`அண்ணாமலையைக் கைதுசெய்ய வேண்டும்'- தாக்கரே கட்சி போர்க்கொடி... காரணம் என்ன?
BB Tamil 9: பணப்பெட்டி டாஸ்க்; "இதுதான் இந்த சீசனின் கடைசி குறும்படம்" - விஜய் சேதுபதி அதிரடி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 97 நாள்களைக் கடந்துவிட்டது.
கடந்த வாரம் கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா எவிக்ஷனில் வெளியேறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற பணப்பெட்டி 2.0 டாஸ்க்கில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து சென்றார். பிக் பாஸ் டைட்டிலை வினோத் தான் வெல்வார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவர் பணப்பெட்டியை எடுத்து வெளியே சென்றது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில் வினோத் பணப்பெட்டியை எடுக்க விக்ரம் அரோரா, சபரி தான் காரணம் என குற்றம் சாட்டிய வியானா மற்றும் பிரவீனை விஜய் சேதுபதி கேள்வி கேட்கிறார்.

"இந்த பிக்பாஸ் சீசனின் கடைசி குறும்படம் இதுதான்" என்று விஜய் சேதுபதி கூறுகிறார்.
புரொமோவை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.




















