'விஜய் புனித ஆட்சியைக் கொடுப்பார்' - செங்கோட்டையன் நம்பிக்கை
Bison: "மாரி செல்வராஜ் தலைசிறந்த இயக்குநர்" - தினேஷ் கார்த்திக் பாராட்டு!
கடந்த தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான திரைப்படம் பைசன் - காளமாடன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் திரையரங்கில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டதுடன் வெற்றிகரமாக வசூலும் ஈட்டியது. கடந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பைசன் திரைப்படத்தைப் வியந்து சமூக வலதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரமை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
அவரது பதிவில், "படம் மிகச் சிறப்பாக இருந்தது.
மாரி செல்வராஜ் ஒரு தலைசிறந்த திரைப்பட இயக்குநர்.
அவரது படைப்புகள் அழுத்தமானதாகவும், ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துபவையாகவும் உள்ளன.
துருவ் இந்தப் படத்தில் மிகவும் யதார்த்தமாக நடித்துள்ளார்; அதற்காக அவர் மிகுந்த கடின உழைப்பைச் செலுத்தியிருப்பார்.

துணை கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக தங்கள் பங்கை வெளிப்படுத்தினர். அனைவருக்கும் எனது பாராட்டுகளும், மேலும் பல வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துக்கள்." என பாராட்டியுள்ளார்.
பைசன் - காளமாடன் படத்தில் துருவ் விக்ரமுடன் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால், அமீர், மதன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படத்தின் உருவாக்கத்துக்காக கடும் உழைப்பைச் செலுத்தியிருக்கும் அனைவரும் பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர்.














