49-வது புத்தகக் காட்சி: `எழுத்துக்களைப் படிக்க படிக்க எண்ணங்கள் மலரும்..!' - முத...
e-B-4 Visa: ஆன்லைன் விசா கொடுத்து சீன வணிகர்களை அழைக்கும் மத்திய அரசு; இந்தியாவின் திட்டம் என்ன?
சீன பிசினஸ்மேன்களுக்கு e-b-4 விசா (e-Production Investment Business Visa) திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது இந்தியா.
இந்தத் திட்டம் கடந்த 1-ம் தேதியில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
இது முழுக்க முழுக்க ஆன்லைன் விசா திட்டம் ஆகும். ஏஜென்டுகள் இல்லாமல், தூதரகத்திற்குச் செல்லாமல் இந்த விசாவிற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இந்த விசா 45 - 50 நாள்களில் கிடைத்துவிடும். e-b-4 விசா பெற்றவர்கள் 6 மாதங்கள் வரையில் இந்தியாவில் தங்கலாம்.
https://www.nsws.gov.in/ - இதுதான் விண்ணப்பிப்பதற்கான லிங்க்.

என்ன பயன்?
இந்த விசா மூலம் இந்தியா வரும் சீன பிசினஸ்மேன்கள் இங்கே உபகரணங்களை நிறுவுதல், இயக்குதல், தரத்தை செக் செய்தல், மெயின்டனன்ஸ், உற்பத்தி, பயிற்சி போன்றவற்றை இங்கே செய்யலாம்.
இந்த விசா மூலம் இந்தியா - சீனா உறவை வலுப்படுத்த நினைக்கிறது இந்திய அரசு. மேலும், இது இந்தியாவிற்குள் முதலீடுகளைக் கொண்டுவரும். மேலும், இது இந்தியாவின் உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.
இந்தியாவின் இந்த முயற்சியை சீன அரசும் பாராட்டியுள்ளது.














