Putin: டிசம்பரில் இந்தியா வரும் ரஷ்ய அதிபர்; இந்தச் சந்திப்பு ஏன் முக்கியமானது?
தங்கம், பங்கு, ரியல் எஸ்டேட்... உங்கள் சந்தேகங்களுக்குப் பதில் தரும் ‘Magic Money' கருத்தரங்கு..!
தங்கமும் வெள்ளியும் உச்சத்தில் இருக்கிறது. பங்குச் சந்தையும் உச்சத்தில் இருக்கிறது. ரியல் எஸ்டேட் பெரிய மாற்றங்கள் இல்லாமல் இருக்கிறது. ஆனாலும், வீடு, மனை வாங்குவதில் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்நிலையில், இந்திய முதலீட்டுச் சந்தையில், முதலீட்டாளர்களிடையே 'எது எனக்கான, லாபகரமான முதலீடு?' என்ற குழப்பம் நிலவிவருகிறது.
இந்தக் குழப்பங்களுக்குத் தீர்வு காணும் வகையில், அறிவுசார்ந்த வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கில் 'Magic 20 Tamil' நிறுவனம் ‘Magic Money Tn Summit - 2026' என்ற மாபெரும் கருத்தரங்கைச் சென்னையில் நடத்த உள்ளது. வருகிற நவம்பர் 29-ம் தேதி முழு நாளும் நடக்கும் இந்தக் கருத்தரங்கு, முதலீடு மற்றும் நிதித் துறையில் தற்போது நிலவும் அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கும் தளமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

தற்போது சந்தையில் எழும் முக்கியக் கேள்வியே, எந்த முதலீடு (Asset Class) நிலையான வருமானத்தைத் தரும் என்பதுதான். தங்கம், வெள்ளி போன்றவை பாதுகாப்பான முதலீடாகக் கருதப்பட்டாலும், அதிலுள்ள ஏற்ற, இறக்கங்கள் முதலீட்டாளர்களைத் தடுமாறச் செய்கின்றன. பங்குச் சந்தையில் அபரிமிதமான வளர்ச்சி இருந்தாலும், அதன் அதிவேகமான மாற்றங்கள் மற்றும் சந்தை சார்ந்த அபாயங்கள் முதலீட்டாளர்களிடையே பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துகின்றன. இப்படியான சூழ்நிலையில், ஒரு முதலீட்டாளர் எந்தப் பாதையில் செல்ல வேண்டும், எதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை வழங்கவே இந்த கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த கருத்தரங்கின் மையக்கருவாக, '2026-இல் முதலீட்டுச் சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?' என்பதுதான். இதற்காக, "பியாண்ட் தி புல் ரன்: மார்க்கெட் ரியாலிட்டிஸ் ஆஃப் 2026" (Beyond the Bull Run: Market Realities of 2026) என்ற தலைப்பில் சந்தை நிபுணர்களின் அமர்வு நடைபெறுகிறது. இதில் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் நிஜமான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இந்தக் கருத்தரங்கில் சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் ராதாகிருஷ்ணன், M2P ஃபின்டெக் நிறுவனர் பிரபு, iThought நிறுவனர் ஷியாம் சேகர், நேச்சுரல்ஸ் குமரவேல், கோயம்புத்தூர் கேபிட்டல் இயக்குநர் டாக்டர் எஸ்.கார்த்திகேயன், பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பன், ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் துணைத்தலைவர் கே.ராஜஸா, பஜாஜ் ஆல்டர்நேட்ஸ் லஷ்மி ஐயர், Nafa Fund பாலாஜி வைத்தியநாதன், சிக்மா ஸ்கேனர் தமிழ்செல்வன், பாரதி ஹோம்ஸ் துணைத் தலைவர் முகமது முனீர், Commtrendz Research சி.இ.ஓ ஞானசேகர் தியாகராஜன், எழுத்தாளர் சங்கீதா சங்கரன் சுமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

உங்களின் முதலீட்டுப் பயணத்துக்கு வழிகாட்டும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கப் பதிவு செய்ய vijaya.kumar@magic20.co.in மின்னஞ்சல் முகவரியையும், 8072516712 / 78455 69820 ஆகிய எண்களையும் தொடர்புகொள்ளலாம். கருத்தரங்கில் கலந்துகொண்டு முதலீட்டுத் தெளிவைப் பெற்றுப் பயனடையுங்கள் முதலீட்டாளர்களே!



















