TVK : 'கரூர் சம்பவத்துக்கு பிறகு வெளியில் வரும் விஜய்!' - சிறப்புப் பொதுக்குழுவி...
BB Tamil 9: அடிதடியில் இறங்கிய கம்ருதீன், பிரஜின்; கதறி அழும் சாண்ட்ரா - கலவரமான பிக் பாஸ் வீடு!
பிக்பாஸ் சீசன் 9 பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த வாரம் பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் ஆகிய 4 புதிய வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்பட்டிருக்கின்றனர்.
புதிய போட்டியாளர்களுக்கும் , பழைய போட்டியாளர்களுக்கும் வாக்குவாதம் நடைபெற்று வரும் நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் புரொமோவில் கம்ருதீனுக்கும், பிரவீனுக்கும் மோதல் ஏற்படுகிறது.

கம்ருதீன், பிரவீனை அடிக்க முயல்கிறார். அப்போது பிரஜின் இருவரையும் தடுக்கிறார். திடீரென பிரஜினுக்கும், கம்ருதீனுக்கும் சண்டை நடக்கிறது. பிரஜின் மனைவி 'சாண்ட்ரா நீ ஏன் இப்படி பண்ற ' என்று அழுகிறார். பிக் பாஸ் வீடே கலவரமாகி இருக்கிறது.




















