செய்திகள் :

96 Rerelease: `சேராத காதலுக்குத்தான் ஆயுள் அதிகம்’ - சொல்லப்படாத முதல் காதல் ஏன் மனதைத் தொடுகிறது?

post image

2018-ல் வெளியாகி தமிழ் சினிமாவில் ஒரு நவீன காவியமாக மாறிய ’96’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. பல ஆண்டுகள் கடந்தும் அத்திரைப்படம் ரசிகர்களின் மனதில் இன்றும் அழியாத நினைவாக நிலைத்து நிற்கிறது.

சொல்லப்படாத காதலும், காலத்தின் வழியே உறைந்த நினைவுகளும்

தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் கதைகள் வந்திருக்கின்றன; ஆனால், ’96’ ஏற்படுத்திய தாக்கம் முற்றிலும் தனித்துவமானது. வெறும் கதையாகவோ அல்லது சினிமாவாகவோ நின்றுவிடாமல், திரையரங்கில் அமர்ந்திருந்த ஒவ்வொருவரின் பள்ளிப்பருவ நாட்களையும், அந்த நாட்களின் சொல்லத் தயங்கிய முதல் காதலையும் நினைவூட்டிய ஓர் உணர்வுப் பயணம் அது.

 '96' படம்
'96' படம்

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பிறந்த கதை

இயக்குநர் சி. பிரேம் குமார் இந்தப் படத்தை உருவாக்கியதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான உண்மை உண்டு. பிரேம் குமாரால் தன்னுடைய சொந்த பள்ளி நண்பர்கள் மறுசந்திப்பில் கலந்துகொள்ள முடியவில்லை. பின்னர் அந்தச் சந்திப்பின் காணொளியைப் பார்த்து, நண்பர்களிடம் பேசியபோது எழுந்த நினைவுகளின் தாக்கமே ராம் - ஜானுவின் கதைக்கான விதையாக அமைந்தது.

2015 டிசம்பர் சென்னை பெருவெள்ளத்தின்போது, மின்சாரம் இல்லாமல் தனது வீட்டில் தனிமையில் இருந்த பிரேம் குமார், 20 நாட்களில் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும் குத்துவிளக்கு ஒளியிலும் இந்தப் படத்தின் முதல் வரைவை எழுதி முடித்தார்.

திரைப்படத்தின் ஆன்மா

`சேராத காதலுக்குத்தான் ஆயுள் அதிகம்’ என்ற வரியை சொன்ன படம். ஒருவரை ஒருவர் தொட்டு அணைத்துக் கொள்ளாமலேயே, விரல் நுனியின் தீண்டலும் கண்களின் மெளனமுமே மிகப்பெரிய காதலை உணர்த்த முடியும் என்பதற்கு இப்படம் சாட்சி.

22 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும்போது, ஜானு திருமணமானவள் என்பதை உணர்ந்து ராம் காட்டும் பக்குவமும், தங்களுக்குள் இருந்த காதலை நினைவுகளால் மட்டுமே வருடிப் பார்க்கும் அந்த ஓர் இரவின் பயணமும் காதலுக்குரிய உச்சகட்ட கண்ணியம்.

விடியற்காலை விமான நிலையத்திற்குச் செல்லும் முன், ஜானு ராமின் ஆடைகளை மடித்து வைத்து, தனது துப்பட்டாவை அவனுக்காக விட்டுச் செல்லும் அந்தக் காட்சி, பார்க்கும் எவரையும் உருக வைத்துவிடும்.

 '96' படம்
96'

வயலின் வழியே பேசிய உணர்வுகள்

’96’ திரைப்படத்தின் உயிரோட்டமே அதன் இசைதான். ஒரு காதல் படத்தில் வசனங்கள் சொல்ல முடியாத பல விஷயங்களை மெளனம் பேசும்; ஆனால் ’96’-ல் அந்த மெளனத்திற்கு மொழியாக அமைந்தது கோவிந்த் வசந்தாவின் வயலினும் இசையமைப்பும் மட்டுமே.

ஒரு மனிதனின் தொண்டைக்குள் தேங்கி நிற்கும் அழுகையையோ, வெளிப்படுத்த முடியாத காதலையோ ஒரு வயலின் நரம்பால் எந்த அளவிற்கு வெளிக்கொணர முடியுமோ, அந்த அளவிற்கு இப்படத்தில் பயன்படுத்தியிருப்பார்.

22 வருடங்களுக்குப் பிறகு ராமும் ஜானுவும் பள்ளி வளாகத்தில் முதன்முதலில் சந்திக்கும் காட்சியில், எந்த ஆர்ப்பாட்டமான இசையும் இருக்காது; மெல்லிய ஒரு வயலின் இழுவை மட்டுமே அவர்களின் இதயத் துடிப்பைப் பார்வையாளர்களுக்குக் கடத்தும்.

காட்சிகளில் நடிகர்கள் அமைதியாக இருக்கும் இடங்களில் எல்லாம், கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை அவர்களின் மனசாட்சியாக மாறி உரையாடியது.

 '96' படம்
'96' படம்

திரையில் ஜானுவாக நடித்த திரிஷாவுக்குப் பின்னணிக் குரல் கொடுத்ததும் சின்மயிதான்; அந்தப் பாத்திரத்திற்கான பாடல்களைப் பாடியதும் அவரே. இதனால் பாடலுக்கும் வசனங்களுக்குமான இடைவெளி மறைந்து, ஜானுவின் அடிமனதின் குரலாகவே இசை உருமாறியது. குறிப்பாக ‘யமுனை ஆற்றிலே’ பாடலை ஜானு பாடும் தருணமும், ‘காதலே காதலே’ பிட் சாங்கும் காதலின் உச்சகட்ட ஏக்கத்தை வெளிப்படுத்தின.

ஒரு திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்த பின்னரும் அதே தாக்கத்தை ஏற்படுத்துவதற்குக் காரணம், அது பார்வையாளர்களைத் தங்களின் சொந்த நினைவுகளோடு இணைக்க வைப்பதுதான்.

பள்ளி வகுப்பறை, சைக்கிள் சவாரி, சாக்பீஸ் துகள்கள், இளையராஜாவின் பாடல்கள் என 90-களின் நினைவுகளைத் தட்டி எழுப்பிய '96', எப்போது பார்த்தாலும் நெஞ்சில் ஒரு மெல்லிய பாரத்தையும், இனிய புன்னகையையும் ஒருசேர வரவழைக்கும் காலத்தால் அழியாத படைப்பு.

அரசு ஓடிடி: நெட்பிளிக்ஸ், அமேசான் நிறுவனங்களுடன் போட்டியிட முடியுமா? சவால்கள் என்னென்ன?- ஒரு பார்வை!

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்​பாளர்​கள் சங்​கத்​தின் 6-வது ஆண்டு பொதுக்​குழுக் கூட்​டம் நடை​பெற்​றது. இந்த நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்​தின​ராகக் கலந்து கொண்​டு பேசியபோது, “சினிம... மேலும் பார்க்க

PVR: `எப்போ படத்தை போடுவீங்க?' - 17 நிமிட விளம்பரம்: ரூ.75,000 அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்!

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல திரையரங்கு ஒன்று (PVR), படத்தின் தொடக்கத்தில் 22 நிமிடங்கள் வரை வர்த்தக விளம்பரங்கள் மற்றும் விளம்பரப் படங்களைத் திரையிட்டு காலதாமதம் செய்ததற்காக, ரூ. 75,000 வழங்க வேண்டும்... மேலும் பார்க்க

'நாங்கள் பணிய மாட்டோம்' - `பாகுபலி’ பட காட்சியைப் பகிர்ந்த ஈரான் தூதரகம்! - பின்னணி என்ன?

உலக அரசியல் மேடைகளிலும் தூதரக தகவல் தொடர்புகளிலும் பொதுவாகக் கடுமையான அறிக்கைகளும் மரபுசார்ந்த வார்த்தைகளுமே பயன்படுத்தப்படும். ஆனால், ஆந்திரா, தெலங்கானாவுக்குப் பொறுப்பான ஹைதராபாத் ஈரான் தூதரகம், சர்... மேலும் பார்க்க

"தென்னிந்தியத் திரைப்படங்களை உலகளவில் சந்தைப்படுத்துவோம்"- திரைப்பட அகாடமி தலைவர் டிஸ்கோ ரவீந்திரன்!

பிரபல நடிகரும் சர்வதேசத் திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளருமான ரவீந்திரனை, மாநிலத் திரைப்பட அகாடமியின் புதிய தலைவராக கேரள அரசு நியமித்துள்ளது. 1980-களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ... மேலும் பார்க்க

``அம்பிகா இப்படியெல்லாம் பொறாமைப்பட்டால் நான் என்ன செய்வது?" - வெடித்து பேசும் நடிகை ராதா

1980-களில் தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த அம்பிகா - ராதா சகோதரிகள், அண்மைக்காலமாக சொத்து விவகாரத்தில், ஒருவரையொருவர் குற்றம்சாட்டி மாறி மாறி புகார் அளித்துவருவது திரையுலகைத் தாண்டி... மேலும் பார்க்க

₹2,500 கீபோர்டில் முளைத்த `இசை' கனவு... ஹிப் ஹாப் ஆதியின் பாராட்டு - சினிமாவை நோக்கி நகரும் விக்கி!

2015-ல் தொடங்கிய இசைப் பயணம்... ‘என் உயிர் அன்பே’, ‘மனசை ஏன்டி நொறுக்குற’, ‘மை லைஃப் ஃபுல் டேமேஜ்’ எனத் தொடர்ந்து, இன்று சினிமாவை நோக்கி நகரும் விக்கி (Vicky).₹2,500-க்கு நண்பர் வாங்கிக் கொடுத்த ஒரு க... மேலும் பார்க்க