செய்திகள் :

Gold: தங்கம் விலை மீண்டும் ரூ.1.20 லட்சத்தை எப்போது தொடும்?

post image

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை இறங்கு முகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

கடந்த ஜனவரி மாதத்தின் இறுதியில் ஒரு பவுன் தங்கம் விலை கிட்டத்தட்ட ரூ.1.34 லட்சத்தைத் தொட்டது. ஆனால், அதன் பிறகு மெல்ல மெல்ல குறைய தொடங்கியது. அவ்வப்போது சின்ன சின்ன ஏற்றங்களும் இருக்கத்தான் செய்தன.

ஆனால், ஈரான் போர் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை இறங்கு முகம்தான்.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
சர்வதேச சந்தையில், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக 4,000 - 4,800 டாலர்களுக்குள் வர்த்தகம் ஆகிறது. மீண்டும் இது இப்போது 5,000 டாலர்களைத் தொடும் என்று இன்றைய Opening Bell Show-ல் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம்.

"ஈரான் போர் முடியும் வரை தங்கம் விலையில் இறங்குமுகம்தான்.

இந்தப் போர் முடிந்த உடன், தங்கத்திற்கு ஏற்படும் டிமாண்டைப் பொறுத்து, தங்கத்தின் பக்கம் மீண்டும் ஃபோக்கஸ் திரும்புவதற்கான வாய்ப்புகள் உண்டு.

ஆக, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,000 டாலரைத் தொட வேண்டுமானால், ஈரான் போர் முடிய வேண்டும்.

ஈரான் போரும், உலக பொருளாதாரமும்

ஈரான் போரினால், கச்சா எண்ணெய் விலையில் மிகுந்த நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. போர் முடிந்த உடன்தான், கச்சா எண்ணெய்யின் சராசரி விலையைக் கணிக்க முடியும்.

கச்சா எண்ணெய்யின் சராசரி விலை தெரிய வரும்போது, உலக பொருளாதாரத்திற்கும், உலக நாடுகளில் பணவீக்கத்திலும் எவ்வளவு பாதிப்பு என்று தெரிய வரும்.

அதையொட்டி, தங்கம் விலை நாணயங்களின் மதிப்பை வைத்து கணக்கிடப்படுமா... வட்டி விகிதங்களை வைத்து கணக்கிடப்படுமா... அல்லது இரண்டையும் சேர்த்து கணக்கிடப்படுமா என்பது தெரிய வரும். அதை வைத்து தங்கத்தின் விலை நிர்ணயமாகும்.

தங்கம்
தங்கம்

தங்கத்தின் மீது கவனம்

பொதுவாக, பணவீக்கம் அதிகரிக்கும் போது, வட்டி விகிதம் குறைக்கப்படாது. அதனால், மீண்டும் தங்கம் பணவீக்க ஹெட்ஜாக மாறும். அப்போது மீண்டும் தங்கத்தின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பும்.

இப்போது உடனடியாக இது உருவாகாது... ஈரான் போர் முடிந்து, பணவீக்கத்தைப் பொறுத்து இது அனைத்தும் அமையும்" என்று கூறினார்.

தலைப்பிற்கான பதில் இதோ...

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,000 டாலர்களைத் தாண்டும்போது, இங்கே சென்னையில் ஒரு பவுன் தங்கம் கிட்டத்தட்ட ரூ.1.20 லட்சத்தைத் தொடும்.

ஆக, ஈரான் போர் முடிந்தால்தான், அனைத்தும் தெரிய வரும்.

'எல்லாம் மேலே இருக்கிறவன் பாத்துப்பான்' என்பதுபோல, ஈரான் போர் முடியும் போது, அனைத்தும் தெரிந்துவிடும்.

Gold Rate: "தங்கம் விலை இப்போது இறங்கு முகத்தில்தான்; ஆனால்..." - ஏறுமுகம் அடுத்து எப்போது?

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து உலக நாடுகளும், முதலீட்டாளர்களும் அமெரிக்க டாலரின் பக்கம் தங்களது முதலீடுகளைத் திருப்பினர். இதனால், அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவாகியது. இன்னொரு பக்கம், தங்கம் விலை இறங்... மேலும் பார்க்க

Gold: தங்கம் விலை அடுத்து எப்போது ஏறும்? நிபுணர் கூறும் ஃபார்முலா - நீங்களே கண்டுபிடிக்கலாம்

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, கச்சா எண்ணெய் தாறுமாறாக ஏறிக்கொண்டே போகிறது... தங்கம், வெள்ளி விலை ஒன்று இறங்குமுகமாக உள்ளது... அல்லது நிலையாக உள்ளது. தங்கம், வெள்ளி விலை மீண்டும் எப்போது உயரும் என்பத... மேலும் பார்க்க

இந்தியாவில் 'இந்த' 15 வங்கிகள் மட்டும் தங்கம் இறக்குமதி செஞ்சுக்கலாம் - மத்திய அரசின் அப்ரூவல்!

இந்தியாவில் மத்திய அரசு அனுமதிக்கும் வங்கிகள் மட்டுமே தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி செய்ய முடியும். அதன் படி, 2029-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை எந்தெந்த வங்கிகள் தங்கம் மற்றும் வெள்ளியை இறக்குமதி ... மேலும் பார்க்க

2016-ல் ரூ.1 லட்சத்திற்கு 4 பவுனுக்கு மேல் தங்கம்; 2016-2025 அட்சய திருதியை தங்கம் விலை ஒரு பார்வை!

வரும் 19-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), அட்சய திருதியை. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால், பணம் சேரும் என்பது இந்தியர்களின் நம்பிக்கை. இதனால், அட்சய திருதியை அன்று ஒரு பொட்டு தங்கமாவது இந்தியர்கள் வா... மேலும் பார்க்க

Gold Rate: 'சின்ன தொகை அன்று' - ரூ.1,200 குறைந்த தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.150-உம், பவுனுக்கு ரூ.1,200-உம் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,210 ஆகும்.தங்கம் ... மேலும் பார்க்க

கல் வைத்த தங்க நகைகளை 'இப்படி' வாங்குவது புத்திசாலித்தனம்! அதில் ஆரம், நெக்லெஸ் வேண்டாம்; 'இது' ஓகே

கல் நகைகளைப் பார்த்தாலே, 'வாங்க வேண்டும்' என்கிற ஆசை தானாக தோன்றும். ஆனால், ஆசைக்காக வாங்கும் கல் நகைகள் விற்கும்போதும், அடமானம் வைக்கும் போதும் லாபம் இல்லை. மேலும், கல் நகைகளை வாங்கும் போது சில சிக்க... மேலும் பார்க்க