செய்திகள் :

Arasan: வெற்றிமாறன் + விஜய் சேதுபதி கூட்டணி - அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

post image

வெற்றிமாறன் - சிலம்பரசன் கூட்டணியின் 'அரசன்' படத்தின் முன்னோட்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து ரசிகர்களிடம் படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த 'மாஸ்க்' பட விழாவில் ''வரும் 24ம் 'அரசன்' படப்பிடிப்பு தொடங்குகிறது'' என இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்துவிட்டதில் சிம்புவின் வட்டாரம் பெரும் மகிழ்ச்சியில் திளைக்கிறது.

படத்தின் தொழில்நுட்ப டீம் முடிவாகிவிட்டனர். வெற்றியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் இணைந்திருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். சமுத்திரகனி, கிஷோர் என தேர்ந்த நடிகர்கள் பலரும் உள்ளனர். தாணுவின் தயாரிப்பில் உருவாகும் இப்படம் வடசென்னையைக் கதைக்களமாகக் கொண்டது.

படத்தின் நாயகியாக இருவர் பரிசீலனையில் உள்ளனர். ஒருவர் சமந்தா, இன்னொருவர் ஹோம்லி ஹீரோயின் எனப் பெயரெடுத்தவர். இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் ஹீரோயின் என்ட்ரி ஆகிவிடுவார் என்கின்றனர். இது தவிர, பான் இந்தியா வில்லன் ஒருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தன் எக்ஸ் பக்கத்தில் `மனிதம் இணைகிறது மகத்துவம் தெரிகிறது' எனக் குறிப்பிட்டு இந்தப் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு வடசென்னை படத்தின் ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக வந்திருக்கிறது.

AK64: `பொறுப்போடு இந்தப் படத்தில் பணியாற்றி வருகிறேன்’ - அஜித் உடனான அடுத்த படம் குறித்து ஆதிக்

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்தின், அடுத்து 'பகீரா', 'மார்க் ஆண்டனி' ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அஜித்த... மேலும் பார்க்க

"சிவா உங்களுக்கு ஹீரோ ஆசை வேணாம், காமெடி ரோல் போதும்"- சினிஷ், சிவகார்த்திகேயன் ஷேரிங்ஸ்

'பலூன்' படத்தின் இயக்குநர் சினிஷ் தயாரிப்பாளராக அவதாரமெடுத்து தேசிய விருது வென்ற 'பார்க்கிங்' படத்தைத் தயாரித்திருந்தார்.அப்படத்தைத் தொடர்ந்து இன்று அவருடைய தயாரிப்பில் உருவாகும் அடுத்த இரண்டு படங்களு... மேலும் பார்க்க

Nelson: "விருது கிடைச்சா எனக்குதான்னு அக்ரீமெண்ட் போட்டார்" - Parking தயாரிப்பாளர் குறித்து நெல்சன்

'பலூன்' படத்தின் இயக்குநர் சினிஷ் தயாரிப்பாளராக அவதாரமெடுத்து தேசிய விருது வென்ற 'பார்க்கிங்' படத்தைத் தயாரித்திருந்தார்.அப்படத்தைத் தொடர்ந்து இன்று அவருடைய தயாரிப்பில் உருவாகும் அடுத்த இரண்டு படங்களு... மேலும் பார்க்க

'வேட்டை மன்னன்' சமயத்துல 'எதுக்கு உங்களுக்கு இந்த வேலைலாம்'னு..." - சிவகார்த்திகேயன் ஜாலி டாக்

'பலூன்' படத்தின் இயக்குநர் சினீஷ் தயாரிப்பாளராக அவதாரமெடுத்து தேசிய விருது வென்ற 'பார்கிங்' படத்தைத் தயாரித்திருந்தார். அப்படத்தைத் தொடர்ந்து இன்று அவருடைய தயாரிப்பில் உருவாகும் அடுத்த இரண்டு படங்களுக... மேலும் பார்க்க