செய்திகள் :

Doctor Vikatan: கொஞ்சமே சாப்பிட்டாலும் குறையாத உடல் பருமன்... எடையைக் குறைக்க என்னதான் வழி?

post image

Doctor Vikatan: என் வயது 43. எனக்கு உடல் பருமன் பிரச்னை இருக்கிறது. என்ன முயற்சிகள் செய்தாலும் எடையைக் குறைக்கவே முடியவில்லை. நான் அதிகம் சாப்பிடும் வழக்கம் உள்ள நபரும் இல்லை.

மிகக் குறைவாகத்தான் சாப்பிடுவேன். ஆனாலும் உடல் பருமன் குறைவதாகத் தெரியவில்லை. இதற்கு என்ன காரணம்... எடையைக் குறைக்க என்னதான் செய்வது?

பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்.

பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்
பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்

உங்களைப் போல குறைவாகச் சாப்பிட்டாலும் சிலருக்கு எடை அதிகமாக இருப்பதைப் பார்க்கலாம்.. குறைவாகச் சாப்பிட்டாலும் அதை எரிக்கும் அளவுக்கு வொர்க் அவுட் செய்ய முடியாவிட்டால், அதையும் 'ஜங்க் ஃபுட்' கணக்கில்தான் கொள்ள வேண்டும்.

பேசல் மெட்டபாலிக் ரேட் ( BMR) என்ற கணக்கு ஒன்று இருக்கிறது. ஒருவருடைய கிட்னி, மூளை, இதயம் என ஒவ்வோர் உறுப்பும் வேலை செய்ய  குறிப்பிட்ட அளவு ஆற்றல் அவசியம். அதற்கான கலோரிகளைக் கணக்கிடுவதுதான் பி.எம்.ஆர்.

ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 1,600 கலோரிகள் தேவைப்படுவதாக வைத்துக்கொள்வோம். அந்த நபர் மதிய உணவிலேயே பலமாகச் சாப்பிட்டு, கிட்டத்தட்ட 1,000 கலோரிகளை  எடுத்துக்கொள்கிறார். தவிர, காலை உணவு, இரவு உணவு என எல்லாம் சேர்ந்து அந்தக் கணக்கு 2,500 - 3,000 கலோரிகள் வந்துவிடும். அப்படிப் பார்த்தால் மதியம் அவர்  சாப்பிட்டது ஜங்க் ஃபுட் என்றுதான் கணக்கிடப்பட வேண்டும்.

ஒரு நபர் சரியாக ஒரு நாளைக்கு 1,600 கலோரிகள்தான் சாப்பிடுகிறார் என வைத்துக்கொள்வோம். அந்த 1,600 கலோரிகளை எரிக்க உடல்ரீதியான இயக்கம் இல்லாவிட்டால் அதுவும் ஜங்க் ஃபுட்டாகவே உடலில் சேரும்.  ஏதோ ஒரு வகையான உடற்பயிற்சி செய்யாமல், உடல் பருமனைக் குறைப்பது யாருக்கும் சாத்தியமே இல்லை.

ஏதோ ஒரு வகையான உடற்பயிற்சி செய்யாமல், உடல் பருமனைக் குறைப்பது யாருக்கும் சாத்தியமே இல்லை.

சராசரி எடையுள்ள ஒருவர் ஒரு மணி நேரம் நடந்தால், சாதாரணமாக 200 கலோரிகளை எரிக்க முடியும் என வைத்துக்கொள்வோம்.  

அதுவே 30-40 கிலோ அதிக எடையுடன் இருக்கும் ஒருவர், தினம்  ஒரு மணி நேரம் வாக்கிங் போகிறார் என்றால்  அவரால் வேகமாக நடக்க முடியாது. மெதுவாகவே நடப்பார். 150 கலோரிகளைத்தான் எரித்திருப்பார்.

அன்றாட வேலைகளையும் அவரால் வேகமாகச் செய்ய முடியாது. உடலின் வளர்சிதை மாற்றம் குறையும்போது, 200 கலோரிகளை எரிக்க, அந்த நபருக்கு 6 மணி நேரம் தேவைப்படும். குறைவாகச் சாப்பிட்டாலும், எடையைக் குறைக்க முடியவில்லை எனச் சிலர் புலம்புவதன் பின்னணி இதுதான்.

உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சிகளும் மட்டும்தான் உடல் பருமனைக் குறைக்கும். எத்தனை கலோரிகள் சாப்பிடுகிறோமோ, அவற்றை எரிக்கும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால், இது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை.

அந்த நிலையில்தான் அவர்களுக்கு வேறு சப்போர்ட் தேவைப்படுகிறது. உடல்பருமனுக்கு சிகிச்சைக்காக வரும் நபரின் உயரம், எடை, பி.எம்.ஐ, வயது போன்றவற்றை முதலில் பார்ப்போம். அந்த வயதுக்கு அவர் சரியான பி.எம்.ஐ-ல் இருக்கிறாரா என்று பார்ப்போம். பிறகு உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாட்டைப் பரிந்துரைப்போம். 

உடல் எடை குறைக்க அறுவை சிகிச்சையா?
உடல்பருமனுக்கு சிகிச்சைக்காக வரும் நபரின் உயரம், எடை, பி.எம்.ஐ, வயது போன்றவற்றை முதலில் பார்ப்போம்.

ஓரளவு உடல்பருமன் கொண்டவர்களுக்கு இந்த இரண்டின் மூலம் எடையைக் குறைக்க முடியலாம். அதீத உடல்பருமனுடன் இருப்பவர்களுக்குக் குறைந்த அளவு உணவு சாப்பிட்டுவிட்டு, உடற்பயிற்சி செய்ய உடல் ஒத்துழைக்காது. 

அவர்களுக்கு மருத்துவர் அறுவை சிகிச்சையைப் பரிந்துரைப்பார். அது சம்பந்தப்பட்ட நபரின் வயது, உடல்வாகு, உடல் இயக்கம் எனப் பல விஷயங்களைப் பொறுத்து முடிவு செய்யப்படும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: பலரும் பின்பற்றும் No-Sugar Diet... ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்துமா, உடல் நடுங்குமா?

Doctor Vikatan: பலரும் காபி, டீ உள்பட எதிலும் சர்க்கரை சேர்த்துக்கொள்வதில்லை என்றும் 'நோ சுகர்' டயட்டுக்கு மாறிவிட்டதாகவும் சொல்கிறார்கள். நானும் அதைப் பின்பற்றலாம் என கடந்த ஒரு வாரமாக எதிலுமே சர்க்கர... மேலும் பார்க்க

Doctor Vikatan: தோட்டத்தில் தானாக முளைத்த கல்யாண முருங்கை... மருத்துவ குணம் மிக்கதா?

Doctor Vikatan:எங்கள் வீட்டுத் தோட்டத்தில் தானாகவே முளைத்திருந்தது ஒரு செடி. குப்பைச்செடி என பிடுங்க நினைத்தபோது, அது கல்யாண முருங்கை செடி என்றும், அற்புதமான மருத்துவ பலன்கள் கொண்டது என்றும் சொன்னது க... மேலும் பார்க்க

HPV: ஆண்களுக்கும் வரும் 'அந்த' புற்றுநோய்; திருமணத்திற்கு முன்பே போட வேண்டிய ஓர் ஊசி - ஏன் தெரியுமா?

தடுப்பூசி திட்டம்பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக, கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியப்பட்டு வருகிறது. கருப்பை வாய் புற்றுநோய்க்கு முக்கியமான காரணம் HPV (Human Pap... மேலும் பார்க்க

Doctor Vikatan: குழந்தைகளுக்கு காபி, டீ.... எந்த வயதிலிருந்து அறிமுகப்படுத்தலாம்?

Doctor Vikatan: என்னுடைய நண்பன், தன்னுடைய ஒன்றரை வயதுக் குழந்தைக்கு காபியும் டீயும் கொடுத்து வளர்க்கிறான். இந்த வயதில் ஏன் பழக்குகிறாய் என்று கேட்டால், குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே எல்லா உணவுகளையும் அ... மேலும் பார்க்க

Doctor Vikatan: சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் Microgreens: ஆரோக்கியத்தை அள்ளித் தருமா?

Doctor Vikatan: கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களில் மைக்ரோ க்ரீன் என்ற கான்செப்ட் டிரெண்டாகி வருகிறது. அதென்ன மைக்ரோ க்ரீன்ஸ்.... எதில் தயாரிக்கிறார்கள்... யாருக்கு நல்லது?பதில் சொல்கிறார், கோவையைச் சே... மேலும் பார்க்க

உடல் பருமன் மட்டும் அல்ல… நாக்கும் பருமனாகலாம்! - காரணங்களும், தீர்வும்!

உடல் பருமன், உடல் எடை அதிகரிப்பு பற்றிய விஷயங்களைப் பார்க்கிறோம், கேட்கிறோம், பேசுகிறோம். ஆனால், உடலின் முக்கிய உறுப்பான நாக்கின் பருமன் பற்றி, பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. பேசுவது, சாப்பிடுவத... மேலும் பார்க்க