செய்திகள் :

'EVM மெஷின்ல எந்த கோளாறும் இல்ல...' - ஸ்டாலினின் கொளத்தூர் 'தேர்தல் புகார்' முடித்து வைப்பு!

post image

கொளத்தூர் தொகுதியின் 14 பூத்களின் EVM மெஷின்களை சரிபார்க்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. சோதனையின் முடிவில் மெஷின்களில் எந்த கோளாறும் இல்லை என தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

EVM Verification
EVM Verification

கொளத்தூரில் 8795 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தோற்றிருந்தார். இதைத் தொடர்ந்து கொளத்தூரின் சில பூத்களில் திமுகவுக்கு சாதகமான வாக்காளர்கள் இருந்தும் குறைவான வாக்குகளே பதிவாகியிருப்பதாக மு.க.ஸ்டாலின் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் கொளத்தூரின் 14 பூத்களில் EVM மெஷின்களை சரிபார்க்கும் பணியை கடந்த மாதம் 29 ஆம் தேதி தொடங்கியது.

ஒரு நாளைக்கு 2 பூத்களின் மெஷின்களை சரிபார்க்கும் பணி நடந்தது. முதலில் ஏப்ரல் 23 ஆம் தேதி பதிவான வாக்குகளை சரிபார்த்துவிட்டு, பின்னர் ஒரு மாதிரி வாக்குப்பதிவு போல நடத்தி வாக்குகள் சரியாக விழுந்து பதிவாகிறதா என்பதை அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்பு சரிபார்ப்பர். இந்த செயல்முறை இன்று வரை நடந்திருந்தது.

இடையில் திமுக சார்பில் இரண்டு பிரச்னைகள் எழுப்பப்பட்டது. விவிபாட் இயந்திரம் ஒன்று திடீரென பழுதானதை ஒரு புகாராக முன்வைத்தனர். பின்னர் இரண்டு மெஷின்களின் வெளிப்புறத்தில் சீரியல் நம்பர் இல்லை என்பதை புகாராக வைத்தனர்.

EVM Verification
EVM Verification

இந்த புகார்களை காரணம் காட்டி EVM சரிபார்க்கும் செயல்முறையிலிருந்து வெளியேறவும் செய்தனர். இதன் பிறகு தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் பழுதான மெஷின்களுக்கு பதிலாக வேறு பூத்களின் மெஷின்களை தேர்வு செய்து கொடுத்தனர். அந்த மெஷின்களும் சரிபார்க்கப்பட்டன. இறுதியில் கொளத்தூரின் EVM மெஷின்களில் எந்த கோளாறும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

`எஸ்.பி.வேலுமணியை அதிமுக பொதுச்செயலாளராக்கு சாமி' - குண்டம் இறங்கி வேண்டிய கோவை நிர்வாகி!

அ.தி.மு.க-விற்குள் உட்கட்சிப் பூசல் அதிகரித்து வரும் நிலையில், எஸ்.பி. வேலுமணியை அக்கட்சியின் பொதுச்செயலாளராக வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அ.தி.மு.க. கோவை குறிச... மேலும் பார்க்க

"வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக அள்ளி வீசிவிட்டு, இப்போது..!"- பட்ஜெட் குறித்து சீமான்

"மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வத் திட்டங்களோ, மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கான நடவடிக்கைகளோ எதுவுமற்று, வெற்றி எனும் பெயரை மட்டுமே கொண்டுள்ள... மேலும் பார்க்க

TN Budget: "5 ஆண்டுகள் முடியும்போது ஒட்டுமொத்த கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்"- தங்கம் தென்னரசு

தவெக அரசு 2026 - 2027 ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில், முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது அவர்,... மேலும் பார்க்க

இரண்டு மசோதாக்கள் அமல்படுத்த பாஜகவின் பிளான்; ராகுலை சந்தித்த கிரண் ரிஜிஜு - ராகுல் சொன்ன 'நோ'!

தற்போது டெல்லியில் மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதை யாராவது சொன்னால் தான் தெரியும் போல. தினமும் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அமளி ஏற்படத் தொடங்கிய வேகத்திலேயே சபை ஒத்தி வைக்கப்பட்... மேலும் பார்க்க

TN Budget: `வருந்தத்தக்கது; மக்களின் எதிர்பார்ப்புகளைக் கருத்தில் கொள்ளவில்லை' - சிபிஐ வீரபாண்டியன்

‘தவெக அரசின் நிதிநிலை அறிக்கை சில பிரிவுகளில் முன்னேற்றம் காண வழிவகுக்கும். எனினும் பெரும் பகுதி, மக்களின் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொள்ளவில்லை’ என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு... மேலும் பார்க்க

TN Budget 2026: `பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைப்பா?' - இல்லை என விளக்கும் ராஜ்மோகன்!

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக அரசு 2026 - 2027 ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. இதில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44, 527 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. பலரும் ... மேலும் பார்க்க