செய்திகள் :

Arasan: ஸ்லிமான சிலம்பரசன், ஈ.சி.ஆரில் பிரமாண்ட வடசென்னை செட்; மீண்டும் ரெடியாகும் 'அரசன்'- அப்டேட்

post image

வெற்றிமாறன், சிலம்பரசன் கூட்டணியின் 'அரசன்' படப்பிடிப்பு இன்னும் 60 நாள்கள் மட்டுமே மீதம் இருப்பதாகவும், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு இடையே சிலம்பரசன் அடுத்ததொரு கெட்டப்பிற்கு ரெடியாகிறார் என்றும் தகவல்கள் பரவிவருகின்றன. இதற்காக அவர் துபாயில் உடல் எடையை குறைக்கும் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்கிறார்கள்.

சிம்பு, வெற்றிமாறன்

கேங்ஸ்டர்கள் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களை ஈர்த்த படம் 'வடசென்னை'. ஒரு ராவான... ரசனையான... அரசியல் பேசும் கேங்ஸ்டர் படமாக கொண்டாடப்பட்டது. இந்த வடசென்னையின் சீக்குவெல்களில் ஒரு கதையாக 'அரசன்' உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிலம்பரசனுடன் ஆன்ட்ரியா, பிரியங்கா மோகன், சமுத்திரகனி, கிஷோர், விக்ராந்த், யோகிபாபு என பலரும் இருக்கிறார்கள். விஜய் சேதுபதியும் ஒரு முக்கியமான ரோலில் வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

படப்பிடிப்பின் போது

இதுவரை மூன்று ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இளமையான சிம்பு, 45 வயது தோற்றத்தில் உள்ள சிம்பு, மற்றுமொரு அசத்தலான கெட்டப் என சிலம்பரசனுக்கு மூன்று கெட்டப்கள் இருக்கின்றன. படத்தில் சிலம்பரசனின் ஒரு கேரக்டர் பெயர் மதுரை டைகர். மதுரையில் தொடங்கும் கதை, வடசென்னை வரை வருகிறது. மதுரையில் உள்ள ஸ்போர்ட்ஸ் இளைஞன், சென்னைக்கு வருவது ஏன், இங்கே வந்த பின் நடக்கும் அதிரடி சம்பவங்கள்தான் 'அரசன்' கதை ஒன்-லைன் என்றும் சொல்கிறார்கள்.

ராஜன் வகையறா

வெற்றிமாறனின் குட் புக்கில் சிம்புவுக்குத் தனி இடம் கிடைத்திருக்கிறது. படப்பிடிப்புக்குச் சரியான நேரத்தில் வரும் சிலம்பரசன், பட வேலைகள் தவிர, தனது உடல்நலம், கற்றல், எதிர்கால டார்கெட்டுகள் மிது அதிக கவனம் செலுத்தி வருகிறார். மூன்றாவது கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்ததும், அதிலிருந்து ஒரு 60 நிமிட காட்சிகளை எடிட் செய்த வெற்றிமாறன், தயாரிப்பாளர் தாணுவிடம் காண்பித்திருக்கிறார். அவர்களுடன் சிலம்பரசனும் இணைந்து படத்தை பார்த்துள்ளனர். இந்த தகவலை நாம் முன்பு சொல்லியிருந்தோம். சிலம்பரசனின் மூன்று கெட்டப்களில் இதுவரை ஒரு கெட்டப் மட்டுமே ஷூட் செய்யப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்த கெட்டப்புகள் படமாக்கப்பட உள்ளது.

சமுத்திரக்கனி, யோகிபாபு

இதுவரை நடந்த ஷெட்யூல்களில் விஜய்சேதுபதி இணையவில்லை. மூன்றாவது கட்ட படப்பிடிப்பு முடிந்த கையோடு, கிடைத்த பிரேக்கில் துபாய் பறந்திருக்கிறார் சிலம்பரசன். இந்த இடைவெளியில் வெற்றிமாறனும் ரிலாக்ஸ் ஆகவில்லை. கென் கருணாஸை வைத்து அவர் இயக்கி வரும் 'ராஜன் வகையறா' படப்பிடிப்பில் பிசியாகிவிட்டார். இது ஒரு பக்கம் பரபரக்கிறது. கோவில்பட்டியில் நடந்த முதல் ஷெட்யூல் படப்பிடிப்பில் சிலம்பரசனை பார்க்க வந்ததோடு சரி.. இதற்கிடையே துபாயில் ஸ்லிம் ஆகிவிட்டு சென்னை சிலம்பரசன் இன்னும் சில தினங்களில் சென்னை திரும்புகிறார். அவர் வந்ததும் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடர்கின்றனர். இதற்காக கிழக்கு கடற்கரைச் சாலையில் வடசென்னையை செட் போட்டுள்ளனர் என்றும் அங்கே தான் படப்பிடிப்பை தொடர்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். இளமையான சிம்பரசனின் தோற்றம் அடுத்த ஷெட்யூலில் தெரிய வரும். இன்னொரு விஷயத்தையும் சொல்கிறார்கள். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் ரோல் வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே இடம்பெறும் என்றும், மிரட்டலான போலீஸாக அவர் வருகிறார் என்றும் தகவல்.

அன்பே டயானா: "படத்தின் கடைசி 20 நிமிடம், தமிழ் சினிமாவின் பெஸ்ட்டான..!" இயக்குநர் ராம் பாராட்டு

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'அன்பே டயானா'. இந்தப் படத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த ... மேலும் பார்க்க

அன்பே டயானா: "எனது பயணம் 'ஜமா' படத்தில் தொடங்கியது இல்லை, 2013-ல்..!"- பாரி இளவழகன் எமோஷனல்

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'அன்பே டயானா'. இந்தப் படத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த ... மேலும் பார்க்க

இதயம் முரளி: "இது சரியான ரீ என்ட்ரியாக இருக்கும்னு தோணுச்சு" - 'கனா கானும் காலங்கள்' மோனிஷா ஷேரிங்ஸ்

'கனா காணும் காலங்கள்' தொடரின் முதல் சீசனில் சங்கவியாக நடித்து மக்களுக்கு பேவரிட்டானவர் மோனிஷா ரவிஷங்கர். அத்தொடருக்குப் பிறகு தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்துவதற்காக நடிப்பிலிருந்து முழுமையாகவே விலகி... மேலும் பார்க்க

"சர்க்கார் படப்பிடிப்பில் சொன்னதை நினைத்து சிரித்தோம்" - விஜய்யைத் தன் கணவருடன் சந்தித்த வரலட்சுமி

திரைபிரபலங்கள் தொடர்ந்து முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது கணவருடன் முதல்வரைச் சந்திருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்... மேலும் பார்க்க

``விவேக் சார் இருந்திருந்தால் நான் எப்பவோ இயக்குநர் ஆகியிருப்பேன்!" - உருகும் கிளி ராமச்சந்திரன்

நடிகர் விவேக் உடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படத்திற்... மேலும் பார்க்க

"நானும் பகத் பாசிலும் எப்போதும் அதைப் பற்றி பேசுவோம்!" - 'இதயம் முரளி' கேமியோ பற்றி மாளவிகா மோகனன்

'டான் பிக்சர்ஸ்' ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'இதயம் முரளி' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப்... மேலும் பார்க்க