'ஒரு முறை உங்களை தொட்டுக் கொள்ளட்டுமா'; அரவணைத்த மோகன்லால் - மூதாட்டி செய்த நெக...
Aval Awards: "என் கனவை அம்மா அனுமதிச்சதுக்கு நன்றி சொன்னா பத்தாது" - சிவகார்த்திகேயன் எமோஷனல்!
விகடனின் அவள் விருதுகள் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் 'பெஸ்ட் மாம்' விருதைப் பெற்றார் நடிகர் சிவகார்த்திகேயனின் அம்மா ராஜி தாஸ். விருது குறித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அம்மாவுக்கு கிடைத்த விருதுபற்றி பேசிய சிவகார்த்திகேயன், "அப்பா இறக்கும்போது நான் ஃபர்ஸ்ட் இயர், அக்கா வந்து காலேஜ் செகண்ட் இயர். அதுக்கப்புறம் எல்லாருக்குமே ரெண்டு கேள்விதான் 'அடுத்து என்ன செய்யப் போறோம் லைஃப்ல'.
அம்மா ஒன்னு மட்டும் தான் சொல்லிட்டே இருப்பாங்க படிச்சிடணும் படிச்சிடணும் நல்லா படிச்சிடணும் அப்படின்னு. சோ படிக்கணும்ங்கறது மட்டும் தான் மைண்ட்ல இருந்துட்டே இருந்துச்சு. ஆனா அதை தாண்டி எனக்கு ஒரு கனவு இருந்தது.
என் கனவுக்கு அம்மா அனுமதிச்சதுக்கு நன்றி சொன்னா பத்தாது. அது கரெக்டா இருந்து அவங்களுக்கு ஏதாவது ஒரு மரியாதை செஞ்சிடனும்னு நினைச்சேன். அது இந்த மாதிரி ஒரு மேடையில இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. தேங்க்யூ விகடன் டீம். அதனாலதான் நான் நன்றி சொல்லணும்னு நினைக்கிறேன்.
நான் அம்மா செல்லம். அப்பாவும் அக்காவும்தான் க்ளோஸ். நமக்கெல்லாம் அப்பான்னா பயம். அம்மாவுடைய குணங்கள்தான் எனக்கு.

அவங்களுக்கு இந்த மாதிரி ஒரு மேடை எவ்வளவு ஸ்பெஷலா இருக்கும்னு எனக்கு தெரியும். மதுரைக்கு பக்கத்துல பிரான்மலைன்னு ஒரு ஒரு கிராமத்துலதான் பிறந்து வளர்ந்தது அவங்க.
அங்க இருந்து வேற வேற ஊர்கள்ல அப்பா கூட இருந்து, அதுக்கப்புறம் இப்ப இங்க சென்னைக்கு வந்து இதெல்லாம் பார்த்துட்டதுக்கு அப்புறம், எனக்கு தெரிஞ்சு அவங்களுக்கு வேற எது எவ்வளவு சந்தோஷம் கொடுத்திருக்கும்னு தெரியல. இந்த விருது அவங்களுக்கு சந்தோஷம் கொடுத்திருக்கும்னு நினைக்கிறேன். இந்த பெயர் ரொம்ப நல்லா இருக்கு, "பெஸ்ட் மாம்" அப்படின்றத, தமிழ்ல சொல்லும்போது ரொம்ப நல்லா இருக்கு, "சிறந்த அம்மா" அப்படின்னு. அம்மான்னாலே சிறந்தவங்க தான். அதுல சிறந்த அம்மான்னும்போது அது ரொம்ப ஸ்பெஷல்." எனப் பேசினார்.












