செய்திகள் :

'4 மணிக்கு முதல்வர் முன்னிலையில் கட்சியில் இணையுங்கள்...' - பிரஷர் போடும் திமுக; குழப்பத்தில் அஜிதா!

post image

முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடிக்குச் செல்லவிருக்கிறார். அதற்குள் தவெக நிர்வாகி அஜிதாவை திமுக முகாமுக்கு இழுத்து முதல்வர் முன்னிலையில் கட்சியில் இணைத்து விட வேண்டுமென ஒரு டீம் தீவிரமாக வேலை பார்த்து வருவதால் தூத்துக்குடி அரசியல் பரபரக்க தொடங்கியிருக்கிறது.

அஜிதா
அஜிதா

விஜய்யின் தவெகவில் தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளராக ஆக்டிவாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தவர் அஜிதா. கட்சியின் உள்ளடி அரசியலால் தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் பதவி அவருக்குக் கிடைக்கவில்லை.

SDR சாமுவேல் என்பவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதில் அதிருப்தியடைந்த அஜிதா, தனது ஆதரவாளர்களுடன் தவெக அலுவலகத்தை முற்றுகையிட்டு விஜய்யின் காரையும் மறித்து போராடியிருந்தார்.

ஆனால், தவெக தலைமை அஜிதாவைக் கண்டுகொள்ளவே இல்லை. கடந்த மூன்று மாதங்களாக எந்த முடிவையும் எடுக்காமல் அமைதியாக இருந்தார் அஜிதா. இந்நிலையில், அவரைத் தங்கள் கட்சியில் இணைக்க திமுகவும் அதிமுகவும் தீவிரமாக முயன்றதாகக் கூறப்படுகிறது.

திமுக தரப்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் அதிமுக தரப்பில் செல்லபாண்டியன், சண்முகநாதனும் அஜிதாவை அணுகி தங்கள் முகாமுக்கு இழுக்கப் பேசியிருக்கின்றனர்.

அஜிதா
அஜிதா

இடையில் சசிகலா அணியும் நாம் தமிழரும் கூட அஜிதாவிடம் பேசிப் பார்த்திருக்கிறார்கள். 'உழைத்த உழைப்புக்கு அங்கீகாரம் இல்லை. இனியும் தவெகவில் தொடர வேண்டாம்' என ஆதரவாளர்கள் அழுத்தவே அஜிதாவும் தூத்துக்குடி லோக்கல் பாலிட்டிக்ஸை மனதில் வைத்து அதிமுக பக்கமாகச் செல்லும் மனநிலைக்கு வந்ததாகக் கூறுகின்றனர்.

இந்நிலையில்தான், முதல்வர் ஸ்டாலின் இன்று தூத்துக்குடி செல்லும் நிலையில் அவர் முன்னிலையில் அஜிதாவை கட்சியில் இணைக்க ஒரு டீம் தீவிரமாக முயன்று வருவதாகக் கூறுகின்றனர்.

'முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைவது எவ்வளவு பெரிய கௌரவம் தெரியுமா?' எனப் பல லைன்கள் வழியாக அழுத்தம் கொடுப்பதில் அஜிதாவே குழம்பிப் போயிருக்கிறாராம். முதல்வர் 4 மணிக்கு தூத்துக்குடிக்குச் செல்லும் நிலையில் 3 மணி வரை முடிவெடுக்க நேரம் கேட்டிருப்பதாக அஜிதா தரப்பு கூறுகிறது.

'முதல்வர் முன்னிலையில் இணைக்கும் அளவுக்கு அவர் அவ்வளவு வொர்த்தான ஆளா?' எனும் கேள்வியோடு திமுகவின் இன்னொரு டீம் அஜிதாவின் இணைப்புக்கு முட்டுக்கட்டை போடவும் பார்க்கிறதாம்.

அஜிதாவை இணைப்பதன் மூலம் திருச்செந்தூரில் மீனவர்களின் வாக்குகளை வெகுவாகக் கவர முடியும் எனத் திட்டமிட்டிருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் முதல்வரின் வருகையையொட்டி அதற்கான காய் நகர்த்தலைப் பரபரப்பாகச் செய்துகொண்டிருக்கிறார்.

பணி மாறுதலுக்கு பணம் வாங்கும் முறை ஒழிக்கப்படும்; திருப்பூரில் விஜய் அறிவித்த வாக்குறுதிகள் என்ன?

தவெக தலைவர் விஜய் இன்று திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய விஜய் சில வாக்குறுதிகளை அறிவித்தார்.விஜய் பேசியதாவது, 'நாளை மறுநாள் நம்முடைய தேர்தல் வாக்குறுதிகளை புத்... மேலும் பார்க்க

பீகார் அரசியலில் புதிய சகாப்தம்: முதல் பாஜக முதலமைச்சராகிறார் சாம்ராட் சவுத்ரி - பின்னணி என்ன?

பீகாரில் கடந்த 20 ஆண்டுகளாக நீடித்த நிதிஷ் குமாரின் ஆட்சி நிறைவுக்கு வந்துள்ள நிலையில், மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பா.ஜ.க-வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி பதவியேற்க உள்ளார். இதன் மூலம், பீகார் மாநில ... மேலும் பார்க்க

'டார்கெட் 1 லட்சம் வாக்குகள்!' - பெரம்பூரில் வெல்வாரா விஜய்? |களநிலவரம் ஓர் அலசல்!

தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில், பெரம்பூரில் விஜய்யை 1 லட்சம் வாக்குகள் பெற வைப்போம் என டார்கெட் நிர்ணயித்து தொகுதிக்குள் தவெகவினர் பணியாற்ற... மேலும் பார்க்க

நொய்டா போராட்டம்: `பாக்கிஸ்தான் சதி' - அரசு குற்றச்சாட்டு; 2027 தேர்தலை நோக்கித் திரும்பும் அரசியல்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் குறைந்த ஊதியம் மற்றும் மோசமான பணிச்சூழலைக் கண்டித்து 40,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த விவகாரம் அம்மாநிலத்தி... மேலும் பார்க்க

``பிரதமர் மோடிக்கு இது இறுதி எச்சரிக்கை" - முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் வீடியோ

நாளை மறுநாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றத்தில் தீபம்; மாநில விழாவாக தைப்பூசம் - வெளியானது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 14) பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. மத்திய அமைச்சரும், முன்னாள் தேசிய தலைவருமான ஜேபி நட்டா 'புதிய யுகம் படைக்கும் தாமரை... மேலும் பார்க்க