செய்திகள் :

CSK: "கடந்த சீசன் எனக்கு ஏமாற்றம் மற்றும் வலி மிகுந்ததாக இருந்தது"- ஓய்வு குறித்து அஷ்வின்

post image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான அவரது இறுதி சீசன் ஏமாற்றம் மற்றும் வலி மிகுந்த ஒன்றாக இருந்தது என இந்திய அணி மற்றும் சிஎஸ்கேவின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் பேசியிருக்கிறார்.

2024 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்திருந்தார் அஷ்வின்.

இருப்பினும் அவர் சிஎஸ்கே அணியில் தனது ஐபிஎல் பயணத்தைத் தொடர்ந்தார். ஆனால் அதன் பிறகு ஐபிஎல் தொடரிலும் ஓய்வை அறிவித்துவிட்டார்.

அஷ்வின்
அஷ்வின்

இந்நிலையில் ஐபிஎல்லில் ஓய்வு பெற்றது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அஷ்வின், " சொந்த ஊரான சென்னையில் தொடங்கிய பயணத்தை அங்கேயே முடிப்போம் என்று நினைத்தேன்.

ஆனால் கடந்த சீசன் எனக்கு ஏமாற்றம் மற்றும் வலி மிகுந்ததாக இருந்தது. என்னை விடுவிப்பதா? இல்லை தக்கவைப்பதா? என்ற தலைவலியை நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டாம் என்று நினைத்தேன்.

அதனால் நானே ஓய்வை அறிவித்துவிட்டேன். நான் விலகியதால் எனக்கு கொடுக்க வேண்டிய 10 கோடியை வைத்து நல்ல இளம் வீரர்களை மினி ஏலத்தில் எடுப்பார்கள் என்று நினைத்தேன்" என்று பகிர்ந்திருக்கிறார்.

SRH vs DC: "கேமராவை என் அப்பா பக்கம் திருப்பி அவர் ரியாக்ஷனைப் பாருங்க" - ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல் 21) ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.அபிஷேக் சர்மாவின் அதிரடி சதமே சன்ரைசர்ஸ் அணியின் ... மேலும் பார்க்க

SRH Vs DC: "பீல்டிங் மட்டும் கைகொடுத்திருந்தால் மேட்ச் மாறியிருக்கும்"– தோல்வி குறித்து அக்சர் படேல்

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 21) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் போராடித் தோல்வியடைந்தது. அபிஷேக் சர்மா மற்றும் கிளாசனின் அதிரடி ஆட்டத்தால் ஹைதராபாத் இ... மேலும் பார்க்க

IPL: கேன்வாஸ் ஷுவில் பயிற்சி; சைக்கிளில் பயணம்; மும்பை அணியில் அசத்தும் அஸ்வனி குமார் - யார் இவர்?

'எப்போதெல்லாம் விளையாட வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று நினைப்பேன்' என உத்வேகமாக பேசிய மும்பை அணியின் இளம் வீரரான அஸ்வனி குமார் குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய (ஏப்... மேலும் பார்க்க

GT vs MI: "ஹர்திக் பாயுடன் இணைந்துதான் திட்டமிட்டேன்" - மும்பையின் கம்பேக் வெற்றி குறித்து அஸ்வனி

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்20) ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை அணியும் மோதின.இதில் 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் புள்ளி... மேலும் பார்க்க

GT vs MI: "மைதானத்தில் நான் கொடுத்த எனர்ஜி எனக்கே தலைசுற்றலை ஏற்படுத்தியது, ஆனால்.!"- ஹர்திக்

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல்20)நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு மு... மேலும் பார்க்க

GT vs MI: 'OG is Back டி' - கம்பேக் கொடுத்த மும்பை இந்தியன்ஸ்; வீழ்ந்த குஜராத் டைட்டன்ஸ்!

"மூழ்காத ஷிப்பே மும்பை ஷிப்பா" எனப் பாட வைக்குமளவு தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது மும்பை அணி.ரபடாவின் பீரங்கித் தாக்குதலில் தொடங்கி, திலக் வர்மாவினை கதாநாயகனாக்கிய குஜராத்தின் திக்திக்... மேலும் பார்க்க