செய்திகள் :

Putin: டிசம்பரில் இந்தியா வரும் ரஷ்ய அதிபர்; இந்தச் சந்திப்பு ஏன் முக்கியமானது?

post image

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வரும் டிசம்பர் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்தர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பின் பேரில் இந்தப் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் காரணமாக அமெரிக்க அரசு இந்தியா மீது வரி விதித்தது முதல் இந்தியா - ரஷ்யா உறவுகள் வலுவடைந்து வருகின்றன. இந்த சூழலில் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Putin வருகை - இந்திய அரசு சொல்வதென்ன?

புதின்
புதின்

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ரஷ்யக் கூட்டமைப்பின் அதிபர் விளாடிமிர் புதின், 23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்தர உச்சி மாநாட்டிற்காக டிசம்பர் 4 முதல் 5 வரை அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின்போது, அதிபர் புதின் பிரதமர் மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவார். அத்துடன், ரஷ்ய அதிபரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்று விருந்தளிக்கிறார்.

புதினின் இந்த இந்தியப் பயணம், இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கும், 'சிறப்பு மூலோபாயக் கூட்டாண்மையை' வலுப்படுத்துவதற்கான தொலைநோக்கு திட்டத்தை அமைப்பதற்கும், பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்துக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் இந்திய மற்றும் ரஷ்யத் தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Ajit Doval
Ajit Doval

ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வரவிருப்பது குறித்து, கடந்த ஆகஸ்ட் மாதம் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாஸ்கோவுக்குச் சென்றிருந்தபோது தேதி குறிப்பிடாமல் அறிவிக்கப்பட்டிருந்தது.

பிரதமர் மோடியும், புதினும் செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டின்போதுச் சந்தித்தனர். அப்போது, ரஷ்ய அதிபரின் லிமோசின் காரில் இருவரும் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த மாதத் தொடக்கத்தில், ரஷ்ய அதிபரின் உதவியாளர் நிகோலாய் பாத்ருஷேவ் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தபோதும், மோடி புதினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அத்துடன், அடுத்த மாதம் புதினை இந்தியாவில் வரவேற்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் பிரதமர் கூறியிருந்தார்.

Presidents of America and Ukraine
Presidents of America and Ukraine

இந்தியா - ரஷ்யா உறவு

இந்தியா மற்றும் ரஷ்யா இடையே, சோவியத் காலத்திலிருந்தே இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளுடன் வலுவான நட்புறவு இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக இரு நாடுகளும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகின்றன. இந்தியாவுக்கு அதிக ஆயுதங்களை வழங்கும் நாடுகளில் ரஷ்யா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், ரஷ்ய எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனுக்கு எதிரான போருக்கு நிதி அளிக்கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியிருக்கிறார்.

உக்ரைன் போருக்கு மத்தியில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், புதின் தனது வெளிநாட்டுப் பயணங்களை வெகுவாகக் குறைத்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்தியா ஒரு உறுப்பினராக இல்லாததால், புதினை கைது செய்ய வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இல்லை.

டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையேயான சிக்கலான உறவுக்கு மத்தியில், புதின் அவர்களின் இந்தப் பயணம் இந்தியா-ரஷ்யா உறவின் வலிமையை காட்டுவதாகவும், இந்தியாவின் புவிசார் அரசியல் உத்தியில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

`முதல்வர் அப்படி சொன்னதை நகைச்சுவை உணர்வுனு எடுத்துக்கிட்டேன்; ஆனாலும் குற்ற உணர்வு’ - நடிகை ஆர்த்தி

குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி, இன்றும் நடித்து வருபவர் நகைச்சுவை நடிகை ஆர்த்தி. இவரின் தந்தை சில தினங்களுக்கு முன் வயோதிகம் காரணமாக காலமானார்.இந்த நிலையில் அது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.... மேலும் பார்க்க

``மாம்பழத்தின் விலையை நிர்ணயிப்பதில் ஆளுங்கட்சியை சார்ந்த மாபியா'' - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் 'தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்' என நூறு நாட்களுக்கு மக்கள் சந்திப்பை நடத்தியிருந்தார். அதுசம்பந்தமாக இன்று (நவ.28) சென்னை எழும்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்... மேலும் பார்க்க

சேகர் பாபு செங்கோட்டையனை திமுக-வுக்கு அழைத்தாரா? `நட்பு ரீதியில்.!’ - அமைச்சர் ரகுபதி பதில்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அதிமுக-வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார்.அதனைத்தொடர்ந்து எடப... மேலும் பார்க்க

தேர்வு அறையில் செல்போன்; விடைத்தாளை `ஸ்டேட்டஸ்’ வைத்த மாணவர்! - புதுச்சேரி பல்கலைக்கழக அவலம்

காரைக்கால், மாஹே, அந்தமான்–நிக்கோபார், லக்‌ஷதீப் என நான்கு கிளைகளுடன் புதுச்சேரி கலாபட்டில் இயங்கி வரும் மத்திய பல்கலைக்கழகத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகி... மேலும் பார்க்க

”SIR கொண்டு வரப்பட்டதன் நோக்கம் நிறைவேறப் போவதில்லை” - சொல்கிறார் துரை வைகோ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.கவின் முதன்மை செயலாளர் துரை வைகோ, “த.வெ.கவில் இணைய செங்கோட்டையன் எடுத்த முடிவு, அவரது தனிப்பட்ட விருப்பம், உரிமை. அவர் இணைவதால்... மேலும் பார்க்க

பாஜக-வின் `கோவை’ அசைன்மென்ட்! - அதிர்ச்சியில் எஸ்.பி. வேலுமணி

கொங்கு மண்டலம்2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே பரபரக்க தொடங்கிவிட்டது. செங்கோட்டையன் தவெக வருகைக்கு பிறகு கொங்கு மண்டல அரசியல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது. கொங்கு மண்டலத்தில் ஏற்கெனவே அதிமுக வலுவ... மேலும் பார்க்க