செய்திகள் :

Aravind Aakash: மலேசியாவில் நடைபெற்ற 'சென்னை 28' அரவிந்த் ஆகாஷ் திருமணம்!

post image

'உனக்கும் எனக்கும்', 'சென்னை 28', 'சரோஜா', 'மங்காத்தா' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துத் தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர் அரவிந்த் ஆகாஷ்.

Aravind Aakash
Aravind Aakash

மலையாள சினிமாவில் வெளியான 'நந்தனம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர், அடுத்தடுத்துத் தமிழ், தெலுங்கு எனப் பல மொழி சினிமாக்களிலும், சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு வயது 50.

மல்லுவுட்டிலும் சில ஹிட் திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். இயக்குநர் வெங்கட் பிரபுவின் அனைத்துப் படங்களிலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவிடுவார் அரவிந்த் ஆகாஷ்.

இவருக்கு நேற்றைய தினம் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இவர் சாத்வி என்பவரைத் திருமணம் செய்திருக்கிறார். இந்தத் திருமணம் மலேசியாவிலுள்ள கோலாலம்பூரில் நடைபெற்றிருக்கிறது.

Aravind Aakash Marriage
Aravind Aakash Marriage

அரவிந்த் ஆகாஷின் திரைத்துறை நண்பர்களான வைபவ், வெங்கட் பிரபு, பிரேம்ஜி உள்ளிட்டோர் இந்தத் திருமண நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.

அரவிந்த் ஆகாஷின் திருமணத்திற்குத் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அவருடைய திருமணப் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

"அவர் நிஜமான 'ஜனநாயக'னாக வர வேண்டும் என மக்கள் விரும்பினார்கள்!" - 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் கே.வி.என்

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் நாளை மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த 'பகவந்த் கேசரி' படத்த... மேலும் பார்க்க

``போராடுபவர்களுக்கு லத்திகளும் மௌனமுமே பதிலாய்க் கிடைத்தன" - நடிகை அபிராமி ஆதங்கம்!

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர... மேலும் பார்க்க

"நான் வேலையில்லாமல் வீட்டுல இருக்கேன்; எனக்கு வேலை கொடுங்க" - வடிவுக்கரசி ஆதங்கம்

அர்ஜுன் தாஸ் நடித்திருக்கும் 'கான் சிட்டி' திரைப்படத்தின் 25-வது நாள் விழா இரண்டு நாள்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்பேசிய நடிகை வடிவுக்கரசி, "இந்தப் படத்தில் நடித்திருந்த அனைவரும... மேலும் பார்க்க

National Awards: "விருது அறிவித்த பிறகே Sound Designer-க்குத் தெரிந்தது!" - 'ப்ளூ' இயக்குநர் பேட்டி

2024-ம் ஆண்டுக்கான 72 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவித்ததில் இந்த முறை 10 தேசிய விருதுகளை தமிழ் சினிமா பெற்றிருக்கிறது. அதில் 'ப்ளூ' என்ற குறும்படத்தின் ஒலி வடிவமைப்புக்கு (டி.எஸ்.ஹரிஹரசுதன்) கிடைத... மேலும் பார்க்க

Kajal Aggarwal: ``தென்னிந்திய சினிமாவிலிருந்து பாலிவுட் இதைக் கத்துக்கணும்" - நடிகை காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். பாலிவுட்டில் 'சிங்கம்', 'தோ லஃப்சோன் கி கஹானி' போன்ற படங்கள் மூலம் நல்ல வரவேற்பை... மேலும் பார்க்க

''ஜன நாயகன்' லீக் குறித்து விஜய் ஏன் பேசவில்லை?' - அ. வினோத் அளித்த பதில் என்ன?

அ. வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜன நாயகன்' படம் பல தடைகளுக்குப் பிறகு வரும் ஜூலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் அ. வினோத் செய்தியாளர்கள... மேலும் பார்க்க