செய்திகள் :

9 ஆண்களைத் திருமணம் செய்து நகை, பணத்தை கொள்ளையடித்த பெண்; மகாராஷ்டிராவை உலுக்கிய 'கல்யாண மாஃபியா'!

post image

மகாராஷ்டிரா கிராமங்களில் விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு திருமணம் செய்து கொள்ள பெண் கிடைப்பதில்லை. அனைத்து பெண் வீட்டுக்காரர்களும் தங்களது மகள் திருமணம் செய்து கொள்ளப்போகும் மணமகன் அரசு வேலை அல்லது நகரத்தில் நல்ல ஒரு கம்பெனியில் வேலையில் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றனர்.

இதனால் விவசாயிகளுக்கு திருமணம் செய்ய பெண் கிடைப்பதில்லை. இதைப் பயன்படுத்தி திருமண புரோக்கர்கள் ஆண்களிடம் திருமணத்திற்கு பெண் பார்த்து கொடுப்பதாகக் கூறி பல லட்சங்களைப் பறித்துவிடுகின்றனர்.

இதுபோன்ற ஆண்களை திருமணம் செய்து ஒரு பெண் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உமாபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் கெய்க்வாட் என்ற வாலிபர் சமீபத்தில் புரோக்கர்கள் ஏற்பாட்டில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தார்.

இதற்காக புரோக்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்திருந்தார்.

ஆனால் திருமணமான சில மாதங்களில் மணப்பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. திடீரென அப்பெண் தனது கணவர் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சஞ்சய் இது குறித்து போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் அப்பெண் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அப்பெண்ணிடம் விசாரித்த போது அவர் ஏற்கனவே மேலும் 8 ஆண்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு தலைமறைவானது தெரிய வந்தது.

அப்பெண்ணோடு சேர்ந்து ஏராளமான திருமண புரோக்கர்களும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களையும் போலீஸார் தேடி வருகின்ற்னர்.

சிறுமிக்குப் பாலியல் தொல்லை - தவெக ஆதரவாளர் பாம்பு தினேஷ் கைது!

சென்னை காசிமேடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சிறுமி ஒருவர் சில தினங்களுக்கு முன்பு வந்திருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்கிற பாம்பு தினேஷ் என்பவர் சிறுமியுடன் அன்பாக பேசி பழகி வந... மேலும் பார்க்க

நெல்லை: கூடுதல் வரதட்சணை கேட்டு தகராறு; தற்கொலை செய்த அக்கா... அக்காள் கணவரை கொலைசெய்த தம்பி!

நெல்லை மாவட்டம், களக்காடு அருகிலுள்ள கடம்போடு வாழ்வு கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் மனைவி ராஜலெட்சுமி. தம்பதியினர் நெல்லையில் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. ராஜலெட்சுமி, தனியார் ... மேலும் பார்க்க

டெல்லி: மணிக்கணக்கில் மனைவியுடன் சண்டை; இளம் நீதிபதி தூக்குப்போட்டு தற்கொலை; என்ன நடந்தது?

டெல்லி தெற்கு பகுதியில் உள்ள கிரீன் பார்க் வீட்டில் அமன்குமார் சர்மா(30) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இவர் வடகிழக்கு டெல்லியில் உள்ள கர்கர்தூமா கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். சர்... மேலும் பார்க்க

கிரிக்கெட் மட்டை, கையுறையில் மறைத்து ரூ.1,700 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்; மடக்கிய NCB!

உலகம் முழுவதும் இருந்து மும்பைக்குள் அதிக அளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுகிறது. மும்பையில் கலம்பொலி மற்றும் பிவண்டி இடையே வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப்பொருள், குடோன்களில் பதுக்கி வைக்... மேலும் பார்க்க

4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; கல்லால் அடித்துக் கொலை... சாணத்தில் உடலை புதைத்த 65 வயது முதியவர்!

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் உள்ள நஷ்வராபூர் என்ற கிராமத்தில் வசிக்கும் தனது தாத்தா வீட்டிற்கு 4 வயது சிறுமி ஒருவர் வந்திருந்தாள். விடுமுறைக்காக வந்திருந்த அச்சிறுமி வெளியில் விளையாடச் சென்ற போது... மேலும் பார்க்க

அண்ணனையும் தாயையும் கொன்று சாணக் குழியில் புதைத்த கொடூரம்; ஆட்டோ டிரைவர் சொன்ன தகவலால் சிக்கிய தம்பி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பச்சடி கிராமத்தில், ரெஜி (54), அவரது தம்பி சஜி (43) பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாய் மேரி (71) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். வழக்கமாக வீட்டு வேலைகளையும், விளைபொரு... மேலும் பார்க்க