சிறை: "நல்ல படம் கொடுத்திருக்கோம் என நம்புறோம்” - நடிகர் விக்ரம் பிரபு
BB Tamil 9: "எது நல்லதுன்னு உரசிப் பார்க்கணும்"- கம்ருதீனுக்கு பார்வதி அம்மா அட்வைஸ்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர்.
இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார்.
பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது.
அந்தவகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் பலரும் எதிர்பார்த்த பார்வதியின் அம்மா பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
"நீங்க நல்லா இருக்கணும். உங்க தொழில்ல நல்ல நிலைமைக்கு வரணும். விழுமியத்துல (யாரையும் கைவிடாத விஷயத்தில்) ஹீரோவா இருக்கணும்" என்று பார்வதி அம்மா கம்ருதீனிடம் நன்றாக பேசுகிறார்.

"இந்த வீடு நிறைய விஷயங்களை கத்துக்கொடுத்திருக்கு" என்று கம்ருதீன் சொல்ல "எது நல்லதுன்னு உரசி பார்க்கணும்" என பார்வதி அம்மா அட்வைஸ் செய்கிறார்.


















