செய்திகள் :

Doctor Vikatan: அம்மாவின் கால்களில் வீக்கம்... கிட்னி பிரச்னையா, இதயக் கோளாறா?

post image

Doctor Vikatan: என் அம்மாவின் கால்கள் எப்போதும் வீங்கியே இருக்கின்றன. வீக்கமுள்ள பகுதியை அமுக்கினால் குழி விழுகிறது. கால்கள் வீங்கினால் கிட்னி அல்லது இதயத்தில் பிரச்னை இருக்கலாம் என்கிறார்களே, அது உண்மையா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவரும், எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட்டுமான ஏ.எம்.கார்த்திகேசன்

இதயநோய் மருத்துவரும், எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட்டுமான ஏ.எம்.கார்த்திகேசன்

கால்களில் ஏற்படும் வீக்கத்துக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். அவற்றில் முக்கியமானது இதயம் தொடர்பான பிரச்னைகள். முக்கியமாக, இதயம் பலவீனமாக இருப்பதன் அறிகுறியாக அது இருக்கலாம்.

இதயத்தில் பிரச்னைகள் இருப்பவர்களுக்கு இப்படி இரண்டு கால்களும் வீங்கலாம். அழுத்தும்போது குழியாகலாம். இதை 'பிட்டிங் எடிமா' (Pitting Edema) என்று சொல்கிறோம். முதல் வேலையாக உங்கள் அம்மாவுக்கு இசிஜி, எக்கோ, சில ரத்தப் பரிசோதனைகளைச் செய்து, இதயத்தின் பம்ப்பிங் திறன் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். கால் வீக்கத்துக்கான அடுத்த முக்கிய காரணம், சிறுநீரகக் கோளாறு.

சிறுநீரகங்களின் செயல்பாட்டையும் சாதாரண ரத்தப் பரிசோதனையின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். இந்த இரண்டு காரணங்கள் தவிர, குறிப்பிட்ட வயதுக்கு மேல் சிலருக்கு நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது அல்லது நிற்பதன் காரணமாகவும் கால்களில் வீக்கம் வரலாம். இதை 'டிபெண்டன்ட் எடிமா' (Dependent Edema) என்கிறோம்.

ரத்த அழுத்தம்

இந்தக் காரணத்தால் கால்கள் வீங்கும்போது, சம்பந்தப்பட்ட நபர், சிறிது நேரம் படுத்து எழுந்திருந்தால், வீக்கம் முற்றிலும் வற்றிப் போய், சாதாரணமாக மாறுவதைப் பார்க்கலாம். அந்த நாளின் இறுதியில் மீண்டும் கால்களில் வீக்கம் இருக்கலாம். ஆனாலும், இது பயப்பட வேண்டிய பிரச்னை அல்ல.

ரத்த அழுத்தம் (பிபி) உள்ளிட்ட சில பிரச்னைகளுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விளைவாலும் சிலருக்கு கால்களில் வீக்கம் வரலாம். இவர்களுக்கும் இரவு தூங்கி எழுந்தால், காலையில் வீக்கம் வடிந்துவிடும். மீண்டும் அடுத்த நாள் கால்கள் வீங்கும். கல்லீரலில் ஏதேனும் பிரச்னை காரணமாக  கால்களில் வீக்கம் ஏற்படுகிறதா என்றும் பார்க்க வேண்டும். இதையும் எளிமையான ரத்தப் பரிசோதனையில் தெரிந்துகொள்ளலாம். எனவே, உங்கள் அம்மாவை முதலில் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். அவர் பரிந்துரைக்கும் ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

Doctor Vikatan: 3 வயதுக் குழந்தைக்கு மாறுகண்... தானாக சரியாகுமா, சிகிச்சை தேவையா?

Doctor Vikatan:என் 3 வயதுக் குழந்தைக்குத் திடீரென இடது கண் மட்டும் லேசாக மாறுகண்ணாக (Squint eye) மாறுகிறது. இந்தப் பிரச்னை வளர வளர தானாகவே சரியாகிவிடுமா அல்லது டாக்டரிடம் காட்ட வேண்டுமா?பதில்சொல்கிறார... மேலும் பார்க்க

Doctor Vikatan: மாத்திரை எடுக்காவிட்டால் அரிப்பு, தடிப்பு, மார்பில் அழுத்தம்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: நான் கடந்த 13 வருடங்களாக மூன்று நாள்களுக்கு ஒருமுறைmoteclc என்ற மாத்திரையை எடுத்து வருகிறேன். நான் மத்திரை எடுக்கவில்லை என்றால் உடலில் ஆங்காங்கே சிறிய தடிப்புகளுடன் நமைச்சல் வருகிறது. ... மேலும் பார்க்க

Doctor Vikatan: முதல் குழந்தை பிறந்த பிறகும் மலட்டுத்தன்மை பாதிக்குமா?

Doctor Vikatan: என் வயது 37. நான்கு வருடங்களுக்கு முன் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இப்போது அடுத்த குழந்தைக்கு முயற்சி செய்கிறோம். ஆனால், கரு தங்கவில்லை. இந்நிலையில் என் தோழி ஒருத்தி, முதல் குழந்தை பிறந... மேலும் பார்க்க

Doctor Vikatan: 60 வயதில் முகம், கழுத்தில் மருக்கள்... நீக்க முடியாத நிலையில் என்ன தீர்வு?

Doctor Vikatan:எனக்கு வயது 60. சில வருடங்களாக மருக்கள் பிரச்னை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் கறுப்பு நிறத்தில் சிறு சிறு மருக்கள் வருகின்றன. டாக்டரை அணுகிக் கேட்டதற... மேலும் பார்க்க

Doctor Vikatan: இதயத்துக்கு ஸ்டென்ட் ஓகே, கிட்னிக்கும் ஸ்டென்ட் வைக்கப்படும் என்பது உண்மையா?

Doctor Vikatan:பொதுவாக, இதயப் பிரச்சனைகளுக்காக ஸ்டென்ட் வைப்பதைப் பற்றித்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், சிறுநீரகப் (கிட்னி) பிரச்சனைகளுக்காகவும் ஸ்டென்ட் வைக்க முடியுமா? எனது நண்பர் ஒருவர் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: சத்தமாகப் பேசும் பிரச்னை... அடுத்தவருக்கு அசௌகர்யம்... தீர்வு உண்டா?

Doctor Vikatan: எனக்கு ஒரு விசித்திரமான பிரச்னை உள்ளது. நான் எப்போது, எங்கு பேசினாலும் மிகவும் சத்தமாகப் பேசுகிறேன். இது பெரும்பாலும் மற்றவர்களுக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்துகிறது. நான் விழிப்பு உணர்வோடு... மேலும் பார்க்க