பல்லடம்: 1.5 லட்சம் பெண்கள்... கறுப்பு, சிவப்பு டிரெஸ் கோடு; செ.பா-வின் மகளிர் ம...
BB Tamil 9: "நான் அந்த ஃபீலிங்ல விளையாடப்பட்டுடேனோன்னு தோணுது"- கம்ருதீனை நாமினேட் செய்த பாரு
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 84 நாள்களைக் கடந்துவிட்டது.
கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறிருக்கின்றனர்.
இன்று வெளியான முதல் புரொமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடந்தது.

இதில் திவ்யாவை விக்ரம் நாமினேட் செய்தார். "நியாயத்துக்காக குரல் கொடுக்கிறேன்னு சொல்லி வெறும் சுயநலமா பேசுற மிகப்பெரிய ஃபிராட் (Fraud). மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத ஒரு கோழை.
உங்க மேல வைக்கிற மாற்றுக் கருத்துக்களை ஏத்துக்காம இத்தனை வாரம் வந்ததுலாம் அயோக்கியத்தனம்.
நான்தான் இங்க நியாயம் கேட்கிறேன்னு சொல்லி ஒரு பொய்யான வேடமும், பொய்யான முகமூடியும் போட்டுகொள்கிற ஒரு ஃபிராட்" என்று திவ்யாவை விக்ரம் கடுமையாகச் சாடி நாமினேட் செய்திருந்தார்.
இந்நிலையில் தற்போது வெளியான இரண்டாவது புரொமோவில் வினோத், அரோரா, சுபிக்ஷா, கம்ருதீன், சபரி ஆகியோர் நாமினேட் செய்யப்படுகின்றனர்.

குறிப்பாக கம்ருதீனை பார்வதி நாமினேட் செய்கிறார். " நான் அந்த ஃபீலிங்ல விளையாடப்பட்டுடேனோ அப்படின்னு எனக்குத் தோணுது" என்ற காரணத்தைச் சொல்லி பார்வதி நாமினேட் செய்கிறார்.

















