Tax War: ரஷ்யாவின் 'வீட்டோ' முதல் ட்ரம்ப்பின் 'சந்தை' வரை... விடையின்றி நிற்கும்...
`39 வருட அனுபவம் இருக்கு; அம்மா ஆட்சியைக் கொண்டு வர என்ன வேண்டுமானாலும் செய்வேன்' - சசிகலா
பேரறிஞர் அண்ணாவின் 57-ஆவது நினைவு நாளில், நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் வி.கே.சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
"அம்மா இருந்தபோது இந்த அரசாங்கம் எப்படி இருந்தது என்று மக்களுக்கு தெரியும்.
அம்மா ஆட்சியைக் கொண்டு வர என்ன வேண்டுமானாலும் செய்வேன்.
என்னுடைய 39 வருட அனுபவத்தை வைத்து அம்மா ஆட்சியைக் கொண்டு வருவேன்.
இந்த திமுக அரசாங்கத்தை விரட்டி அடிப்போம்.

ஒவ்வொரு கட்சியும் யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ அவர்களுடன் கூட்டணி அமைத்துக்கொள்வார்கள்.
அதனால் கூட்டணி குறித்து என்னால் கருத்து சொல்ல முடியாது.
அம்மா வழியில் ஆட்சி நடக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய திட்டம்.
அதனை நான் நல்ல முறையில் செயல்படுத்துவேன்" என்று பேசியிருக்கிறார்.












