"என் கல்யாணத்தை பத்தி யாராச்சும் கேட்டா Irritating-ஆ இருக்கு" - நடிகை மும்தாஜ் B...
Gandhi Talks: "ஆரம்பத்தில சூப்பர்ஹிட் ஆகும்'னு எதிர்பார்ப்பு இருந்தாலும், இப்போது.!"- விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் , சித்தார்த் ஜாதவ் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘காந்தி டாக்ஸ்’.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை மராத்தி இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலெகர் இயக்கியிருக்கிறார்.
ஜீ ஸ்டூடியோஸ் வழங்கும் இப்படம் மவுனப் படமாக (silent movie) உருவாகி இருக்கிறது.

இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.
வரும் 30 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் சேதுபதி 'Gulte Pro' என்ற தெலுங்கு ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.
அதில் பேசியிருக்கும் அவர், '' 'காந்தி டாக்ஸ்' ஒரு சிறப்பானப் படம் மட்டும் அல்ல. மாறுபட்ட ஒரு சினிமா அனுபவத்தைக் கொடுக்கும் ஒரு திரைப்படம்.
இந்த படம் வழக்கமாக வெளியாகும் படத்தைப்போல் அல்லாமல் மவுனப் படமாக இருப்பதால் ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்ற கவலை ஆரம்பத்தில் படக்குழுவினருக்கு ஒரு கவலை இருந்தது.

பிறகு நெருங்கிய நண்பர்களுக்கு படத்தைத் திரையிட்டு காண்பித்தோம். அவர்களிடமிருந்து கிடைத்த நல்ல கருத்துகள் எங்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது.
ஆரம்பத்தில் சூப்பர் ஹிட் ஆகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், தற்போது படம் ஹிட் ஆக வேண்டும் என்பதே படக்குழுவினரின் விருப்பமாக இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.
















