செய்திகள் :

Ban NEET போராட்டம்: ``அனிதாவின் அண்ணனாகத்தான் தலைமைச் செயலகம் முன்பு நின்றேன்" - பாடகர் அறிவு

post image

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், பா.ரஞ்சித், நடிகர் மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதில் பேசிய பாடகர் அறிவு, ``மாணவர்களுக்குத் தேர்வு, ஆசிரியர் மற்றும் பாடத்திட்டத்தைப் பார்த்துக் குழப்பமும் பயமும் ஏற்படுவது மிக இயல்பானது. இந்த பயத்தைப் போக்குவதற்காகவே பெற்றோர்கள் பள்ளிகளில் கட்டணம் செலுத்துகிறார்கள்.

ban neet protest - Neelam
ban neet protest - Neelam

ஆனால், மதிப்பெண்களுக்காக நடத்தப்படும் தேர்வுகளைப் பார்த்துப் பயந்து, அதை வெளியிலும் சொல்ல முடியாமல் சகித்துக் கொண்டிருந்த ஒரு தலைமுறை, இன்றைக்கு வெடித்து எழுந்து நீட் எதிர்ப்புப் போராட்டமாக உருவெடுத்துள்ளது. சமமாக இல்லாத ஒரு சமூகத்தில் அனைவருக்கும் சமமான தேர்வு என்பது சாத்தியமற்றது. முதல் குழந்தை இறந்தபோதே அரசு எச்சரிக்கையுடன் செயல்பட்டு நீட் தேர்வுக்கு விலக்கு அளித்திருந்தால், நூற்றுக்கணக்கான மாணவர்களை நாம் இழந்திருக்க மாட்டோம்.

அனிதா 10 ஆண்டுகளுக்கு முன்பாக நம்மிடம் எழுப்பிய கேள்விக்கு இன்றைக்கு வரைக்கும் நம்மிடம் பதில் இல்லை. இன்றைக்குப் போராடிக் கொண்டிருக்கும் போராட்டம் அனிதாவின் போராட்டமே. அனிதாவின் அண்ணனாகதான் தலைமைச் செயலகத்தின் முன் போய் நின்றேன். சட்டம், அரசு, அரசியலமைப்பு அனைத்துமே மக்களுக்கானது என்ற அடிப்படை புரிதல் கூட இந்த அரசாங்கத்திற்கு இல்லை. அரசையோ, அரசியல்வாதிகளையோ நம்பி முறையிடுவதால் எந்தப் பயனும் இல்லை என்பதால், மக்களுடன் மக்களாக நின்று மக்கள் அமைப்பாகப் போராடுவதே தீர்வாகும்.

ban neet protest - Neelam
ban neet protest - Neelam

நாம் நீட் தேர்வில் இருந்து மட்டுமல்லாமல், புதிய கல்விக் கொள்கையிலிருந்தும் (NEP) வெளியே வர வேண்டும். முற்காலத்தில் குறிப்பிட்ட சாதியினர் படிக்கக் கூடாது என நேரடியாகத் தடுத்த நிலை மாறி, இன்றைக்கு மக்கள் விழிப்புணர்வு அடைந்துவிட்டதால் 'தேர்வு' என்ற பெயரில் மறைமுகமாக மாணவர்களைத் தடுக்கப் பார்க்கிறார்கள். மற்றொருபுறம், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் ஆசிரியர்களே வேலைக்காகப் போராடும் சூழலில் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. எனவே, கல்வித்துறையில் மிகப்பெரிய சீர்திருத்தம் தேவைப்படுகிறது.

நீளம் பண்பாட்டு மையம், 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' மற்றும் இந்தியா முழுமைக்கும் போராடிக் கொண்டிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும், கலை வடிவத்திலும் நேரடிப் போராட்டத்திலும் முழு ஆதரவுடன் இயங்குவேன். நமது எதிர்காலத் தலைமுறையினரான மாணவர்களை சரியாகப் பாதுகாக்கும் போதுதான் ஒரு நல்ல நாடு கிடைக்கும். எனவே, கல்வித்துறையின் மாற்றத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையாக இந்த போராட்டம் அமைய வேண்டும்." என்றார்.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க