செய்திகள் :

DMK: 'சீனியர்கள வச்சிட்டு எதுவும் செய்ய முடியாது' - விரக்தியடைந்த உதயநிதி.. பின்னணி என்ன?

post image

த.வெ.க செயல்பாடுகளை எதிர்கொள்ள முடியாமல் தி.மு.க திணறிவருவதாகச் சொல்லப்படும் சூழலில், சீனியர்களை வைத்து கட்சி நடத்த முடியாமல் உதயநிதி திணறுவதாக சொல்கிறார்கள் உடன்பிறப்புகள். அதன் பின்னணி குறித்து அறிவாலய வட்டாரங்களில் விரிவாக விசாரித்தோம்.

உதயநிதி, ஸ்டாலின்

நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள், "எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் எந்த முடிவாக இருந்தாலும் 'உதயாவிடம் ஒரு வார்த்தைக் கேட்டுகோங்க' என சீனியர்களிடம் சொல்லிவருகிறார். அதன்படி முக்கிய முடிவுகளை எடுக்கும்போது உதயநிதியும் ஆர்வமாகவே இருக்கிறார். 'இடைத்தேர்தலை புறக்கணிக்கலாம்' என சொல்லப்பட்டபோது 'புறக்கணிப்பத்தால் தேவையற்ற விமர்சனங்கள் வரும்... வெற்றியோ.. தோல்வியோ.. களமிறங்கிவிடுவோம்' என முடிவெடுத்து மதுராந்தகத்தில் பரந்தாமனை களமிறக்கினார் உதயநிதி. ஆனால், பல விவகாரங்களில் உதயநிதியின் முயற்சிகளுக்கு சீனியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை" என்றனர்

நம்மிடம் பேசிய உதயநிதி ஆதரவாளர்கள், "மிசா விவகாரத்தைச் சட்டமன்றத்தில் பேசி வசமாகச் சிக்கினார் முதல்வர் விஜய். அந்த நேரத்தில் கழகத் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவும் தீயாகப் பரவி த.வெ.க-வைத் திணறடித்தது. விஜய்க்கு தலைவரின் வீடியோ எதிர்வினையே போதும் , அந்த வீடியோவை மில்லியன் கணக்கில் பரப்பி த.வெ.க டார்கெட் செய்யலாம் என்பதுதான் தலைமையின் ப்ளான். ஆனால், 'முதல்வருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும்' என சொல்லியிருக்கிறார்கள் தி.மு.க சீனியர்கள்.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

முதலில், 'அதெல்லாம் வேண்டாம்..' என்பதுதான் தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோரின் எண்ணமாக இருந்திருக்கிறது. ஆனால், ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்ற பெயரில் வரம்பு மீறிப் பேசி, த.வெ.க எதிர்ப்பு உணர்வை மழுங்கடித்து திசைதிருப்பிவிட்டார்கள் சீனியர்கள். இதனால் ரொம்பவே கொதித்துப் போய்விட்டார் உதயநிதி. 'இந்த சீனியர்கள வச்சிட்டு எதுவும் செய்ய முடியாது' என கொதித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் ஒரு முடிவெடுத்தால் 'நாஙகள் தலைவரிடம் பேசிக் கொள்கிறோம்' என ஓவர் டேக் செய்துவிடுகிறார்கள். அதுவே பின்நாட்களில் ஈகோ மோதலாக மாறிவிடுகிறது" என்றனர்.

நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள், "உதயநிதிக்கும் சீனியர்களுக்கும் ஒருவித இடைவெளி நீடிப்பது உண்மைதான். ஆனால் அதையே காரணமாகச் சொல்லிக் கொண்டிருந்தால் எதிர்க்கட்சி அரசியலை தி.மு.க-வால் மேற்கொள்ள முடியாது. எனவே உடனையாக சீனியர்களுக்கும் உதயநிதிக்கு இணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

குறிப்பாக, தி.மு.க-வின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் மாவட்டச் செயலாளர்களை தலைமையிலிருந்து நியமிக்க வேண்டும் என்பதுதான் இளைஞரணியினரின் விருப்பம். ஆனால் தேர்தல் வைக்க வேண்டும் என எண்ணுகிறார்கள் சீனியர்கள். இப்படி ஓவ்வொரு விவகாரத்தில் எலியும் பூனையுமாக மோதிக் கொள்வது அறிவாலயத்துக்கு நல்லதல்ல" என்றனர்.

"அமைச்சர் நிர்மல்குமார் கண்ணியக் குறைவாக பேசவில்லை.. பேசியது தி.மு.க-தான்! - விசிக எழில் கரோலின்

விடுதலை சிறுத்தைகள் கட்சிமீதான தே.மு.தி.க-வின் விமர்சனம், வி.சி.க-வின் இடைத்தேர்தல் நிலைப்பாடு உள்ளிட்ட விவகாரங்களை கேள்விகளாக்கிவி.சி.க துணைப் பொதுச்செயலாளர் ஏழில் கரோலினிடம் பேசினேன்."அமைச்சர் பதவிக... மேலும் பார்க்க

கோவில்பட்டி: திறப்பு விழா கண்டும், 19 வருடங்களாக இயங்காமல் இருக்கும் புதிய பேருந்து நிலையம் | Album

கோவில்பட்டி: திறப்பு விழா கண்டும் 19 வருடங்களாக செயல்படாமல் கிடக்கும் புதிய பேருந்து நிலையம்.! மேலும் பார்க்க

அமெரிக்காவில் வட்டி விகித உயர்வு அறிவிப்பு; இந்திய மக்களைப் பாதிக்கப் போகும் 5 முக்கிய விஷயங்கள்?

அனைத்து உலக நாடுகளின் சந்தைகளும் அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பிற்காகக் காத்திருந்தன.அந்த அறிவிப்பும் வந்துவிட்டது... ஃபெடரல் ரிசர்வ் வங்கி தங்களது வட்டி விகிதத்தை 0.... மேலும் பார்க்க

கட்டாய PF வரம்பு ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்வு; நீங்கள் பயன்பெறுவீர்களா? தெரிஞ்சுக்கோங்க!

PF விஷயத்தில் ஒரு ‘குட் நியூஸ்’ சொல்லியுள்ளது மத்திய அரசு.PF - புதிய அறிவிப்புநேற்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “வருங்கால வைப்பு நிதி விதிமுறைகளில் ஊதிய வரம்பு ரூ.15,000-லிருந்து மாத ஊதிய வரம்பு... மேலும் பார்க்க

நெல்லை: அடர்காட்டுக்குள் பழங்குடியின காணி மக்கள்; நடந்து சென்று சந்தித்த அமைச்சர் வன்னி அரசு |Photos

நெல்லை: பழங்குடியின காணி மக்களை காண அடர் காட்டுக்குள் நடந்து சென்று சந்தித்த அமைச்சர் வன்னி அரசு.!நெல்லை: பழங்குடியின காணி மக்களை காண அடர் காட்டுக்குள் நடந்து சென்று சந்தித்த அமைச்சர் வன்னி அரசு.!வாங்... மேலும் பார்க்க

MDR: மளிகைக் கடைகளில் UPI Payment செய்தால்கூட கட்டணமா? கஸ்டமர் தலையில் விழுமா இது? | Explained FAQ

கையிலும், பர்ஸிலும் பணத்தை வைத்துக்கொண்டு, அதைப் பத்திரமாகப் பொத்திப் பொத்திக் கொண்டுபோய் வந்துகொண்டிருந்த காலமெல்லாம் இப்போது மலையேறிவிட்டது.இப்போதெல்லாம் எங்கே போனாலும் குறைந்தபட்சத் தொகையைக் கையில்... மேலும் பார்க்க