AI மீது 'மாயக் காதல்': அமெரிக்கத் தொழிலதிபர் தற்கொலை - கூகுள் மீது வழக்கு
Fridge-ன் Freezer-ல் ஏன் Light இல்லை? - இது தெரியாமப் போச்சே?! - 20
பிரிட்ஜைத் திறந்தால் பளிச்சென்று லைட் எரியும், ஆனால் ஃப்ரீசரைத் திறந்தால் லைட் இருக்காது. பனி படிந்து விளக்கு உடையும் என்பதுபோல் காரணங்கள் சொல்லப்பட்டாலும் அது ஏன் என்பதன் பின்னணியில் சுவாரசியமான தகவல்கள் உள்ளன.

பொருளாதார நிபுணர் ராபர்ட் ஃபிராங்க் (Robert Frank) இது குறித்து ஒரு விளக்கத்தை அளிக்கிறார். ஒரு பிரிட்ஜில் விளக்கு பொருத்த குறிப்பிட்ட செலவு ஆகிறது. நாம் ஒரு நாளில் பிரிட்ஜை 20 முதல் 30 முறை திறக்கிறோம். ஆனால், ஃப்ரீசரை ஒரு நாளைக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டுமே திறக்கிறோம். மிகக் குறைவாகப் பயன்படுத்தப்படும் ஒரு இடத்திற்கு விளக்கு, வயரிங் மற்றும் ஸ்விட்ச் அமைப்பது தேவையற்ற கூடுதல் செலவு என்று நிறுவனங்கள் கருதுகின்றன.
பிரிட்ஜில் பொருட்கள் அடுக்கப்பட்டிருக்கும் விதம் வேறு, ஃப்ரீசரில் வேறு. ஃப்ரீசரில் பெரும்பாலும் இறைச்சி, ஐஸ்கிரீம் பெட்டிகள் அல்லது உறைந்த உணவுப் பொருட்கள் என ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைப்போம். அப்படி வைக்கும்போது, ஒரு விளக்கை உள்ளே பொருத்தினால் அதன் வெளிச்சம் மேலடுக்கில் உள்ள பொருட்களால் மறைக்கப்பட்டுவிடும். இதனால் அடியில் இருக்கும் பொருட்கள் இருட்டாகவே இருக்கும்.

பழைய மாடல் பிரிட்ஜுகளில் Incandescent பல்புகள் பயன்படுத்தப்பட்டன. இவை எரியும்போது வெப்பத்தை வெளியிடும். ஃப்ரீசரின் மிகக் குளிர்ந்த வெப்பநிலையில் ஒரு வெப்பமூட்டும் பொருளை வைப்பது அதன் குளிர்ச்சித் திறனைப் பாதிக்கும். ஆனால், நவீன தொழில்நுட்பத்தில் வாட்டர் ப்ரூஃப் அமைப்புகள் உள்ளன. இருப்பினும், பட்ஜெட் ரக மாடல்களில் செலவைக் குறைக்க இதைக் தவிர்த்து விடுகின்றனர்.
இன்று சந்தைக்கு வரும் பல உயர்தர மாடல் பிரிட்ஜுகளில் ஃப்ரீசரிலும் விளக்குகள் பொருத்தப்படுகின்றன. குறிப்பாக, வெப்பத்தை வெளிப்படுத்தாத LED விளக்குகள் வந்த பிறகு இந்தச் சிக்கல் தீர்ந்துவிட்டது. LED விளக்குகள் மிகக் குறைந்த இடத்தை அடைப்பதுடன், பனி மற்றும் அதி கடும் குளிரிலும் சிறப்பாகச் செயல்படக் கூடியவை.


















