செய்திகள் :

ADMK: அதிமுக கூட்டணியில் ஐக்கியமான `அன்புமணி' பாமக - டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி!

post image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசில் களம் சூடுபிடித்திருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி பா.ம.க-வும் அங்கம் வகித்தது. ஆனால், இந்த முறை பா.ம.க-விலும் அப்பா - மகன் பிரச்னை இருப்பதால், இருவரும் இணைந்து கூட்டணிக்கு வருவார்களா என்றக் கேள்வி இருந்தது.

அதையும் கடந்து இரண்டு குழுவாக பிரிந்திருக்கும் பா.ம.க-வுக்கு என்.டி.ஏ கூட்டணி எந்தளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள்? யாருக்கு ஆதரவு கொடுப்பார்கள்? என்ற தெளிவின்மையும் இருந்தது. இந்த நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமியை பா.ம.க தலைவர் அன்புமணி நேரில் சந்தித்து அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி பேட்டி
எடப்பாடி பழனிசாமி

அன்புமணி தொடக்கத்திலிருந்தே தீவிர திமுக எதிர்ப்பு என்ற தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். ஆரம்பத்திலிருந்தே அதைநோக்கியே காய் நகர்த்திக்கொண்டிருந்தார். 2016-ம் ஆண்டு `மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என பா.ம.க அன்புமணியை முன்னிறுத்தி களம் கண்டபோதே, ஸ்டாலினுக்கு எதிர்ப்புள்ளியாகதான் அன்புமணி உருவாக்கப்பட்டார்.

அன்புமணிக்கு கிடைத்த வாக்குகள் எல்லாம் ஸ்டாலின் எதிர்ப்பு வாக்குகள் என்றே தேர்தல் களத்தைக் கட்டமைத்தனர். அந்த அடிப்படையில், அன்புமணி தி.மு.க-வுக்கு எதிரானவர் என்ற பிம்பத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார். அதன் அடிப்படையில்தான் தற்போது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, கூட்டணியை உறுதிப்படுத்தியிருக்கிறார். மேலும், இந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தையை அன்புமணி பா.ஜ.க-விடமிருந்து தொடங்காமல் அ.தி.மு.க-விடம் நேரடியாக பேசியிருக்கிறார். இதன் மூலம் அதிமுக-வுக்கு பா.ம.க கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறது என்ற கருத்தும் எழுந்திருக்கிறது.

அன்புமணி
அன்புமணி

அன்புமணியை சந்தித்தப் பிறகு, அன்புமணியுடன் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ``வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி ஏற்கெனவே முடிவாகிவிட்டது. இப்போது எங்களுடன் பா.ம.க இணைந்திருக்கிறது. மேலும் சில கட்சிகள் விரைவில் எங்கள் கூட்டணியில் சேர்வார்கள். எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி. எங்கள் தொண்டர்கள், பா.ம.க தொண்டர்கள் விரும்பியவாறு இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டணி தீய திமுக-வை ஆட்சியிலிருந்து நீக்கி, மக்களுக்கான ஆட்சி அமைய தீவிரமாக உழைக்கும். 234 தொகுதியிலும் எங்கள் கூட்டணி வெற்றிபெறும். எங்கள் கூட்டணியில் தொகுதியின் எண்ணிக்கை முடிவு செய்துவிட்டோம். விரைவில் அறிவிப்போம்." என்றார்.

தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணி!

தொடர்ந்து பேசிய அன்புமணி, "இன்று அதிமுக தலைமையிலான கூட்டணியில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க இணைந்திருக்கிறது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான ஒரு தருணம். எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியில் நாங்கள் சேர்ந்திருக்கின்றோம். மக்கள் விரோத, ஊழல் செய்கின்ற, பெண்களுக்கு எதிரான, சமூக நீதிக்கு எதிரான, அரசு ஊழியர்கள், மீனவர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், அத்தனை உழைக்கின்ற வர்க்கத்திற்கு எதிரான ஒரு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்திலே இந்தக் கூட்டணையில் இணைந்திருக்கின்றோம். மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பார்க்கிறோம். சமீபத்தில் கூட 100 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட பொழுது, கிராமத்திலிருந்து நகரம் வரை தி.மு.க மீது மக்கள் மிகுந்த கோபத்தில், ஆத்திரத்தில் இருக்கின்றார்கள். தேர்தல் எப்போது வரும் எனக் காத்திருக்கிறார்கள். உறுதியாக எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று, அ.தி.மு.க ஆட்சி அமைக்கும்." என்றார்,

இதனிடையே இன்று மாலை எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

49-வது புத்தகக் காட்சி: `எழுத்துக்களைப் படிக்க படிக்க எண்ணங்கள் மலரும்..!' - முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 49-வது புத்தகக் காட்சியை, Ymca மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை (08-01-2026) தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், ``அறிவு சங்கமத்தை, அறிவு திருவிழாவை தொடங்கி வைப்பதில் மிகு... மேலும் பார்க்க

'மத்திய அரசாங்கத்தின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை; அது வேண்டாத அரசாங்கம்' - அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சித்தையன் கோட்டை பேரூராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வ... மேலும் பார்க்க

`நாளை எடப்பாடியை சந்திக்கிறேன்; எங்கள் கூட்டணியில் எந்த நெருக்கடியும் கிடையாது'- நயினார் நாகேந்திரன்

புதுக்கோட்டை மாவட்டம், கல்லாலங்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,"நாளை எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கப் போகிறேன். ஏற்கெனவே, பா.ம.க கூட்டணியில் வந்துள்ள... மேலும் பார்க்க

`வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது' - வேதாந்தா குழும தலைவரின் மகன் மரணம் - யார் இந்த அக்னிவேஷ்?

வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் மகன் அக்னிவேஷ் அகர்வால் காலமாகியிருக்கிறார். வேதாந்தா குழுமம் இந்தியா மட்டுமன்றி பல நாடுகளிலும் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டின் தூத்துக்குடியில... மேலும் பார்க்க

சோதனையின்போது உள்ளே நுழைந்த மம்தா; ஆவணங்களைக் கைப்பற்றியதாக குற்றம்சாட்டும் ED - நடந்தது என்ன?

அரசியல் ஆலோசனை & தேர்தல் யுக்திகளை வகுக்கும் நிறுவனமான ‘ஐ-பேக்’ I-PAC கொல்கத்தா அலுவலகம் மற்றும் அதன் இணை நிறுவனர் பிரதிக் ஜெயினின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை இன்று (ஜன. 8) சோதனை நடத்தியிர... மேலும் பார்க்க