செய்திகள் :

Sky Dining: கிரேனில் 150 அடி உயரத்தில் சாப்பாட்டு மேசையுடன் தொங்கிய குடும்பம்; போராடி மீட்பு!

post image

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. மூணாறை அடுத்த ஆனச்சல் பகுதியில் தனியார் ஹோட்டல் ஒன்று 'ஸ்கை டைனிங்' என்ற பெயரில் வித்தியாசமான சாப்பாடு முறையை செயல்படுத்தி வருகிறது. அதில் டைனிங் டேபிள், இருக்கைகளும் சேர்ந்திருக்கும் வகையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. இருக்கையில் வாடிக்கையாளர்களை அமரவைத்து உணவு பதார்த்தங்கள் வைக்கப்படும். பின்னர் வாடிக்கையாளர்களுடன் டைனிங் டேபிளையும் சேர்த்து கிரேன் மூலம் ஆகாயத்தில் சுமார் 150 அடி உயரத்தில் தூக்கி நிறுத்துவார்கள். அங்கு வைத்து அவர்களுக்கு உணவு பரிமாறப்படும். சுற்றிலும் உள்ள இயற்கையை ரசித்தபடி வாடிக்கையாளர்கள் உணவருந்தலாம். இது புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும் என்பதால் மூணாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் அந்த ஹோட்டலுக்கு விரும்பிச் செல்கின்றனர். கண்ணூரைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்கள் 2 குழந்தைகளுடன் 'ஸ்கை டைனிங்'கில்  4 பேர் இன்று மதியம் சாப்பிடச் சென்றுள்ளனர். அதில் 2 வயது குழந்தையும், 4 வயதுடைய மற்றொரு குழந்தையும் இருந்தது. மேலும், ஹோட்டல் ஊழியர் ஒருவரும் உடன் இருந்தார்.

குழந்தையை மீட்கும் தீயணைப்பு வீரர்

5 பேரையும் சேர்த்து கிரேன் மேலே தூக்கி உயர்த்தியது. அவர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு கீழே இறக்க முயன்றபோது கிரேன் பழுதாகிவிட்டது. வாடிக்கையாளர்களை கீழே இறக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஹோட்டல் நிர்வாகம் கிரேனில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய முயன்றது. அந்த சமயத்தில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு கூடினர். நேரம் அதிகமாக ஆகியும் கிரேனை சரிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஸ்கை டைனிங் கிரேனில் சிக்கிய குடும்பம்

தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று 150 அடி உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஸ்கை டைனிங்கின் கீழ் பகுதியில் ஆபத்து காலத்தில் பயன்படுத்தும் வலை விரித்தனர். ஏணி மூலம் மீட்க வாய்ப்பு உள்ளதா என ஆராய்ந்தனர். அதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் கயிறு கட்டி தீயணைப்பு வீரர்கள் மேலே சென்று குழந்தைகள் உட்பட 5 பேரையும் பத்திரமாக மீட்டனர். சுமார் 3 மணிநேரம் ஆகாயத்தில் தொங்கிக்கொண்டிருந்தவர்கள் மீட்கப்பட்டதை அடுத்து தீயணைப்புத்துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டிச் சென்றனர்.

ரோட்டில் குறுக்கிட்ட பாம்பு; நிலைதடுமாறி ஓடையில் பாய்ந்த ஆட்டோ - இரண்டு குழந்தைகள் பலியான சோகம்!

கேரள மாநிலம், பத்தனம்திட்டம் மாவட்டம், கோனி-யை அடுத்த தேக்குதோடு தும்பைக்குளம் பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்று ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த ஆட்டோவில் கருமான்தோடு ஸ்ரீ நாராயணா பள்ளி மாண... மேலும் பார்க்க

ஶ்ரீவில்லிபுத்தூர்: வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை; தண்ணீர் வாளியில் விழுந்து உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வழி விடு முருகன் கோயில் உள்ளது. அந்தக் கோயில் பின்புறம் வசித்து வருபவர் சுரேஷ்குமார். இவர் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து... மேலும் பார்க்க

Hong Kong: 32 மாடிகள் கொண்ட 8 கட்டிடங்கள்: ஒரே நேரத்தில் தீ பற்றிய சோகம்; 44 பேர் பலி!

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு நாடான ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் 44 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.ஹாங்காங்கில் உள்ள தை போவில் அமை... மேலும் பார்க்க

Hong Kong: 31 தளங்கள் கொண்ட 8 கட்டடங்களில் தீ விபத்து; குறைந்தபட்சம் 13 பேர் மரணம்!

ஹாங்காங்கில் உயரமான குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தபட்சம் 13 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.டாய் போ (Tai Po) மாவட்டத்தில் அமைந்துள்ள எட்டு அடுக... மேலும் பார்க்க

ஹரியானா: கூடைப்பந்து கம்பம் விழுந்து 16 வயது தேசிய அளவிலான வீரர் மரணம்; அதிர்ச்சி தரும் வீடியோ

ஹரியானா மாநிலம் ரோத்தக்கில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 16 வயது தேசிய அளவிலான வீரர், எதிர்பாராத விதமாக கூடைப்பந்துக் கம்பம் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ... மேலும் பார்க்க

தென்காசி: இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதி கோர விபத்து - 6 பேர் பலியான சோகம்

தென்காசி மாவட்டம் இடைகால் அருகில் உள்ள துரைச்சாமிபுரம் கிராமத்தில் இன்று காலை கே.எஸ்.ஆர் என்ற தனியார் பேருந்து தென்காசியில் இருந்து ராஜபாளையம் சென்று கொண்டிருந்தது. அதேபோல் எதிர்புரத்தில் கோவில்பட்டிய... மேலும் பார்க்க