UPSC: `இறுதியில் என்னையே நான் தொலைத்துவிட்டேன்!' - யு.பி.எஸ்.சி தயாரிப்பு குறித்...
``2026 தேர்தலில் திமுக- தவெக இடையே தான் போட்டி" - டிடிவி தினகரன் அதிரடி
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் இன்று ( நவ.6) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
அதில் வரும் தேர்தலில் திமுகவிற்கும், தவெகவிற்கும்தான் போட்டி என்று கூறியிருக்கிறார்.
"வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கும் - தவெக கூட்டணிக்கும் இடையேதான் போட்டி இருக்கும்.

விஜய்யுடன் நான் செல்வதற்காக இப்படி பேசுகிறேன் என்று எல்லாம் இல்லை. நான் முடிவு செய்யவே இல்லை.
எதார்த்தமாக ஒரு குடிமகனாக நான் சொல்கிறேன். விஜய்யின் வருகையால் அடுத்த தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும்.
அதிமுக ஆட்சிக்கு வருவதைவிட பொதுச்செயலாளர் பதவியை விட்டுவிடக் கூடாது என்றுதான் எடப்பாடி நினைக்கிறார்.
அமமுக, கூட்டணி பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும். அதைப் பற்றி தற்போது சொல்லமுடியாது.
அடுத்த ஆண்டு ஜனவரியில் முறைப்படி அறிவிப்புகள் வெளியிடப்படும்.

தற்போது யார் யார் பேசுகிறார்கள் என்று சொல்வது நாகரிகமாக இருக்காது. இன்னும் சில புதிய மாற்றங்கள் வரவிருக்கின்றன.
ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன். அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும்" என்று டிடிவி தினகரன் பேசியிருக்கிறார்.














