செய்திகள் :

Crousty சிக்கன்: `பிராண்ட்' கனவோடு வந்த பிரான்ஸ் செஃப்! - புதுச்சேரியில் Cloud kitchen முயற்சி

post image

புதுச்சேரியில் தனி cloud kitchen `Alex Crousty'-ன் பின்னல் இருக்கும் 30 ஆண்டுகால Chef Alexandre Kerbouz-ன் பயணம்.

பிரான்ஸில் பிறந்து, சமையல் உலகில் சுமார் 30 ஆண்டுகள் பயணித்த ஒருவர், இன்று புதுச்சேரியின் தெருக்களில் தனது சமையலின் திறமையை காட்டி வருகிறார்.

ஒரு காலத்தில் பாரிஸ், மும்பை எனப் பல நகரங்களில் சமயலறைகளில் தனது திறமையை வெளிப்படுத்திய பிரெஞ்சு செஃப், இன்று புதுச்சேரியில் ஒரு சிறிய cloud kitchen மூலம் தனது சொந்த உணவு பிரண்டை உருவாக்கி கொண்டிருக்கிறார். அவர் தான் "Alex Crousty-ன் நிறுவனர் செஃப் அலெக்சாண்டர் கெர்போஸ்".

Chef Alexandre Kerbouz

14 வயதிலிருந்தே சமையல் துறையில் பயணிக்கும் இவர், பிரான்ஸில் உள்ள பிரபலமான 'Paul Bocuse Institute-ல் 2020-21-ல் பயிற்சி பெற்றவர். மேலும் பாரிஸில் உள்ள பிரபலமான 'Silencio Club Restaurant ', Ramen-க்கு பெயர் பெற்ற 'Kodawari Restaurant' மற்றும் 2019-ல் மும்பையின் பிரெஞ்சு உணவகமான "Soufflé S’il Vous Plaît"-ன் செஃப் ஆக பணியாற்றியவர்.

இந்தியாவில் பணியாற்ற வேண்டும் என்ற நீண்ட நாள் கனவுடன் வந்த இவருக்கு, கொரோனா ஒரு கட்டத்தில் பிரான்ஸுக்குத் திரும்பும் சூழலை ஏற்படுத்தியது. ஆனால் இந்தியா மீதான ஈர்ப்பு அவரை மீண்டும் இங்கே அழைத்துவந்தது.

புதுச்சேரியில் சொந்தமாக ஏதாவது ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் 'Alex Crousty' பிறந்தது. இது மொறுமொறுப்பான சிக்கன் மற்றும் சாதம் ஆகியவற்றை கொண்ட ஒரு உணவு.

Crousty சிக்கன் என்பது தாய்லாந்து உணவு வகையாகும். ஆனால், அதை அப்படியே எடுத்துக்கொள்ளவில்லை. இந்தியர்களின் சுவைக்கு ஏற்றவாறு அதன் செய்முறையை மாற்றி, தனது அனுபவத்தையும் வாடிக்கையாளர்களின் கருத்துக்களையும் சேர்த்து புதிய வடிவத்தை உருவாக்கியுள்ளார். அது தான் இதை தனித்துவமாக்குகிறது. அதனால் தான் தற்போது இந்த உணவை புதுச்சேரியில் மட்டுமே சுவைக்க முடிகிறது. பெரிய உணவகமும் இல்லை, பெரிய சமையல் குழுவும் இல்லை. தற்போது இந்த உணவை தயாரிப்பது இவர் ஒருவர் தான்.

Crousty சிக்கன்

ஒரு நாளைக்கு சுமார் 30 ஆர்டர்கள் வரை கிடைத்து வரும் நிலையில், தொழில் வளர்த்தால் உதவியாளர்களை நியமித்து அவர்களுக்குத் தானே பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளார். சிறிய அளவில் தொடங்கிய இந்த முயற்சி, இப்போது படிப்படியாக வளர்ந்து வருகிறது.

Takeaway-க்கு சிறிய Crousty Box ரூ.299-க்கும், பெரிய Box ரூ.499-க்கும் கூடுதல் சிக்கன் வேண்டுமென்றால் ரூ.140 என்று தான் செய்யும் உணவின் விலை பற்றியும் கூறி இருந்தார்.

பொதுவாக மதியம் 12 மணியிலிருந்து இரவு 10:30 மணி வரை இவரது கிளவுட் கிட்சேன் செயல்படுகிறது. ஆனால் அவரிடம் இருக்கும் உணவுப்பொருட்களின் இருப்பைப் பொருத்து நேரம் மாறுபடும்.

அதுமட்டுமின்றி ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அலெஸ் கிரௌஸ்ட்டி தொடங்கிய ஆரம்ப நாட்களில் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் பிரெஞ்சு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. இந்தியர்கள்தான் இப்போது அதிகமாக இந்த உணவை வாங்குகிறார்கள்!

இது அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது."உள்ளூர் மக்களும் இந்த உணவை ஏற்றுக்கொண்டு விருப்புகிறார்கள் என்பதுதான் எனக்கு மகிழ்ச்சியான விஷயம் " என்கிறார் செஃப் அலெஸ்.

Crousty சிக்கன்

2021-ஆம் ஆண்டின் இறுதியில் புதுச்சேரிக்கு வந்தவர், இங்கு ஐந்து ஆண்டுகள் வாழ்த்துவிட்டாலும் தமிழில் இன்னும் சரளமாக பேச முடியவில்லை என்றும் ஆனால் தமிழில் சில வார்த்தைகள் தெரியும் மற்றும் இங்குள்ள மக்களுடன் பல ஆண்டுகள் பணியாற்றியதால் கொஞ்சம் புரிந்துகொள்ள முடிகிறது என்றும் கூறினார்.

மேலும் "மொழிகளைக் கற்றுக்கொள்வதைவிட சமையல் செய்வதில் நான் சிறந்தவன் " என்று தனது சமையலின் ஆர்வத்தை பற்றியும் பகிர்ந்தார்.

Crousty சிக்கன்

இப்போது ஒரே உணவுடன் நிற்க விருப்பவில்லை என்றும் எதிர்காலத்தில் சைவ கிரௌஸ்ட்டி, பர்கர்ஸ், டெஸெர்ட்ஸ் என புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளார். அதோடு தொழில் வளர்ந்ததும் இந்தியர்களுக்கு தனது உணவைத் தயாரிக்கும் முறையை கற்றுக்கொடுத்து, மற்ற நகரங்களுக்கும் Alex Crousty -யை கொண்டு செல்ல வேண்டும் என்பதே அவரது கனவு.

"ஒரு கிளவுட் கிச்சேனை நடத்துவது மட்டுமே என் இலக்கு அல்ல மக்கள் அறிதும் விரும்பியும் கொண்டாடும் ஒரு உணவு பிரண்டை உருவாக்க வேண்டும்என்பதே இலக்கு" என்கிறார்,

பிரான்ஸில் தொடங்கிய சமையல் பயணம், மும்பையை கடந்து, கொரோனாவின் தடையையும் தண்டி இன்று புதுச்சேரியில் ஒரு சிறிய Cloud Kitchen-ல் புதிய கனவாக தொடர்கிறது.

Chef Alexandre -வின் கிளவுட் கிட்சேன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!

Datura விற்பனை சர்ச்சை: கர்நாடகாவில் Amazon, Instamart, BigBasket-ன் உணவு லைசென்ஸுக்கு இடைக்கால தடை

ஆன்லைனில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் உணவாக பாதுகாப்பானவைதானா? இந்தக் கேள்வியை எழுப்பும் வகையில், கர்நாடகாவில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.நச்சுத்தன்மை கொண்ட Datura (ஊமத்தை) பழங்கள் மற்றும் விதைகள்... மேலும் பார்க்க

மதுரை: 'பனை ஓலைப் பொருட்கள், செக்கு எண்ணெய்...' - காந்தி மியூசியத்தில் சிறுதானிய திருவிழா கோலாகலம்

மதுரை காந்தி மியூசியத்தில் கிரீன் ஃபார்ம்ஸ் (Green Farms) அமைப்பு சார்பில், 12-வது மாத சிறுதானிய திருவிழா மற்றும் ஆரோக்கிய சந்தை சிறப்பாக நடைபெற்றது. கடந்த 11 மாதங்களாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ... மேலும் பார்க்க