செய்திகள் :

'CM கான்வாய்க்காக நிறுத்தப்பட்ட விஜய்யின் கார்; கடுப்பான முதல்வர் தரப்பு! - உளவுத்துறைக்கு 'ரெய்டு?'

post image

தவெகவின் மூன்றாமாண்டு தொடக்க விழா விஜய் தலைமையில் பனையூரில் இன்று நடந்திருந்தது. அதே ECR யைக் கடந்துதான் முதல்வர் ஸ்டாலினும் மாமல்லபுரத்தில் சுற்றுலா உச்சி மாநாட்டை தொடங்கி வைக்க சென்றிருந்தார். முதல்வரின் கான்வாயும் விஜய்யின் காரும் ஒரே நேரத்தில் நீலாங்கரையை கடக்கும் சூழல் ஏற்பட்டதால், உஷ்ணமான மேலிடம் உளவுத்துறையினரை காய்ச்சி எடுத்திருப்பதாக கிசுகிசுக்கின்றனர்.

Vijay
Vijay

தவெகவின் மூன்றாமண்டு நிகழ்வுக்காக காலை 9:55 மணியளவில் விஜய் நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்பட்டிருந்தார். அதே சமயத்தில்தான் முதல்வரின் கான்வாயும் நீலாங்கரையை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதனால் ECR சாலையை கனெக்ட் செய்யும் பக்கவாட்டு சாலைகளை காவல்துறையினர் கான்வாய்க்காக ப்ளாக் செய்தனர்.

இதில் நீலாங்கரை வீட்டிலிருந்து ECR யைப் பிடித்து பனையூரை எட்டவிருந்த விஜய்யின் காரும் மற்ற சில வாகனங்களோடு சேர்த்து தடுத்து நிறுத்தப்பட்டது. 2-3 நிமிடங்களில் முதல்வரின் கான்வாய் நீலாங்கரையை கடக்கவே போக்குவரத்து விடுவிக்கப்பட்டிருக்கிறது.

விஜய்யின் கார்
விஜய்யின் கார்

விஜய் வீட்டிலிருந்து கிளம்பி அலுவலகம் வருவதை பாலோ செய்ய சாட்டிலைட் சேனல்கள் கேமராமேன்களுடன் சில யூனிட்டுகளை நியமித்திருந்தனர். அவர்கள் விஜய்யின் கார் சி.எம் இன் கான்வாய்க்காக தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல் சொல்லவே, முதல்வருக்காக விஜய்யின் தடுத்து நிறுத்தம் என லைவ்விலேயே செய்தியாக்கிவிட்டன சேனல்கள்.

ஸ்பாட்டிலிருந்த உளவுத்துறையினர் அப்போதே நம்முடைய தலையைத்தான் மேலிடம் உருட்டப்போகிறதென கடுப்பாகினர். எதிர்பார்த்ததை போலவே தவெக அலுவலகத்தில் நோட் எடுத்துக் கொண்டிருந்த உளவுத்துறையினருக்கு மேலிடத்திலிருந்து அழைப்பு வந்தது.

'இவ்வளவு அஜாக்கிரதையாகவாக இருப்பீர்கள். முதல்வரின் நிகழ்ச்சி இருக்கிறதென்று தெரியுமல்லவா? விஜய் தரப்பிடம் தகவலைச் சொல்லி அவரை முதல்வரின் வருகைக்கு முன்போ பின்போ வரச் சொல்லியிருக்க வேண்டியதுதானே? இதெல்லாம் வழக்கமான நடைமுறைதானே. இதில் கூடவா கோட்டை விடுவீர்கள்' என ரெய்டு விட்டிருக்கின்றனர்.

CM Convoy
Stalin Convoy

'நிகழ்ச்சி 11 மணிக்குதான் என தவெக தரப்பு அறிவித்திருந்தது. அதனால் இயல்பாகவே விஜய் 10:40 க்கு மேல்தான் நீலாங்கரை வீட்டிலிருந்து கிளம்புவார் என அனுமானித்திருந்தோம். ஆனால், திடீரென உடனிருந்தவர்கள் எதோ ஜோசிய காரணங்களை அடுக்க சீக்கிரமே கிளம்பியிருக்கிறார் விஜய். மேலும், வேறு எதுவும் பெரிதாக இல்லாததால் செய்தியாளர்கள்தான் இந்த விவகாரத்தை ஊதி பெரிதாக்கி லைவ்விலேயே அடித்துவிட்டார்கள்' என மேலிடத்திடம் கூறி ஒருவழியாக சமாளித்ததாக ஸ்பாட்டிலிருந்த உளவுத்துறையினர் பெருமூச்சு விட்டனர்.

சி.எம் கான்வாய்க்காக விஜய்யின் வாகனம் நிறுத்தப்பட்டதென பரவிய செய்தியில்தான் முதல்வர் தரப்பு கடுப்பானதாகவும் அதனால்தான் ஸ்பாட்டிலிருந்த உளவுத்துறையை பிடித்து அதிகாரிகள் வாங்கு வாங்கென வாங்கியதாகவும் கூறுகின்றனர் காவல்துறை வட்டாரத்தினர்.

'அவர்' மீது எங்களுக்கு எவ்வளவு கோபம், எவ்வளவு ஆசை, எவ்வளவு வியப்பு இருக்கிறது தெரியுமா? - சு.வெ

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில், பெருந்தமிழர் விருது பெற்ற எஸ்.வி.ராஜதுறை குறித்து சு.வெங்கடேசன் எம்.பி பேசுகையில், "விகடனுடைய 'பெருந்தமிழர்' விருது பெறுகிற தோழர் எஸ்.வி.ஆர்., நம் சமகாலத்தின... மேலும் பார்க்க

``தோப்புக்கரணம் போடு என்றால், நான்-ஸ்டாப்பாக பல்டி அடிப்பார் பழனிசாமி’’ - ஸ்டாலின் கடும் தாக்கு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மண்டலவாடியில், தி.மு.க வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 47 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்... மேலும் பார்க்க

'த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தம்' - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மகளிர் உரிமைத் தொகையை பாஜக தடுக்க பார்க்கிறது என்று திமுகவினர் முட்டாள்தனமான பேசுகிறார்கள். ... மேலும் பார்க்க

'புதுச்சேரி நிதியில் ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி!' – காரைக்காலில் கடுகடுத்த அமித் ஷா

``தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்...”புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷ... மேலும் பார்க்க

`அமித் ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும்; அப்படி வந்தால்தான்...' - அன்பில் மகேஸ்

திருச்சி, திருவெறும்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எதிரணியினருக்குதான் தேர்தல் பயம். மக்களுக்கான நலத்திட்டங்களை சூழ்ச்சி செய்து யா... மேலும் பார்க்க

அண்ணா அறியாலயத்தில் ஒருபக்கம் ரெய்டு; மறுப்பக்கம் கூட்டணி பேச்சு! - காங்கிரஸ் ஆடிய அரசியல் ஆடுபுலி

`ஆட்சியில் பங்கு'அரசியல் ஆடுபுலி 05ஆட்சியில் பங்கு வேண்டும் என்கிற கோரிக்கையோடு, அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரசும், 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சினைத் தொடங்... மேலும் பார்க்க