேஷ் கனகராஜ்), அவரின் குழுவினருடன் இணைந்து காவல் துறையினரிடமிருந்து துப்பாக்கிகளைக் கொள்ளையடிக்கிறார். இ... மேலும் பார்க்க

GDN Review: பரபர ஐடியாக்கள், அதிரடி திருப்பம்; ஆனால் ஒரு ஜீனியஸின் பயோபிக்குக்கு இவை மட்டும் போதுமா?

1900களின் தொடக்கத்தில், கோவை மாவட்டத்தின் கிராமம் ஒன்றில், பருத்தி வேளான் செய்யும் விவசாயியாக இருக்கும் இளைஞர் ஜி.டி.நாயுடுவுக்கு (டீஜே அருணாசலம்) பிரிட்டிஷ் அதிகாரி பயன்படுத்தும் மோட்டர் சைக்கிள் மீத... மேலும் பார்க்க

புதுப்பேட்டை : முதிர்ச்சியின்மையும் வன்முறையும்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 13

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 13புதுப்பேட்டை : முதிர்ச்சியின்மையும் வன்முறையும்!தமிழ் சினிமா வ... மேலும் பார்க்க

"அலைஞ்சதுக்கு கூலி கிடைக்காத வருத்தத்தை அவருடைய 4 பாட்டு போக்கிடும்!" - 'கண்ணதாசன் நர்சரி' சரவணன்

'கவியரசு கண்ணதாசன் நர்சரி கார்டன்' என்ற போர்டு மாட்டிய தனது மாட்டு வண்டியை சென்னை சூளை பகுதியின் தெரு ஒன்றின் ஓரமாக நிறுத்துவிட்டு, எதிரே இருந்த டீ கடையில் போய் ஒரு டீ குடித்து விட்டு வந்த அந்த முதியவ... மேலும் பார்க்க

Sarathkumar: "நீதான் இறுதிவரை என் அன்புக் காதலி ராதிகா!" - சரத்குமார் ஜாலி டாக்

2025-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றிருந்தது. அந்த விருது நிகழ்வின் காணொளிகள் அடுத்தடுத்து நம் சினிமா விகடன் சேனலில் வெளியாகி வருகின்றன. இந்த நிகழ்வில், சிறந்த ... மேலும் பார்க்க

Dhanush: "அதுதான் சந்தோஷமான நாள்கள் என அப்போ எனக்கு தெரியல"- தனுஷ் ஷேரிங்

நடிகர் தனுஷ் சென்னை சாலிகிராமத்தில் தான் படித்த பள்ளிக்கு தனது சொந்த செலவில் 3 தளங்கள் கொண்ட கட்டடத்தைக் கட்டித் தந்திருக்கிறார். அந்தக் கட்டடத்திற்கு 'தனுஷ் பிளாக்' எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். ... மேலும் பார்க்க