செய்திகள் :

`600 -700 ஆண்களாலும் விலங்குகளை வைத்தும் வன்கொடுமை..' - பிரிட்டனை உலுக்கிய பாகிஸ்தானிய கும்பல்

post image

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. ரூபர்ட் லோவ் வெளியிட்டுள்ள ஒரு `பாலியல் கூட்டு வன்கொடுமை அறிக்கை' ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பிரிட்டனில் உள்ள டெல்ஃபோர்ட் நகரில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பாலியல் குற்ற கும்பல் அங்கிருந்த இளம் பெண்களை மிகக் கொடூரமான முறையில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் ஆதாரங்களுடன் பேசியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்களை அவர் வாசித்தபோது, அங்கிருந்த ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாயடைத்துப் போயினர்.

பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்கள் பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்குபவையாக உள்ளன. ஒரு பெண் தனது வாக்குமூலத்தில், "நான் சுமார் 600 முதல் 700 ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன், அதுமட்டுமல்லாமல் விலங்குகளை வைத்தும் அவர்கள் என்னை வன்கொடுமை செய்தனர்" என்று குறிப்பிட்டிருந்ததை அவர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

மேலும் பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த இத்தகைய மிக மோசமான பாலியல் கொடுமைகளையும், சித்திரவதைகளையும் தங்களின் வாக்குமூலங்களில் கண்ணீருடன் பதிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையிடமும், உள்ளூர் அதிகாரிகளிடமும் முறையிட்டும் எந்த ஒரு பயனும் கிடைக்கவில்லை என்பதாகும்.

இவ்வளவு பெரிய குற்றங்கள் நடந்தும், இனப் பிரச்னை அல்லது மதப் பிரச்சனை வந்துவிடுமோ என்ற அச்சத்தினால் பிரிட்டன் அதிகாரிகள் மற்றும் போலீசார் இந்தக் குற்ற கும்பல் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயன்றுள்ளதாக எம்.பி. ரூபர்ட் லோவ் குற்றம் சாட்டியுள்ளார்.

இனமோ மதமோ குற்றவாளிகளுக்கு பாதுகாப்பாக இருக்கக் கூடாது என்று ஆவேசமாகப் பேசிய எம்பி ரூபர்ட் லோவ், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முறையான நீதி வழங்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் மனித உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்துப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

டெல்லி: உணவகத்தில் தீ விபத்து; 20 பேர் உயிரிழப்பு; பின்னணி என்ன?

டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தற்போது வரை 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இன்று (ஜூன் 3) கா... மேலும் பார்க்க

விஜய்யுடன் தனிப் பாதுகாவலர்: "காவல்துறையினரின் பாதுகாப்பு மீது நம்பிக்கை இல்லையா?" - இன்பதுரை கேள்வி

தவெக தலைவர் விஜய் முதல்வராவதற்கு முன்பு இருந்தே அவரின் பாதுகாவலராக நயீம் முசா என்பவர் இருந்து வருகிறார். தற்போது விஜய் முதல்வரான பிறகும் அவரே பாதுகாப்பு பணியில் இருந்து வருகிறார். சமீபத்தில் முதல்வர் ... மேலும் பார்க்க

டெல்லி கொடுத்த முக்கியத்துவம்! பாஜகவில் நீடிப்பாரா அண்ணாமலை? - தொடரும் இழுபறி!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் நீடிப்பாரா அல்லது விலகுவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் அனலைக் கிளப்பியுள்ளது. தனது அதிருப்தி காரணமாக டெல்லியில் முகாமிட்டுள்ள அவர், உள்துறை ... மேலும் பார்க்க

`காலதாமதம் இருக்கும்தான், அதுக்காக இவ்வளவா?' - 39 வயதில் எழுதிய தேர்வு; 60 வயதில் வந்த அரசு வேலை!

தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும், தகுதியானவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்குவதிலும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலதாமதம் செய்வதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. அதே சமயம், கேரளாவில் இள... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: திமுக கள ஆய்வில் அடுக்கடுக்கான புகார் - மாவட்டச் செயலாளருக்குச் சிக்கல்?

தி.மு.க திருப்பத்தூர் மாவட்டச் செயலாளராக இருப்பவர் க.தேவராஜி. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, ஜோலார்பேட்டை தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வான தேவராஜி பலவிதமான சர்ச்சைகளில் சிக்கியதால், நடந்து... மேலும் பார்க்க

குவைத், பஹ்ரைனைத் தாக்கிய ஈரான்; தடுத்து நிறுத்திய ஈரானின் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதா?

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய ஈரான் போரில், கடந்த ஏப்ரல் 8-ம் தேதி முதல் 'தற்காலிக போர் நிறுத்தம்' இருந்து வந்தது. ஆனால், நேற்று குவைத், பஹ்ரைன் போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளின் மீது ஈரான் ஏவுகணை... மேலும் பார்க்க