செய்திகள் :

Gem வீரமணி வழக்கு: "யாரும் தப்பிவிடக்கூடாது" - சென்னை கமிஷனருக்கு முதல்வர் விஜய் நேரடி உத்தரவு

post image

ஜெம் குழுமத்தின் தலைவர் ஆர். வீரமணி. இவருக்கு வயது 84.

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார் என்று போக்சோ வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.

வீரமணியிடம் சிறுமிகளை அழைத்துச் சென்றதாகச் சென்னையைச் சேர்ந்த சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திரன் சிம்மனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வீரமணியின் கும்பல் ஏழை, எளிய சிறுமிகளை டார்கெட் செய்தே இந்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.

விஜய்
விஜய்

முதல்வர் உத்தரவு

2025-ஆம் ஆண்டு சென்னை காவல்துறைக்குக் கிடைத்த பென்டிரைவை வைத்துத்தான் வீரமணி, சாந்தி, மகேந்திரன் சிம்மன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியோடு, புழல் மத்திய சிறையில் வைக்கப்பட்டிருந்த வீரமணியைத் தங்களது காவலில் எடுத்துத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் காவல்துறை.

இந்த நிலையில், வீரமணி வழக்கில் எந்தக் குற்றவாளியையும் தப்பவிட்டுவிடக்கூடாது என்று சென்னை காவல் ஆணையர் அமல்ராஜூக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரடியாக உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை: பகலில் மீன்கடைத் தொழிலாளி; இரவில் பெண்களின் உள்ளாடைகள் திருடன் - இளைஞர் சிக்கியது எப்படி?

நெல்லை மாநகரில் சமீப காலமாகவே வீடுகளில் கொடிகளில் காயப் போட்டிருந்த பெண்களின் உள்ளாடைகள் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக திருடு போய்க் கொண்டிருந்தன. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மகளிர் தங்கும் விடுத... மேலும் பார்க்க

'எண்ணெய்யில் பொறித்த மீன்; பார்சலில் ஈர வெங்காயம்'- விவசாயியிடம் லஞ்சமாக கேட்ட VAO பணியிடை நீக்கம்!

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், தேவர்மலை கிராம நிர்வாக அலுவலராக கார்த்திக் என்பவர் பணியில் இருந்து வருகிறார். அப்பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்ற விவசாயி வங்கியில் கடன் பெறுவதற்காக சிட்டா கேட்டு விண்ணப்ப... மேலும் பார்க்க

”டூவீலரில் 229 கிலோ மீட்டர், திருட்டு நகையில் ஜாலி டூர்”- செயின் பறித்த நண்பர்கள் சிக்கியது எப்படி?!

தஞ்சாவூர் அருகே உள்ள மானோஜிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நிருபாமலர் இவரது கணவர் டாக்டர். கடந்த 8ம் தேதி மளிகை கடைக்கு சென்று விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, டூவீலரில் வந்த இருவர் நிருபாமலர் ... மேலும் பார்க்க

ஓசூர்: வழி கேட்பது போல் நடித்து பெண்களிடம் நகைப் பறிப்பு; சிக்கிய கர்நாடக தபால்காரர்!

காரில் வந்து வழிகேட்பது போல் நடித்து 4 பெண்களிடம் நகை பறித்த கர்நாடக மாநில தபால்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம், ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்க சங்கிலி பறிப்பு!கிருஷ்ணகிரி மாவட்டம் த... மேலும் பார்க்க

தொழிலதிபர் வீரமணி வழக்கு: ``20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த பாலியல் சுரண்டல்" - அதிர்ச்சி தகவல்!

பிரபல கிரானைட் தொழிலதிபர் ஆர். வீரமணி (85) சம்பந்தப்பட்ட போக்சோ (POCSO) வழக்கில், 2003-ம் ஆண்டுக்கும் முன்பிருந்தே பல சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல்... மேலும் பார்க்க

ChatGPT, ஏ.ஐ மூலம் தேர்வில் காப்பிடியத்த மும்பை ஐ.ஐ.டி மாணவர்: பிடிபட்டதால் விபரீத முடிவு!

மும்பை ஐ.ஐ.டியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் சாஹில் வகோடே. எரிசக்தி அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்த சாஹில் வகோடே தேர்வின்போது விடைகளைக் கண்டரிய காப்பியடித்துள்ளார். அவர் இதற்காக தனது ம... மேலும் பார்க்க