"ஆளுநர் மூலம் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக நடக்கிறது பாஜக" - பெ.சண்முகம் குற்றச...
2026 தேர்தல் முடிவுகளும், உங்கள் வங்கிக் கணக்கில் நிகழும் கொள்ளையும்!
ஹேய், எப்படி இருக்கீங்க?
இந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைக் கவனிச்சீங்களா? "இந்தக் கட்சிதான் மறுபடியும் ஆட்சிக்கு வரும், அவங்களை யாருமே அசைக்க முடியாது" என்று பல வருடங்களாக மக்கள் மனதில் ஆழமாக இருந்த ஒரு பிம்பம் இப்போது உடைந்து சிதறியிருக்கிறது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்து, எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது வெறும் அரசியல் மாற்றம் அல்ல; இது ஒரு மாபெரும் உளவியல் மாற்றம். "பழக்கமான ஆட்களே பரவாயில்லை, புதியவர்கள் வந்தால் என்ன நடக்குமோ" என்ற அந்தப் பழைய பயத்தை மக்கள் இப்போது தைரியமாகத் தூக்கி எறிந்துவிட்டார்கள்.
மக்களின் அரசியல் மனநிலையில் இவ்வளவு பெரிய மாற்றம் வந்திருக்கிறது, சரி. ஆனால் உங்கள் முதலீட்டு மனநிலையில் அந்த மாற்றம் வந்திருக்கிறதா?
நீங்க ஃபிக்சட் டெப்பாசிட்டில் (Fixed Deposit) மட்டும் முதலீடு செய்பவரா? அப்போ நீங்க இதைக் கட்டாயம் கேட்கணும்!
உளவியலில் மனிதர்கள் செய்யும் மிகப்பெரிய தவறுக்கு 'இழப்புத் தவிர்ப்பு' (Loss Aversion) என்று பெயர். அதாவது, புதிதாக ஒன்றைப் பெற்று லாபம் அடைவதை விட, கையில் இருப்பதை எக்காரணம் கொண்டும் இழந்துவிடக் கூடாது என்பதில் மனித மூளை அதிதீவிரமாகச் செயல்படும்.
இந்தப் பலவீனத்தைத்தான் பல நிதி நிறுவனங்கள் அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றன.
"உங்கள் பணம் இங்கே 100% பாதுகாப்பாக இருக்கும்" என்ற அந்த ஒரு வரி உங்கள் மூளைக்கு ஒருவித போதையைத் தருகிறது. உங்கள் பல வருட உழைப்பை வங்கி ஃபிக்சட் டெப்பாசிட்டில் போட்டுவிட்டு, "எனக்கு வருடம் 7% வட்டி கிடைக்கிறது" என்று நிம்மதியாகத் தூங்குகிறீர்கள். ஆனால் நிதர்சனம் என்ன?
நீங்கள் நிம்மதியாகத் தூங்கும் அதே நேரத்தில், வெளியே 6% பணவீக்கம் (Inflation) என்ற கண்ணுக்குத் தெரியாத திருடன் உங்கள் பணத்தின் மதிப்பைச் சத்தமில்லாமல் சூறையாடிக் கொண்டிருக்கிறான். மீதமுள்ள ஒரு சதவீத லாபத்தையும் அரசாங்கம் வரியாக எடுத்துக் கொள்கிறது.
உங்கள் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு, இப்போது அதே ஒரு லட்சமாகத்தான் இருக்கும். ஆனால், 5 வருடங்களுக்கு முன்பு அந்தப் பணத்தில் வாங்கிய பொருட்களை இப்போது உங்களால் வாங்க முடியாது. இது பாதுகாப்பு அல்ல; இது உங்கள் பணத்தின் வாங்கும் திறனை நீங்களே மெதுவாக அழித்துக்கொள்ளும் ஒரு மாயை!

"இதற்கு என்னதான் தீர்வு?"
விடை 'மியூச்சுவல் ஃபண்ட்ஸ்' (Mutual Funds). ஆனால் இங்கேதான் உங்கள் மூளை மீண்டும் அதே பழைய தந்திரத்தைச் செய்கிறது. "புதியவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகுமோ?" என்று பல வருடங்களாக மக்களைப் பயமுறுத்திய அதே மனநிலைதான், இங்கும் உங்களைத் தடுக்கிறது.
"பங்குச்சந்தை சார்ந்த முதலீடு என்றாலே ஆபத்து", "என் அசல் பணம் கூட போய்விடும்" என்று நீங்கள் பயப்படுகிறீர்கள். ஆனால் ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? உங்களின் இந்தப் பயம்தான் பெரிய முதலீட்டாளர்களின் மூலதனமே.
சந்தை சற்றே சரியும்போது நீங்கள் பயந்துபோய் ஃபண்டை விற்றுவிட்டு வெளியேறுகிறீர்கள். அந்த வீழ்ச்சியைப் பயன்படுத்தி, அவர்கள் குறைந்த விலையில் முதலீடு செய்து கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள்.
இந்திய முதலீட்டாளர்கள் பலரும் செய்யும் தவறு இதுதான். சந்தையின் ஏற்ற இறக்கங்களைப் பார்த்துப் பயந்து ஓடுவதால், நீண்ட கால அடிப்படையில் கிடைக்கக்கூடிய 12% முதல் 15% வரையிலான லாபத்தை (Opportunity Cost) கோட்டை விடுகிறார்கள்.

இதுக்காக ஃபிக்சட் டெப்பாசிட் மோசமானது, மியூச்சுவல் ஃபண்டுகள்தான் பெஸ்ட் என்று நான் சொல்ல வரவில்லை. நீங்கள் எந்த இலக்கிற்காக முதலீடு செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்!
ஃபிக்சட் டெப்பாசிட் எப்போது? மியூச்சுவல் ஃபண்டுகள் எப்போது?
அடுத்த 1 முதல் 3 வருடங்களுக்குள் உங்கள் மகளின் கல்விக்கட்டணம், திருமணச் செலவு அல்லது மருத்துவத் தேவைக்காகப் பணத்தைச் சேமிக்கிறீர்கள் என்றால், அந்தப் பணத்தை மியூச்சுவல் ஃபண்டில் போடுவது நெருப்போடு விளையாடுவதற்குச் சமம். எங்கு உங்கள் மூலதனத்திற்கு 100% பாதுகாப்பு அவசியமோ, அங்கு FD-யே ராஜா.
ஆனால், உங்களின் நிம்மதியான ஓய்வுக்காலத்திற்காகவோ அல்லது 15 வருடங்கள் கழித்து வரப்போகும் உங்கள் குழந்தையின் உயர்கல்விக்காகவோ சேமிக்கிறீர்கள் என்றால், அந்தப் பணத்தை FD-ல் முடக்கி வைப்பது மிகப்பெரிய நிதி முட்டாள்தனம். நீண்ட கால அடிப்படையில் பணவீக்கத்தைத் தாண்டி உங்கள் பணத்தை வளர்க்க, மியூச்சுவல் ஃபண்டுகள் மட்டுமே சிறந்த ஆயுதம்.
இப்போது நீங்களும் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. உங்களின் உணர்ச்சிகளை ஓரம் கட்டிவிட்டு, உங்கள் நிதி இலக்குகளுக்குத் தகுந்த மாதிரி சரியான முடிவை இன்றே எடுங்கள்!
"பாதுகாப்பு என்ற பெயரில் பணத்தை முடக்கி வைப்பது பயம்; பணவீக்கத்தைத் தாண்டி பணத்தை வளரச் செய்வது லாஜிக்!"
உங்களின் நீண்ட கால முதலீட்டுக்குச் சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகளை எப்படித் தேர்ந்தெடுப்பது என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்துகொள்ள மியூச்சுவல் ஃபண்ட்ஸ் விநியோக நிறுவனமான 'லாபம்' வழங்கும் ஆன்லைன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்.

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் VS ஃபிக்ஸட் டெப்பாசிட்
அரசு ஊழியர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி
(ஃபிக்ஸட் டெப்பாசிட் & மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீட்டாளர்கள் மற்றும் இவற்றில் பணம் போட இருப்பவர்களும் பங்கேற்கலாம்!)
நாள்: மே 6, 2026, புதன்
நேரம்: மலை 7 மணி
முன்பதிவு செய்யும் 100 பேருக்கு மட்டுமே அனுமதி.
முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-may06-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_may06_2026

















