செய்திகள் :

3-ம் இடத்தில் வானதி; கொங்கு பெல்ட்டில் சோபிக்காத அதிமுக... சிதறடிக்கும் விசில் - கோவை 2 மணி நிலவரம்!

post image

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் த.வெ.க. வேட்பாளர்கள் அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

எஸ்.பி.வேலுமணி

2 மணி நிலவரப்படி கிணத்துக்கடவு, சூலூர், கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் ஆகிய 5 தொகுதிகளில் த.வெ.க., தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தி.மு.க வேட்பாளர்கள் கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், வால்பாறை ஆகிய 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். அ.தி.மு.க., வேட்பாளர்கள் தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி ஆகிய 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

தி.மு.க-வில் கோவை தெற்கில் செந்தில் பாலாஜி, மேட்டுப்பாளையத்தில் கவிதா கல்யாணசுந்தரம், வால்பாறையில் சுதாகர் ஆகியோர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர். அ.தி.மு.க-வில் தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சியில் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகின்றனர்.

வானதி சீனிவாசன்

த.வெ.க-வில் கிணத்துக்கடவில் விக்னேஷ், கோவை வடக்கில் சம்பத்குமார், சூலூரில் சுகுமார், கவுண்டம்பாளையத்தில் கனிமொழி சந்தோஷ், சிங்காநல்லூரில் ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். கோவை வடக்கு தொகுதியில் பின்னடைவைச் சந்தித்து வரும் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், தொடர்ந்து மூன்றாவது இடத்திலேயே நீடிக்கிறார்.

அவிநாசி: இ-சேவை மையம் நடத்தும் கணவர்; எல்.முருகனை வீழ்த்தி வாகை சூடிய இல்லத்தரசி! யார் இந்த கமலி?

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட இளம் வேட்பாளர் மருத்துவர் கோகிலா மணி, அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ... மேலும் பார்க்க

ஈரோட்டில் வாஷ் அவுட்டான திமுக கூட்டணி; அமைச்சர் உட்பட 8 பேரை வீழ்த்திய த.வெ.க!

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கோபிச்செட்டிப்பாளையம், மொடக்குறிச்சி, பவானி, பவானிசாகர் தனி, அந்தியூர், பெருந்துறை என மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஈரோடு மேற்கு, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்ப... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம்: சோபிக்காத த.மா.கா; சம்பவம் செய்த சக்கரபாணி - 7வது முறை வெற்றி சாத்தியமானது எப்படி?

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார், சக்கரபாணி. தொகுதி முழுவதும் மக்களுக்கான அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் என எல்லாவற்றையும் செய்து தொகுதியைத் தன் கன்ட்ரோலி... மேலும் பார்க்க

ஓ.பி.எஸ்ஸிற்கு ’கிலி’யை ஏற்படுத்திய த.வெ.க; திக் திக் வாக்கு எண்ணிக்கை; போராடி கரை சேர்ந்த தி.மு.க!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க -வில் இணைந்து போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார் எனும்போது வெல்வாரா? தோற்பாரா? என்ற எதிர்பார்ப்புகள் எகிறியது. அ.தி.மு.க-வால் இவ்வளவு காலமும் வெற... மேலும் பார்க்க

TVK: சீட் தராத திமுக; பழி தீர்த்த கட்சித்தாவல்; சூலூரை வென்ற தவெக சுகுமாரின் பின்னணி என்ன?

சூலூர் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 616 வாக்காளர்கள் உள்ள நிலையில்,2 லட்சத்து 71 ஆயிரத்து 567 பேர் வாக்களித்தனர். இதில் 90 ஆயிரத்து 531 வாக்குகள் பெற்ற த.வெ.க. வேட்பாளர் சுகுமார... மேலும் பார்க்க

TVK: 'சென்னைவாசி, சிபி சத்யராஜின் ஆதரவு' - சிங்காநல்லூரை வென்ற ஸ்ரீ கிரி பிரசாத்தின் பின்னணி என்ன?

சிங்காநல்லூர் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 69 ஆயிரத்து 941 வாக்காளர்களில், தேர்தலில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 746 பேர் வாக்களித்தனர். இதில் த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீ கிரி பிரசாத் 84 ஆயிரத்து 163 வாக்... மேலும் பார்க்க