திருநெல்வேலி: மஞ்சள் குலை, பனங்கிழங்கு, கரும்பு கட்டுகள் - பாளை சந்தையில் களைகட்...
BB Tamil 9: Day 100: கண்ணில் காதலுடன் அரோ, GVM பட ரொமான்ஸ்; கலங்கவைத்த கனி - 100வது நாள் ஹைலைட்ஸ்
கிளைமேக்ஸில் வில்லன் திருந்துவது போல, கட்டக் கடேசியில் பிக் பாஸ் வீடு பாசிட்டிவிட்டிக்கு திசை திரும்பியிருப்பது மகிழ்ச்சி.
துஷார் - அரோ ரொமான்ஸ் ஒரு பக்கம், விக்ரம் -கனி சென்ட்டிமென்ட் இன்னொரு பக்கம் என களை கட்டியிருக்கிறது.
கண்களில் காதல் பொங்க அரோ பார்த்தாலும் துஷார் தள்ளியிருப்பது சிறப்பு. இந்த உஷாரை முன்பே செய்திருக்கலாம்.
அரோவிடம் கோப்பையைக் கொடுத்தால் கூட ‘எனக்கு வேண்டாம். வேற யாருக்காவது கொடுத்துங்க’ என்பார் போலிருக்கிறது. அந்த அளவிற்கு பதட்டத்தில் இருக்கிறார். “அய்யய்யோ.. ஸ்டேஜ்ல நிக்கற டென்ஷன் எனக்கு வேண்டாம். நான் கீழ உக்காந்துக்கறேன். வேணுமின்னா விஜய் சேதுபதி கையைப் பிடிச்சு நான் தூக்கறேன்” என்றெல்லாம் இன்பமாக புலம்பிக் கொண்டிருந்தார்.
‘நான் முதலமைச்சரானால்’ என்று பத்தாம் வகுப்புக் கட்டுரை போல ‘நான் டைட்டில் வின்னர் ஆனால்’ மேடையில் என்ன பேசுவேன் என்று இறுதிப் போட்டியாளர்கள் பேச வேண்டும்.

‘நம்புனா நடக்கும்’ என்று நம்புங்கள் நாராயணன் போல பேசினார் சபரி. “டைட்டில் வின் பண்றது என் கனவு இல்லை. ஆனா என் உழைப்பை போட்டிருக்கேன்” என்று standup காமெடியை வைத்து ஆக்ஷனில் நடித்துக் காட்டினார். “ஃபேமிலி ஆடியன்ஸ் கிட்ட ரீச் ஆகியிருக்கேன். என் inner பர்சனாலிட்டி மக்களுக்கு தெரிஞ்சிருக்கு. அது எனக்குப் பெரிய வெற்றி” என்றார் அரோ. “எத்தனையோ அவார்டு விழாவிற்கு போயிருக்கேன். ஒரு கப் கூட கிடைச்சதில்லை. நடிப்பிற்காக கிடைக்கற அதை விட அசல் கேரக்டருக்கு கிடைச்ச இந்த வெற்றி முக்கியமானது” என்றார் திவ்யா.
ஸ்டோர் ரூம் வழியாக எஃப்ஜேவும் மெயின் கேட் வழியாக ஆதிரையும் வந்தார்கள். துஷாருக்கும் அரோவிற்கும் இடையே நடந்த ஒரு தனிச்சந்திப்பு பயங்கர ரொமாண்டிக்காக இருந்தது. ‘எனக்கு ரொமான்டிக் நாவல் படிக்கறது பிடிக்கும்’ என்று அரோ ஒரு முறை சொன்னார். எனவே அதில் வரும் ஒரு பாத்திரம் மாதிரியே இருந்தார். கண்களில் காதலும் தாபமும் பொங்க துஷாரை அவர் பார்த்துக் கொண்டிருந்த காட்சி Divine. கௌதம் வாசுதேவ் படத்தின் காட்சி போல இருந்தது.
தான் எழுதிய காதல் கடிதத்தை துஷாரிடம் காட்டி என்ன எக்ஸ்பிரஷன் வருகிறது என்று ஆவலான ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் அரோ. ஆனால் துஷாரோ எக்ஸ்பிரஷனை கட்டுப்படுத்திக் கொண்டு ‘ஓகே.. வெளில பார்த்துக்கலாம். இப்ப உன் கேம் முக்கியம். அதுல ஃபோகஸ் பண்ணு” என்றார். (அடப்பாவி! இந்த புத்திசாலித்தனம் நீ ஆடறப்ப இருந்திருக்கலாம்!)
“இவ்ளதான் உன் ரியாக்ஷா… ச்சை..” என்கிற மாதிரி அரோ விலக, அதைத் தடுத்த துஷார் “சொல்லித்தான் புரியணுமா.... இன்னும் ஒரு வாரம். கேம் ஃபோகஸ்” என்றார். தன்னைப் போலவே அரோவும் ரொமான்ஸால் கேமை பாழாக்கக்கூடாது என்கிற நல்லெண்ணம் அதில் தெரிந்தது. மிக நாசூக்காகவும் புத்திசாலித்தனமாகவும் இந்தச் சூழலை கையாண்டார் துஷார்.

யெஸ்.. இதுதான் லவ். எந்தவொரு கடினமான சூழலிலும் பிரச்சினையிலும் ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பதுதான் உண்மையான காதல். காதலுக்காக காதலையே விட்டுத் தருதல். தான் அன்பு செலுத்துபவருக்கு பிரிவிலும் கூட சிறு துன்பம் நிகழக்கூடாது என்பதில்தான் உண்மையான அன்பு அடங்கியிருக்கிறது.
மாறாக ஒரு சிறிய பிரேக்அப்பில் கூட ‘அவளை வெட்டுவேன்.. குத்துவேன்’ என்றால் அதில் காதல் இல்லை. இனக்கவர்ச்சியும் காமமும் மட்டுமே இருக்கிறது. இதே பிக் பாஸில் இருந்து ஓர் உதாரணத்தைச் சொல்ல வேண்டுமென்றால் பாரு - கம்முவை சொல்லலாம். நட்பிற்கும் மேலான உறவு என்கிற லேபிளில் பொழுது பூராவும் உரசி விட்டு ஒரு சிறிய விரிசலில் கூட பரஸ்பரம் மோசமாக தாக்கிக் கொண்டார்கள். அதில் காதலே இல்லை.
கனி மற்றும் சுபிக்ஷா என்ட்ரி.
துஷார் உள்ளே வந்த போது அரோவை பார்க்காமல் தவிர்த்தது போன்ற டிராமாவை இவர்களும் ஆடினார்கள். இது prank என்பது நமக்கு முன்பே தெரிந்து விட்டது. விக்ரமிற்கும் அது உள்ளூற தெரியும் என்பது யூகம். என்றாலும் அந்த மெல்லிய நாடகத்தைக் கூட அவரால் தாங்க முடியவில்லை. வியானா அடித்த அடி அப்படி.
இவர்களும் வியானாவைப் போல அடிப்பார்களோ என்று உள்ளூற ஒரு சின்ன அச்சம் இருந்திருக்கலாம். குறிப்பாக சுபிக்ஷாவின் ஆட்டம் விக்ரமால்தான் தடைபட்டது என்பது பெரிய குற்றச்சாட்டு. தாயின் சொல்லால் புண்பட்ட அபூர்வ சகோதரர்கள் கமல் மாதிரி பின்னால் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார் விக்ரம்.
மற்ற அனைவரையும் விசாரித்து விட்டு கடைசியாக ‘எப்படியிருக்கீங்க விக்ரம்’ என்று பன்மையில் அழைத்து கனி கை கொடுத்த சமயத்தில் விக்ரமால் அதை தாங்கவே முடியவில்லை. கசப்பான புன்னகையுடன் கை கொடுத்து விட்டு அடிபட்ட முகத்துடன் உள்ளே சென்று படுக்கையில் தனியாக அமர்ந்து கொண்டார். ‘சக்ஸஸ்’ என்று கனியும் சுபிக்ஷாவும் புன்னகைத்திருப்பார்கள்.

“டேய்.. அவங்க விளையாடறங்கடா.. இப்படி வந்து உக்காராதே’ என்று சபரி ஆறுதல் சொன்னாலும். “என்னடா இது கைகொடுத்து பேசறாங்க. அப்படியா பழகணும். சுபிக்ஷா வேற முறைச்சிட்டே போறா. பிக் பாஸ் வீட்ல என்ன வேணா நடக்கலாம்” என்று கலங்கினார் விக்ரம். வியானா தந்த அனுபவம்.
இந்தச் சமயத்தில் அரோவின் நல்ல உள்ளம் வழக்கம் போல் வெளிப்பட்டது. கனி மற்றும் சுபிக்ஷாவிடம் சென்று “ஏற்கெனவே அவர் பயந்துட்டு இருக்காரு. வியானா வேற கண்டபடி பேசியிருக்காங்க. நீங்களும் எதுவும் பண்ணாதீங்க. உடைஞ்சுடுவாரு” என்று விக்ரமிற்கு ஆதரவாக பேசியது நன்று.
“அதனாலதான் நீ தங்கம்.. ஸ்வீட் ஹார்ட்” என்று அரோவை பாராட்டினார் கனி.
விக்ரமின் கலங்கிய முகம் காரணமாக தங்களின் நாடகத்தை நிறுத்த முடிவு செய்த கனியும் சுபிக்ஷாவும் விக்ரமின் அருகில் சென்றார்கள். இறுதிச் சுற்று படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மாதிரி ஓடிச் சென்று விக்ரமின் மீது ஏறிக் கொண்டார் சுபிக்ஷா. கனியும் வந்து அணைத்துக் கொள்ள அது prank என்பது விக்ரமிற்குப் புரிய “சனியன்களா.. ஏன் இப்படி பண்ணீங்க?” என்று அணைத்துக் கொண்டது சிறந்த காட்சி. பிக் பாஸ் வீட்டில் நெகட்டிவிட்டி காட்சிகளையே பார்த்து எரிச்சலான கண்களுக்கு சிறந்த மருந்து.
பிறகு நேராக வியானாவிடம் சென்ற சுபிக்ஷா, “நான் போன கடைசி வாரம் உன்னை நாமினேட் பண்ணதா சொல்லியிருக்க. நீ எபிசோடை முழுசா பார்த்தியா.. இல்லன்னா.. சோஷியல் மீடியால மீம்ஸ் மட்டும் பார்த்தியா?” என்று கேட்க “நான் எபிசோட் பார்க்கலை’ என்று வாய் விட்டு விட்டார் வியானா. விசேவும் முன்பு இதே கேள்வியைத்தான் கேட்டார்.
ஆக அரையும் குறையுமாக அல்லது திரித்து போடப்பட்ட தகவல்களை வைத்துக் கொண்டு வியானா இத்தனை அழிச்சாட்டியம் செய்கிறார் என்பது மீண்டும் அம்பலமானது. “வியானாவுக்கு முன்னாடி நான் எவிக்ட் ஆகிடக்கூடாதுன்னு நீ பேசியிருக்கே” என்று அடுத்த குற்றச்சாட்டை வீசினார் வியானா. “ஆமாம். அது கேம் அதுல என்ன தப்பு?” என்று பதிலடி தந்தார் சுபிக்ஷா.
“நான் உன்னைப் பத்தி பேசலை. ஆனா நீதான் என்னைப் பத்தி பேசியிருக்க” என்று சுபிக்ஷா கறாராக சொல்ல வியானா முறைத்தபடி இருந்தார். ஒரு காலத்தில் இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்தார்கள். பி்க் பாஸ் ஆட்டம் இவர்களை பிரித்து விட்டது. வியானாவின் தவறான புரிதல் மோசமாக்கி விட்டது. உண்மை புரிந்து மீண்டும் இணையட்டும்.

இந்த வாரம் முழுதும் தன்னை வியானா காயப்படுத்தியது குறித்து கனியிடம் புலம்பினார் விக்ரம். ‘ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை மரியாதையையும் ஒரு கெட்டவனுக்கு இந்தச் சமூகம் தட்டுல வெச்சு கொடுக்குதே’ என்று மகாநதி திரைப்படத்தில் கமல் புலம்பும் காட்சி போல “நல்லவங்களா இருக்கவே கூடாது. எல்லோரும் ஏமாத்தறாங்க.. நம்மளைத்தான் கேள்வி கேட்கறாங்க. ஒரு நல்லவன் தொடர்ந்து ஏமாளியாகறான். அது மாறணும்” என்று கனி புலம்பியது உண்மை.
‘நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். ஆனா கை விட மாட்டான்’ என்பதெல்லாம் ஆறுதல் சொல்லப்படும் வசனம். கயமையும் பொய்மையும் நிறைந்த சமூகச் சூழலில் கெட்டவர்கள் சௌகரியமாக இருக்க, நல்லவர்கள்தான் அனைத்து துன்பங்களையும் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. “அப்படின்னா நாமும் அப்படி மாறிடலாமா?” என்று நல்லவர்கள் நினைக்க ஆரம்பித்தால் சமூகம் இன்னமும் மோசமாகி விடும்.
“இந்த ஷோல அத்தனை உழைப்பை போட்டிருக்கேன். இப்ப அவ கிட்ட அரைமணி பேசறதுல என்ன உபயோகம்..?” என்று விக்ரம் சொல்ல “அப்ப ஏன் ஸாரி கேட்டே?” என்று மடக்கினார் கனி. “நானும் அப்படித்தான். என் பக்கம் தப்பு இல்லைன்னாலும் ஸாரி சொல்லி பழகிட்டேன்” என்றார் சுபிக்ஷா.
சான்ட்ரா, திவ்யா, பாரு போன்றவர்கள் அடித்த போதெல்லாம் தாங்கிக் கொண்டு புன்னகைத்த விக்ரம், வியானா என்கிற மலர் சூறாவளியாக மாறி அடிக்கும் போது தாங்க முடியாமல் கடைசிக்கட்டத்தில் தள்ளாடுவது பரிதாபம்.
நூறாவது நாள் எபிசோடு என்பதால் ‘கேக்குதா.. கேக்குதா’ என்று மக்கள் பாட, “நான் பேசறதே இனிமையான கேக்தானே அப்புறம் என்ன?” என்று அல்வா கொடுத்த பிக் பாஸ், பிறகு அனுப்பி வைத்தார். வினோத்தை மிகவும் மிஸ் செய்வதாக அமித் காமிரா முன்பு பேசியது நெகிழ்ச்சியான காட்சி.
மறுபடியும் அதே கேள்விதான் தீரான குழப்பத்துடன் நம் முன்னே நிற்கிறது. ‘டைட்டில் வின்னர் யார்?’
உங்களுக்கு ஒருதர தோனுதுனா கமென்ட் பண்ணுங்க..!



















