செய்திகள் :

'48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை' மிரட்டும் ட்ரம்ப்; 'என்ன செய்வோம் தெரியுமா?' சீறும் ஈரான்

post image

ஈரான் போர் முடிவதாகவே தெரியவில்லை.

அமெரிக்காவும், இஸ்ரேலும் மிரட்ட, பதிலுக்கு ஈரான் மிரட்ட என்று பிரச்னை பெரிதாகி கொண்டே போகிறது.

நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு தனது ட்ரூத் பக்கத்தில் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

ஈரான் போர்
ஈரான் போர்

என்ன எச்சரிக்கை?

"எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்திற்குள் முழுவதுமாக திறக்கவில்லை என்றால்...

அமெரிக்கா ஈரானின் வெவ்வேறு எரிசக்தி கட்டமைப்புகளை அழிக்கும். இதில் ஈரானின் மிகப்பெரிய கட்டமைப்பே முதலில் அழிக்கப்படும்" என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் பதிலடி

ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி தராமல் இருக்குமா என்ன?

Fars செய்தி நிறுவனத்தின் வழியாக, ஈரானின் இராணுவ செயல்பாட்டுக் கட்டளை அதிகாரி கதம் அல்-அன்பியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,"ஈரானின் எரிபெருள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் எதிரிகளால் தாக்கப்பட்டால் இந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் அனைத்து எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், உப்புநீக்கம் ஆகிய கட்டமைப்புகள் குறி வைக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இந்தப் போரினால் உலகளவில் எரிசக்தி கட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இவர்கள் கூறியுள்ளது எல்லாம் நடந்தால் நிலைமை மிகவும் மோசமடையும்.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

இஸ்ரேல் அணு ஆராய்ச்சி மையம் இருக்கும் நகரில் ஈரான் ஏவுகணை தாக்குதல்; 47 பேர் காயம்!

ஈரானுடன் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்கா இந்த போரில் முடிக்கவேண்டிய வேலைகளை முடிக்கும் தருவாயில் இருப்பதாகவும், வ... மேலும் பார்க்க

ஈரானின் 'இந்த' ஏவுகணை லண்டன், பாரிஸ் வரை கூட செல்லும்; உலகத்திற்கே ஆபத்து - இஸ்ரேல் எச்சரிக்கை

அமெரிக்கா, இஸ்ரேல் தங்கள் மீது தாக்குதல் தொடுக்க, ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி கொண்டே தான் இருக்கிறது.தற்போது இஸ்ரேலின் டிமோனா நகரத்தை ஈரான் தாக்கியுள்ளது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற... மேலும் பார்க்க

'100 பேருக்கு இலவச கல்வி; வீடு தேடி ரேஷன்' - ஆர்.கே.நகர் தவெக வேட்பாளரின் 'அடேங்கப்பா' வாக்குறுதிகள்

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சத்யபாமா கல்வி குழுமத்தைச் சேர்ந்த மரிய வில்சன் போட்டியிடுகிறார். இந்நிலையில், தொகுதியில் தேர்தல் பணிமனை அலுவலகம் திறக்கும் விழாவும் பொதுக்கூட்டமும் நடந்திர... மேலும் பார்க்க

"திருமா அண்ணன் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும்தான் வரவில்லை" - திமுக கூட்டணியைச் சீண்டிய ஆதவ் அர்ஜுனா

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மரிய வில்சன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து தவெக சார்பில் தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா... மேலும் பார்க்க

கரூரில் 'ஜனநாயகன்' பட ஷூட்டிங் நடத்தினோமா? - ஆதவ் அர்ஜுனா விளக்கம்

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மரிய வில்சன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து தவெக சார்பில் தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா... மேலும் பார்க்க

தேர்தல் விதியை மீறி பரிசுப்பொருள்: வேலூர் மேயருக்கு போலீஸ் சம்மன்; திமுக எம்எல்ஏ-வும் சிக்குகிறாரா?

வேலூர் சத்துவாச்சாரியில், கடந்த 19-ம் தேதி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரிசுப்பொருள் வழங்கியதாக, வேலூர் மாநகராட்சி தி.மு.க மேயர் சுஜாதா உள்ளிட்ட மூன்று பேர் மீது `பி.என்.எஸ் 173 - தேர்தல்கள் தொடர்பான... மேலும் பார்க்க