செய்திகள் :

ஈரானின் 'இந்த' ஏவுகணை லண்டன், பாரிஸ் வரை கூட செல்லும்; உலகத்திற்கே ஆபத்து - இஸ்ரேல் எச்சரிக்கை

post image

அமெரிக்கா, இஸ்ரேல் தங்கள் மீது தாக்குதல் தொடுக்க, ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி கொண்டே தான் இருக்கிறது.

தற்போது இஸ்ரேலின் டிமோனா நகரத்தை ஈரான் தாக்கியுள்ளது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

ஏன் இவ்வளவு பரபரப்பு?

டிமோனாவில் தான் இஸ்ரேல் வெளியில் சொல்லாத அணு ஆயுதத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த நகரம் இஸ்ரேலின் இதயம் என்று அழைக்கப்படுகிறது.

இப்படியான இஸ்ரேலின் முக்கிய நகரத்தைத் தான் ஈரான் தற்போது தாக்கியுள்ளது.

இந்த நகரத்தைத் தாக்கிய ஏவுகணைகளை இஸ்ரேலின் தடுப்பு கட்டமைப்புகளால் கூட தடுக்க முடியவில்லை என்று அறிக்கைகள் கூறுகின்றன.

முக்கியமாக,‌ இந்தத் தாக்குதலுக்கு ஈரான் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி உள்ளது.

ஈரான் போர்
ஈரான் போர்

இஸ்ரேல் என்ன சொல்கிறது?

இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறை தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...

"ஈரானிய தீவிரவாத ஆட்சி நீண்ட தூர ஏவுகணையை ஏவுவது இதுவே முதல்முறை. இந்த ஏவுகணை கிட்டத்தட்ட 4,000 கிலோ மீட்டர்கள் வரை சென்று தாக்கும்.

2025-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்த ஆபரேஷன் ரைஸிங் லயனின் போதே, ஈரான் இப்படியான ஏவுகணையைத் தயாரிக்கும் திட்டம் வைத்துள்ளது என்பதை நாங்கள் தெரிவித்தோம். இது ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா நாடுகளுக்கு அபாயம் என்றும் கூறினோம். ஆனால், இதை ஈரான் மறுத்தது.

ஈரானிய தீவிரவாத ஆட்சி உலகத்திற்கே ஆபத்து என்று நாங்கள் தொடர்ந்து சொல்லி கொண்டிருக்கிறோம்.

இந்த ஏவுகணைகள் லண்டன், பாரிஸ், பெர்லின் வரை செல்லும்.

ஈரானிய தீவிரவாத ஆட்சி இதுவரை அந்தப் பிராந்தியத்தில் உள்ள 12 நாடுகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், அவர்களது எல்லைக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய திறனையும் வளர்த்து வருகிறது".

எரிபொருள் விலையேற்றம்: 'டிக்கெட் கட்டணங்களுக்கு லிமிட் இல்லை' - விமானப் பயணம் செய்பவர்கள் கவனம்!

கடந்த டிசம்பர் மாதம், இண்டிகோ விமான நிறுவனம் விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் பற்றாக்குறையினால் கடுமையாக பாதிக்கப்பட்டது.இதனால், பல இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.இண்டிகோ நிறுவனத்தின் இந்தப்... மேலும் பார்க்க

இஸ்ரேல் அணு ஆராய்ச்சி மையம் இருக்கும் நகரில் ஈரான் ஏவுகணை தாக்குதல்; 47 பேர் காயம்!

ஈரானுடன் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்கா இந்த போரில் முடிக்கவேண்டிய வேலைகளை முடிக்கும் தருவாயில் இருப்பதாகவும், வ... மேலும் பார்க்க

'48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை' மிரட்டும் ட்ரம்ப்; 'என்ன செய்வோம் தெரியுமா?' சீறும் ஈரான்

ஈரான் போர் முடிவதாகவே தெரியவில்லை.அமெரிக்காவும், இஸ்ரேலும் மிரட்ட, பதிலுக்கு ஈரான் மிரட்ட என்று பிரச்னை பெரிதாகி கொண்டே போகிறது.நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு தனது ட்ரூத் பக்கத்தில் புதிய எச... மேலும் பார்க்க

'100 பேருக்கு இலவச கல்வி; வீடு தேடி ரேஷன்' - ஆர்.கே.நகர் தவெக வேட்பாளரின் 'அடேங்கப்பா' வாக்குறுதிகள்

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சத்யபாமா கல்வி குழுமத்தைச் சேர்ந்த மரிய வில்சன் போட்டியிடுகிறார். இந்நிலையில், தொகுதியில் தேர்தல் பணிமனை அலுவலகம் திறக்கும் விழாவும் பொதுக்கூட்டமும் நடந்திர... மேலும் பார்க்க

"திருமா அண்ணன் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும்தான் வரவில்லை" - திமுக கூட்டணியைச் சீண்டிய ஆதவ் அர்ஜுனா

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மரிய வில்சன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து தவெக சார்பில் தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா... மேலும் பார்க்க

கரூரில் 'ஜனநாயகன்' பட ஷூட்டிங் நடத்தினோமா? - ஆதவ் அர்ஜுனா விளக்கம்

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மரிய வில்சன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து தவெக சார்பில் தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா... மேலும் பார்க்க