இளைஞரணியினருக்கு சீட் கேட்டு கோரிக்கை வைத்த உதயநிதி; முதலமைச்சர் கொடுத்த பதில் எ...
2022-ல் இந்தியா உடனான தாக்குதலுக்கு பின், அணு ஆயுத சோதனையை நடத்தியதா சீனா?
ஜெனிவாவில் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதக் குறைப்பு மாநாடு நடந்து வருகிறது.
அதில் நேற்று அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் தாமஸ் ஜி. டினானோ பேசியது உலகம் முழுக்க அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
அப்படி என்ன பேசினார்?
2022-ம் ஆண்டு இந்தியா, சீனாவிற்கு இடையே தாக்குதல் நடந்தது. அந்தத் தாக்குதலில் 20 இந்திய வீரர்களும், 30-க்கும் மேற்பட்ட சீன வீரர்களும் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே (ஜூன் 22), சீனா அணு ஆயுத சோதனையை நடத்தியுள்ளது என்கிற அமெரிக்க உளவுத்துறை அறிக்கையைத் பற்றி தெரிவித்துள்ளார் டினானோ.
இந்தச் சோதனை இந்தியாவிற்கு அருகே உள்ள லாப் நூரில் நடந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

இந்தச் சோதனையை உலகளாவிய கண்காணிப்பு நிறுவனங்கள் கண்டுபிடிக்காமல் இருக்க, சீனா 'Decoupling' முறையைப் பயன்படுத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
அதாவது, இந்தச் சோதனையால் நிலத்தில் ஏற்படும் அதிர்வுகளை அடக்க பெரிய நிலத்தடி குழிகளுக்குள் வெடிக்கும் வெடிபொருட்களைப் பயன்படுத்தியதாக கூறுகிறது.
இந்தச் சோதனையில் சீனா சர்வதேச அணு ஆயுதக் கொள்கைகளை மீறியது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
சீனாவின் மறுப்பு
"அணு ஆயுத விஷயத்தில் அமெரிக்கா தொடர்ந்து சீனா மீது குற்றம் சாட்டி வருகிறது.
இந்தப் பொய்க் குற்றச்சாட்டுகளை சீனா கடுமையாக எதிர்க்கிறது.
அணு ஆயுத பந்தயத்தில் அமெரிக்கா தான் முக்கிய குற்றவாளி" என்று அணு ஆயுதக் குறைப்பின் சீனாவின் தூதரான ஷென் ஜியான் கருத்து தெரிவித்துள்ளார்.















