செய்திகள் :

Bollywood: ரோஹித் ஷெட்டியின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு; மர்ம நபர்களுக்கு வலை; என்ன நடந்தது?

post image

பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி, சிங்கம், கோல்மால் உட்பட பல வெற்றிப்படங்களை இயக்கி இருக்கிறார். மும்பையில் அவரது வீடு ஜுகுவில் இருக்கிறது.

இன்று அதிகாலையில் ரோஹித் ஷெட்டியின் வீட்டின் மீது மர்ம நபர்கள் வெளியில் இருந்து நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து கேள்விப்பட்டதும் போலீஸாரும், தடயவியல் நிபுணர்களும் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரோஹித் ஷெட்டி வீட்டிற்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியது யார் என்று தெரியவில்லை. இத்துப்பாக்கிச்சூடு நடந்தபோது ரோஹித் ஷெட்டி வீட்டில் இருந்தாரா என்பது குறித்து தெரியவில்லை. அதேசமயம் துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கிச்சூடு நடந்ததை மும்பை போலீஸ் கமிஷனர் உறுதிபடுத்தியிருக்கிறார்.

மும்பை போலீஸாரும், குற்றப்பிரிவு போலீஸாரும் இணைந்து அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி
பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி

இத்தாக்குதலில் சர்வதேச கும்பலுக்குத் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு குறித்து ரோஹித் ஷெட்டி குடும்பத்தினர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ரோஹித் ஷெட்டி இதுவரை 17 படங்களை இயக்கி இருக்கிறார்.

இதற்கு முன்பு பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது 2024 ஆம் ஆண்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. சிறையில் இருக்கும் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்குப் பொறுப்பு ஏற்றனர். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களைக் கைது செய்தனர்.

இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு சல்மான் கான் வீட்டிற்கு போலீஸார் பலத்த பாதுகாப்பு போட்டுள்ளனர். சல்மான் கானும் எப்போதும் குண்டு துளைக்காத கார்களையே பயன்படுத்தி வருகிறார்.

45 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்?

70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், 'அர்மான் திரைப்படத்தின் பாடலான 'ரம்பா ஹோ' பாடலுக்கு புடவையில், மிக நேர்த்தியான உடல் மொழியில் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்ஆகி வருகிறது. யார் இவர் என்று சமூ... மேலும் பார்க்க

"பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!" - மேடையில் 'துரந்தர்' பட பாடகி!

‘துரந்தர்’, ‘முஞ்சியா’ உள்ளிட்ட சில பாலிவுட் திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கும் பின்னணி பாடகி ஜாஸ்மின் சாண்டல்ஸ், மேடையிலேயே பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி பேசியிருக்கிறார். இந்த சம்பவத்தின் பு... மேலும் பார்க்க

`மகன் சினிமாவில் நுழைய உதவவில்லையா?'- மனைவியின் குற்றச்சாட்டுக்கு நடிகர் கோவிந்தா சொல்லும் பதிலென்ன?

பாலிவுட் நடிகர் கோவிந்தாவிற்கும், அவர் மனைவி சுனிதா அஹுஜாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அதனை இருவரும் மறுத... மேலும் பார்க்க

Epstein Files: "என் படங்களைவிட, என் பெயரில் வரும் செய்திகள்தான் பிரபலம்" - சர்ச்சைக்கு அனுராக் பதில்

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. உலகின் முக்கிய அரசியல் முகங்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களும் புகைப்படங்களும் அந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளன. பா... மேலும் பார்க்க

`அவரைச் சந்திக்க விரும்பியதில்லை' - தந்தையின் பெயரை பயன்படுத்தாதது குறித்து நடிகை தபு விளக்கம்

தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காதல் தேசம் உட்பட சில படங்களில் நடித்திருக்கும், பிரபல பாலிவுட் நடிகை தபுவிற்கு 54 வயதாகிறது. அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.தபு தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித... மேலும் பார்க்க

Mrunal Thakur: "காதல் உங்களைச் சிறந்த மனிதனாக்குகிறது" - நடிகை மிருணாள் தாகூர்

நடிகை மிருணாள் தாகூர் காதலைப் பற்றி மிகவும் உயர்வாகப் பேசி இருக்கிறார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ''காதல் என்பது ஒரு அழகான உணர்வு. இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் அது நிகழ வேண்டும... மேலும் பார்க்க