செய்திகள் :

சமையலர் பாப்பாள் தீண்டாமை வழக்கு: 6 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை; "திருப்தி இல்லை" - ப.பா.மோகன்

post image

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே அமைந்துள்ள திருமலைக்கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையலராகப் பணியாற்றி வந்தவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள்.

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி, இப்பள்ளியில் படிக்கும் ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர், பாப்பாளைச் சமைக்க விடாமல் தடுத்து நிறுத்தியதோடு, பள்ளி வளாகத்தைப் பூட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சாதிய ரீதியிலான இந்த வன்கொடுமை சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட முற்போக்கு இயக்கங்கள் இப்பிரச்னையை கையில் எடுத்தன.

பாப்பாளைச் சமையல் செய்யவிடாமல் தடுத்த அதே ஊரைச் சேர்ந்த ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த பழனிசாமி, சக்திவேல் உள்ளிட்ட 36 பேர் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பழனிசாமி, சக்திவேல் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை திருப்பூர் வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

பாப்பாள்
பாப்பாள்

இந்த வழக்கு விசாரணை மிகவும் மந்தமாக நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2024-இல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்தது.

இருதரப்பு சாட்சியங்கள் விசாரணை, அரசுத் தரப்பிலான விசாரணை முடிவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படுவதாக நீதிபதி சுரேஷ் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 4 பேர் உயிரிழிந்த நிலையில், 32 பேர் மற்றும் பாதிக்கப்பட்ட பாப்பாள் ஆகியோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் பழனிசாமி, சக்திவேல், சண்முகம், துரைசாமி, சீதாலட்சுமி, வெள்ளியங்கிரி ஆகிய 6 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளித்த நீதிபதி சுரேஷ் மற்ற 26 பேரை விடுவித்து உத்தரவிட்டார்.

குற்றவாளிகளான பழனிசாமி, சக்திவேல், சண்முகம், துரைசாமி, சீதாலட்சுமி, வெள்ளியங்கிரி ஆகிய 6 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ் உத்தரவிட்டார்.

வழக்கறிஞர் ப.பா.மோகன்
வழக்கறிஞர் ப.பா.மோகன்

இந்த வழக்கு விசாரணை மிகவும் மந்தமாக நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2024-இல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்தது.

இருதரப்பு சாட்சியங்கள் விசாரணை, அரசுத் தரப்பிலான விசாரணை முடிவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படுவதாக நீதிபதி சுரேஷ் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 4 பேர் உயிரிழிந்த நிலையில், 32 பேர் மற்றும் பாதிக்கப்பட்ட பாப்பாள் ஆகியோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் பழனிசாமி, சக்திவேல், சண்முகம், துரைசாமி, சீதாலட்சுமி, வெள்ளியங்கிரி ஆகிய 6 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளித்த நீதிபதி சுரேஷ் மற்ற 26 பேரை விடுவித்து உத்தரவிட்டார்.

குற்றவாளிகளான பழனிசாமி, சக்திவேல், சண்முகம், துரைசாமி,சீதாலட்சுமி, வெள்ளியங்கிரி ஆகிய 6 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ் உத்தரவிட்டார்.

திருப்தி இல்லை... மேல்முறையீடு செல்வோம்...

இந்த வழக்கில் பாப்பாள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒரு அரசுப் பணியாளரான பாப்பாள் பட்டியல் சமூகத்தினர் என்பதற்காகவே சமைக்கக் கூடாது என்று திட்டமிட்டே ஆதிக்கச் சமூகத்தினர் தடுத்துள்ளனர். இது முழுக்க முழுக்க அப்பட்டமான வன்கொடுமையாகும்.

இதற்கு அப்போதைய அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி மற்றும் காவல் துறையினர் உடந்தையாக இருந்துள்ளனர். பாப்பாளைப் பாதுகாக்க வேண்டிய மீனாட்சி, பாப்பாளைப் பணியிட மாறுதல் செய்துள்ளது சட்டத்திற்குப் புறம்பானதாகும். ஆனால், 36 ஆவது குற்றவாளியான வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சியை இந்த வழக்கில் இருந்து உயர் நீதிமன்றம் விடுவித்தது.

இந்த வழக்கை காவல் துணைக் கண்காணிப்பாளர் பதவி நிலையிலான அதிகாரிகள்தான் விசாரிக்க வேண்டும். அதிலும், அவர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த நுட்பமும், அறிவும் தெரிந்திருக்க வேண்டும் என்று சட்டத்தில் உள்ளது. ஆனால், பாப்பாள் வழக்கில் இந்த விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கவில்லை. அதனால், இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை.

பாப்பாள்
பாப்பாள்

இந்த வழக்கில் தொடர் விசாரணை கோரி, நீதிமன்றத்தில் மனு அளித்தோம். மனு அளித்த அன்றைய தினமே எங்களது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. விசாரணையின்போது, ஆசிரியர்கள் பலர் பிறழ்சாட்சியாக மாறினர். இருப்பினும், சிறப்பு வழக்கறிஞர் பாண்டியன் வைத்த வாதங்களை முன்வைத்து நீதிமன்றம் 6 பேருக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதில், சட்டவிரோதமாக கூடுதல், சட்டவிரோதமாக ஒருவரைத் தடுத்து நிறுத்துதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம், சமூக ரீதியாக தொல்லை கொடுத்தது என்ற பிரிவுகளின்கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பில் பாதிக்கப்பட்ட பாப்பாளுக்கும், எங்களுக்கும் திருப்தி இல்லை. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம்" என்றார்.

சென்னை: துணை நடிகைக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய போலீஸ் உதவி கமிஷனர் - பரபர பின்னணி

சென்னையில் குடியிருக்கும் துணை நடிகை ஒருவரும் அவரின் கல்லூரி நண்பரும் நெருங்கி பழகி வந்திருக்கிறார்கள். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கல்லூரி நண்பரிடம் துணை நடிகை வற்புறுத்தியிருக்கிறார். ஆனால் தி... மேலும் பார்க்க

அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோ & சாட் - இளம்பெண் பாலியல் புகாரால் தலைமறைவான பாலக்காடு காங்கிரஸ் MLA

கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ராகுல் மாங்கூட்டத்தில். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாலக்காடு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஷாபி பறம்பில் வடகரா தொகுதியில் ... மேலும் பார்க்க

சிதறி கிடந்த பச்சிளம் குழந்தையின் உடல் பாகங்கள் - கோவையில் நரபலியா?

கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே காளப்பட்டி - வீரியாம்பாளையம் சாலை உள்ளது. அங்கு மாரியம்மன் கோயில் அருகே புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தையின் உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சாலையோரத்தில் வீசப... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: பள்ளிக்கு செல்லும் வழியில் ஆசிரியை நடுரோட்டில் வெட்டிக் கொலை; இளைஞர் வெறிச்செயல்

தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் அருகே உள்ள மேல களக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவரது மகள் காவியா (26). இவர் ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேரிடம் சி.பி.ஐ விசாரணை

கடந்த இரண்டு நாட்களாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜ்... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; பெண்ணைக் கொன்றுவிட்டு போலீஸில் சரணடைந்த நபர் - ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி!

ராமேஸ்வரம் ராமர்பாதம் செல்லும் வழியில் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை உள்ளது. இங்கு காவலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கார்மேகம் என்பவர் தற்போது தற்காலிக காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கடந்த ... மேலும் பார்க்க