செய்திகள் :

BB Tamil 9: இந்த நிலைமைக்கு என்னைக் கொண்டு வந்து விட்டுருக்கு பிக் பாஸ்! - நடிகர் பரணி

post image

வைல்டு கார்டு என்ட்ரி மூலம் புதிதாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கும் சீரியல் முகங்களா அல்லது ஏற்கெனவே அந்த வீட்டிலில் அடாவடி, அலும்பு என நிகழ்த்திக் கொண்டிருக்கும் சமூக ஊடக பிரபல முகங்களா என்கிற ரீதியில் பஞ்சாயத்து தொடங்கியிருக்கிறது பிக் பாஸ் சீசன் 9  நிகழ்ச்சியில்.
இந்த முறை சமூக ஊடக பிரபலங்கள் அதிகம் இடம் பிடித்தபோது 'கம்பெனி ஆர்ட்டிஸ்ட்களுக்கு இவங்க பரவால்லப்பா' என்கிற குரல்கள் எழுந்ததென்னவோ நிஜம்தான். ஆனால் அடுத்த சில தினங்களிலேயே அவரகளுக்கிடையிலான சத்தமும் சண்டையும் பார்க்க பிடிக்கவில்லை பலருக்கு.
கொஞ்சம் உஷாராகிக்கொண்ட பிக் பாஸ் ஒரே மாதத்தில் டிவியிலிருந்து நான்கு பேரை வைல்டு கார்டு மூலம் இறக்கிவிட்டிருக்கிறார்.
இன்னும் கொஞ்ச நாளைக்கு கன்டென்ட் கியாரண்டி என்கிற சூழலில், பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் தொடர முடியாமல் சுவர் ஏறித் தப்ப முயன்ற நடிகர் பரணியிடம் பேசினோம்.

barani

''அண்ணே, `அங்கம்மாள்'னு ஒரு படம் நடிச்சிருக்கேன். அம்மா மகன் கதை. நியூயார்க் திரைப்பட விழாவுல படத்துக்கு விருது தந்திருக்காங்க. இங்க அடுத்து மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி 2 படம் வர இருக்குது. இதெல்லாம் பத்திப் பேசலாமே, அந்த நிகழ்ச்சியைப் பத்தி அவசியம் பேசித்தான் ஆகணுமா' என தயங்கியவரை சரிக்கட்டிப் பேச வைத்தோம்.

''விடிஞ்சா புதுசா பத்து பேரை சந்திச்சமா நல்லதா நாலு விஷயத்தைப் பேசினோமான்னு இருக்கணும்னு நினைக்கிறவன் நான். அதுலயும் பார்க்குறவனை பழகுறவனை எல்லாம் அப்படியே நம்பவும் செய்வேன். என்னைப் போய், வாயைத் திறந்தா பொய், அதுவும் அங்க ஒண்ணும் இங்க ஒண்ணுமா பேசிக்கிட்டு திரியறவங்ககூட இருன்னு சொன்னா எப்படி இருப்பேன்?
அந்த நிகழ்ச்சி பத்தித் தெரியாம, கமல் சார் வர்ற ஷோன்னு கிளம்பிப் போனேன். ரெண்டு மூணு நாள்லயே இங்க இருக்க முடியாதுன்னு தெரிஞ்சுடுச்சு. வெளியில போகணும்னு சொன்னேன்.. விட லேட் ஆச்சு.

அதனால ஸ்ட்ரெஸ் அதிகமாகி டென்ஷன் எகிறிச்சு. எத்தனை கேமரா இருந்தா என்ன தப்பிக்க வழி இருந்தா கிளம்பிடலாம்னு ட்ரை பண்ணினேன். அதை எதுக்கு இப்ப திரும்ப ஞாபகப்படுத்தச் சொல்றீங்க.. எம்பாட்டுக்கு நடிப்பு, பக்தின்னு போயிட்டிருக்கேனே' என மறுபடியும் முரண்டு பிடித்தவரிடம், 'இந்த சீசன் பார்க்குறீங்களா' இந்த சீசன்லயும் உங்களை மாதிரியே ஒரு போட்டியாளர் நிகழ்ச்சி செட் ஆகலைன்னு கிளம்பினார் தெரியுமா' என்ற கேள்வியையும் சூட்டோடு சூடாக வைத்தோம்.

கமல் ஹாசன்
கமல் ஹாசன்

'' ஒரு விஷயம் பிடிக்காம அதுல இருந்து வெளியில வந்த பிறகு அதைப் பத்தி எதுக்கு யோசிக்கணும்? அப்படித்தான் நினைச்சு அந்த நினைப்புல உறுதியா இருக்கேன். இருந்தாலும் கமல் சார் நடத்திட்டிருந்த அடுத்தடுத்த சில சீசன்கள்ல அவர் கலந்துகிட்ட சில எபிசோடுகள் பார்த்தேன். அது அவருக்காக பார்த்தது.

மத்தபடி 'அந்த நிகழ்ச்சியில கலந்துக்க வாய்ப்பு வருது, போகலாமான்னு யாராச்சும் கேட்டா, (அவ்வளவா யாரும் கேக்கறதில்ல) யப்பா, உன் வாழ்க்கை உன் முடிவு'னு பெரிசா கையெடுத்து கும்பிட்டு அனுப்பிடுவேன. ஆனாலும் என்னை உதாரணம் காட்டறீங்க பார்த்தீங்களா, இந்த நிலைமைக்கு என்னைக் கொண்டு வந்து விட்டிருக்கு பிக் பாஸ் எனச் சிரிக்கிறார்.  

Heart Beat: ``அதுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம்" - மகிழும் `ஹார்ட் பீட்' சாருகேஷ்

`ஹாட்ஸ்டார்' தளத்தில் வந்துகொண்டிருக்கும் ஹார்ட் பீட்' தொடர்தான் தற்போது பலரின் பேவரைட். காதல், காமெடி என ஆல்ரவுண்டராக கலக்கும் இந்தத் தொடருக்கு ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் நிகழ்ச்சியில் `Most ... மேலும் பார்க்க

BB Tamil 9: தீபக், பிரியங்கா, மஞ்சரி - பிக் பாஸ் வீட்டில் பழைய போட்டியாளர்கள்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வை... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 29: `என் பர்சனல் பத்தி யாரும் பேசக்கூடாது' - திவ்யாவை வறுத்தெடுத்த பாரு

பாரதிராஜா திரைப்படத்தில் கவுண்டமணி நடித்த ஒரு நகைச்சுவைக் காட்சி. ஊரிலுள்ள பெரிய மனிதர்களின் வீட்டு வாசலில் அமர்ந்து “சாமி.. ஒரே குளிரா இருக்கு. தாங்க முடியலை. கொஞ்சம் காசு கொடுத்தீங்கன்னா.. ஊத்திக்கு... மேலும் பார்க்க

BB Tamil 9: அடிதடியில் இறங்கிய கம்ருதீன், பிரஜின்; கதறி அழும் சாண்ட்ரா - கலவரமான பிக் பாஸ் வீடு!

பிக்பாஸ் சீசன் 9 பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த வாரம் பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் ஆகிய 4 புதிய வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்பட்டிருக்கின்றனர். புதிய போட்டியா... மேலும் பார்க்க

BB Tamil 9: "கொஞ்சம் கூட தைரியம் இல்லை" - அட்டாக் மோடில் திவாகர்; களேபரமாகும் பிக்பாஸ் வீடு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய (நவ 3) நாளுக்கான மூன்றாவது புரொமோ வெளியாகியிருக்கிறது. அந்தப் புரொமோவில் திவாகர், "'இஷ்டம்னா இருங்க இல்லைனா எந்திருச்சு போங்க'னு சொல்றதுக்கு திவ்யா பிக்பாஸ் கிடை... மேலும் பார்க்க