செய்திகள் :

Bigg Boss 10: சீன் கட் ஆவதாக வருந்திய நடிகைக்கு அடித்தது 'பிக் பாஸ்' ஜாக்பாட்!

post image

விஜய் டிவியின் ஃபேவரைட் ஷோ பிக்பாஸின் பத்தாவது சீசன் வரும் ஞாயிற்றுக் கிழமை (செப்டம்பர் 6-ம் தேதி) தொடங்கவிருக்கிறது

பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை முன்பெல்லாம் தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒரே சமயத்தில் நடந்ததில்லை. கொஞ்சம் தேதிகள் மாறி நடக்கும். ஆனால் இந்த வருடம் வழக்கத்துக்கு மாறாக எல்லா ஒரே நேரத்தில் பிக்பாஸ் தொடங்குகிறது.

அதேபோல் இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொது மக்களில் இருந்து சிலரை அனுப்பலாமெனத் தீர்மானித்து 'பிக்பாஸ் தி காமன் மேன்' என்றொரு நிகழ்ச்சியையும் நடத்தி, அதில் தேர்வாகும் ஓரிருவரை பிக்பாஸ் போட்டியாளராக அனுப்புவதென்றும் முடிவு செய்திருக்கிறார்கள்.

இந்த சீசனில் போட்டியாளர்களாகச் செல்கிறவர்களென சீரியல் நடிகை ஷப்னம், ஃபரினா, ஃபௌசி உள்ளிட்ட சிலரது பெயர்களை ஏற்கெனவே நாம் வெளியிட்டிருந்தோம்.

நிகழ்ச்சி தொடங்க இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் சூழலில் தற்போது மேலும் சில போட்டியாளர்கள் குறித்த விபரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அவர்கள் யாரெனப் பார்க்கலாமா?

Anandhi - Jana Nayagan
Anandhi

நடனம் டு நடிப்பு!

டான்ஸராக சின்னத்திரையில் கலக்கியவர் ஆனந்தி.

'ஜோடி' ரியாலிட்டி ஷோவில் இவரது டான்ஸ் பெரிய வரவேற்பைப் பெற்றது நினைவிருக்கலாம். பிறகு சீரியல் பக்கம் வந்தார். 'தலையணைப் பூக்கள்' முதலான சில சீரியல்களில் நடித்தார்.

தொடர்ந்து சினிமா முயற்சியையும் மேற்கொண்டார். சில படங்களில் நடித்தார். பல படங்களில் இவர் நடித்த சீன்கள் வரவில்லை. சமீபத்தில் வெளியான 'கருப்பு' மற்றும் ஜனநாயகன் படங்களிலும் இந்த நிலை தொடர்ந்ததாக வருந்தி வீடியோ வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பல ஆண்டுகளாக முயற்சி செய்து வந்த நிலையில் பத்தாவது சீசன் கை கொடுத்திருக்கிறது என்கிறார்கள்.

மேலும் நடிகர் ஜான் விஜய், சுவாசிகா ஆகிய இருவரும் கூட பிக்பாஸ் செல்ல வாய்ப்பிருப்பதாக உறூதிப்படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.!

Brothers And Sisters: `இன்னொரு குடும்பத்தை நாசம் பண்ண வந்துட்ட'ன்னு திட்டுறாங்க' - புரொமோதினி ஷேர்ஸ்

ஜியோ ஹாட்ஸ்டார் வெப்சீரிஸில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரிஸ் `Brothers And Sisters'. இந்த சீரிஸில் `கிரிஜா' கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் புரொமோதினி. அவரை நம் அலுவலகத்தில் சந்தித்துப் பே... மேலும் பார்க்க

`கனத்த இதயத்துடன்...' - சின்னத்திரை நடிகர் சங்க செயலாளர் நவீந்தர் திமுகவிலிருந்து வெளியேறியது ஏன்?

திமுக-வில் தலைமைக் கழகப் பேச்சாளராகவும் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் செயலாளராகவும் இருக்கும் நடிகர் நவீந்தர் திமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.நாதஸ்வரம், அழகு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவ... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 10: சீசனின் முதல் ஆளாக வெளியேறினார் பிளாக் பாண்டி! - காரணம் என்ன?

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10, 19 போட்டியாளர்கள் கலந்து கொள்ள, கடந்த 6ம் தேதி அமர்க்களமாகத் தொடங்கியது.எந்த சீசனிலும் இல்லாதபடி முதல்முறையாக இந்த சீசனில் பல போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்... மேலும் பார்க்க

BB Tamil 10: "டிவிக்கு வந்த இத்தன வருஷத்துல இப்படி மோசமான அனுபவத்தைச் சந்திச்சதே இல்ல"- ஷப்னம் அம்மா

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 19 போட்டியாளர்கள் கலந்து கொள்ள அமர்க்களமாகத் தொடங்கியிருக்கிறது.பத்தாவது ஆண்டு ஸ்பெஷல் என்பதால் எந்தச் சீசனிலும் இல்லாத புதுமையாக இந்தச் சீசனில் 14 போட்டியாளர்கள், நிக... மேலும் பார்க்க

BB Tamil 10 : எஸ்கேப் ஆன போட்டியாளர்; வைல்டு கார்டு என்ட்ரிக்கு ஓகே?! - கடைசி நாளில் நடந்ததென்ன?

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10, மொத்தம் 19 போட்டியாளர்கள் கலந்து கொள்ள, அமர்க்களமாகத் தொடங்கியிருக்கிறது.மேலும் எந்த சீசனிலும் இல்லாதபடி முதல்முறையாக இந்த சீசனில், பல போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கல... மேலும் பார்க்க