நங்கநல்லூர்: கதவில் ரத்தக்கறை; கொடூரமாக கொல்லப்பட்ட பெண் தொழிலதிபர் - தூக்கில் த...
'3 இடியட்ஸ்' படத்தின் 2-ம் பாகம் உருவாகிறதா? - ஆமீர் கான் சொன்ன தகவல் என்ன?
'3 இடியட்ஸ்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஆமீர் கான் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில், ஆமீர் கான் மாதவன், ஷர்மான் ஜோஷி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் '3 இடியட்ஸ்'.

இந்தியில் வெளியான இப்படத்தை இயக்குநர் ஷங்கர் தமிழில் 'நண்பன்' என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார்.
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. '3 இடியட்ஸ்' படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், '3 இடியட்ஸ்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஆமீர் கான் தெரிவித்திருக்கிறார்.
அமர் உஜாலா உடனான நேர்காணலில் பேசியிருக்கும் ஆமீர் கான், " ராஜ்குமார் ஹிராணி இப்போது '3 இடியட்ஸ் 2' படத்திற்கான கதையை எழுதி வருகிறார்.
நான் அந்தக் கதையை கேட்டேன். மிக நன்றாக இருக்கிறது. முதல் பாகத்தைப் போலவே நகைச்சுவை பாணி இருந்தாலும், இதுவரை சொல்லப்படாத கதையாக இது இருக்கும்.

இது அதே '3 இடியட்ஸ்' கதை தான், ஆனால் கதைக்களம் 10 ஆண்டுகளுக்கு பிறகான கதைக்களமாக இருக்கும்.
விரைவில் நான் பணியாற்ற உள்ள படங்களில் இதுவும் ஒன்று. இது ஒரு அழகான கதை நான் இந்தப் படத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.


















