ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திம...
Anand Mahindra: `வரலாற்றை மாற்றிய ஒரு வாக்கு' - ஆனந்த் மஹிந்திரா வியந்த திருப்பத்தூர் தேர்தல் களம்!
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான போட்டி நிலவியது. தமிழகத்தின் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த தி.மு.க-வின் மூத்த நிர்வாகி கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் ஸ்ரீனிவாச சேதுபதி ஆகியோருக்கு இடையே நேரடி மோதல் உருவானது.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர். கடைசி நிமிடம் வரை நீடித்த இந்த "துப்பாக்கிச் சண்டை" போன்ற போட்டியில், இறுதி முடிவுகள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
The results of the recent state elections have been dramatic by any measure.
— anand mahindra (@anandmahindra) May 6, 2026
But for me, this image will remain the most unforgettable outcome of the elections.
More than 166,000 votes were cast between the two leading candidates in this constituency in Tamil Nadu.
And history… pic.twitter.com/85UtN3VkZC
தவெக வேட்பாளர் ஸ்ரீனிவாச சேதுபதி 83,375 வாக்குகளும், திமுக-வின் கே.ஆர்.பெரியகருப்பன் 83,374 வாக்குகளும் பெற்றிருந்தனர். அதாவது வெறும் 1 வாக்கு வித்தியாசத்தில் ஸ்ரீனிவாச சேதுபதி வெற்றி பெற்று, மாபெரும் கட்சியின் அமைச்சரை வீழ்த்தினார்.
இந்தத் தேர்தல் முடிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, ஜனநாயகத்தில் தனிமனிதனின் வாக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``இந்தத் தேர்தல் முடிவுகளில் எத்தனையோ திருப்பங்கள் இருந்தாலும், திருப்பத்தூர் தொகுதியின் இந்த முடிவுதான் எனது நினைவில் என்றும் நீங்காமல் இருக்கும். 1.66 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவான ஒரு இடத்தில், ஒரே ஒரு வாக்கு வரலாற்றையே மாற்றியமைத்திருக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் வளரும்போது, தன்னிடம் உள்ள மிகப்பெரிய அதிகாரம் 'The Power of One' வாக்கு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் ஒரு வாக்கிற்கு எவ்வளவு வலிமை இருக்கிறது என்பதற்கு இந்தத் தேர்தல் முடிவே சிறந்த உதாரணம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அவரின் பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

















