Penguin: 'வாழா என் வாழ்வை வாழவே' - வைரலாகும் ஒற்றை பென்குயின்; பின்னணி என்ன தெரி...
GRT: சுகாதார சேவைகளுக்கான வலுவான பாலத்தை அமைக்க உதவிய ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்!
இந்தியாவின் மிக நம்பகமான நகை நிறுவனங்களில் ஒன்றான ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், சமூகப் பொறுப்பிற்கான தனது உறுதியை தொடர்ந்து வலுப்படுத்தி, பின்தங்கியவர்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு சுகாதார முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கி வருகிறது.
அன்பு, அக்கறை மற்றும் சமூக நலன் ஆகிய மதிப்பீடுகளை வழிகாட்டியாகக் கொண்டு, வணிகத்தைத் தாண்டி நீடித்த சமூக தாக்கத்தை உருவாக்குவதில் ஒரு பங்களிப்பதை இந்த நிறுவனம் நம்புகிறது.

இந்த உறுதியின் அடிப்படையில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நோயாளிகளின் அவசர மருத்துவ தேவைகளுக்கு ஆதரவாக, சென்னையில் உள்ள மூன்று சுகாதார நிறுவனங்களுக்கு ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் `மொத்தமாக ரூ.66 லட்சம் வழங்கியுள்ளது.
பம்மல், சங்கரா கண் மருத்துவமனைக்கு, கேட்டராக்ட் அறுவை சிகிச்சைகளுக்கு முன் பரிசோதனையில் பயன்படுத்தப்படும் முக்கியமான நோயறிதல் கருவியான ஆப்டிக்கல் பயோமீட்டர் வாங்குவதற்காக ரூ.26 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆதரவு நோயறிதல் துல்லியத்தை மேம்படுத்தி, பின்தங்கிய நோயாளிகளுக்கு தரமான கண் சிகிச்சை வழங்க உதவும். மேலும், வறுமையில் உள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்கவும், அந்த அறக்கட்டளையின் முதியோர் இல்லத்தை ஆதரிக்கவும், ஜிஆர்டி பிராண்டு - அடையாறு, ஸ்ரீ மாதா டிரஸ்டிற்கு ரூ.20 லட்சம் வழங்கியுள்ளது.
இதன் மூலம் சுகாதாரம், மற்றும் முதியோர் பராமரிப்பு ஆகிய இரு தேவைகளும் பூர்த்தியாகின்றது. தனது சுகாதார முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், செம்பாக்கத்தில் உள்ள ஸ்ரிங்கேரி ஷாரதா ஈக்விடாஸ் மருத்துவமனைக்கு புற்றுநோய் தொடர்பான சிகிச்சைகளுக்காக ரூ.20 லட்சம் வழங்கி, பின்தங்கிய புற்றுநோய் நோயாளிகள்; காலத்திற்கேற்ற மற்றும் அவசியமான சிகிச்சையை பெற உதவியுள்ளது.

இந்த முயற்சி குறித்து ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ‘ஆனந்த்’ அனந்தபத்மநாபன் அவர்கள் கூறுகையில், “ஜிஆர்டியில், எங்கள் பொறுப்பு என்பது, வணிகத்தைத் தாண்டியது என்று நாங்கள் நம்புகிறோம். அதிக ஆதரவு தேவைப்படும் தருணங்களில், மக்களுடன் இருப்பது எங்களுக்கு உண்மையாகவே முக்கியம். காலத்திற்கேற்ற மற்றும் தரமான சுகாதார சேவைகளுக்கான அணுகல் என்பது கண்டிப்பாக வாழ்க்கையை மாற்றக்கூடியது; எங்களின் இது போன்ற முயற்சிகள் மூலம், வாழ்க்கையின் மிகச் சவாலான தருணங்களில் நோயாளிகளுக்கும் குடும்பங்களுக்கும் ஆதரவாக இருப்போம் என்று நம்புகிறோம்” என்றார்.
ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் மற்றொரு நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் இது குறித்து மேலும் கூறுகையில், “எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைக்கும் நம்பிக்கை, நாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு சமூக முயற்சிக்கும் ஊக்கமாக உள்ளது. 'சமூகத்திற்கு திருப்பி வழங்குவது' எங்கள் பயணத்தின் ஓர் அங்கமாகும்; மேலும், வணிக நிறுவனங்கள் தாங்கள் சேவை செய்யும் சமூகங்களின் நலனுக்காக அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற எங்கள் நம்பிக்கைக்கு இந்நிகழ்வே சான்றாகும்.
ஒவ்வொரு நோயாளியும் இந்த புதிய ஆண்டில் ஒரு புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடனும் தன்னம்பிக்கையுடனும் அடியெடுத்து வைப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த முயற்சியின் மூலம், எங்கள் முயற்சிகளில் ஒரு படி முன்னேறி, எங்களால் இயன்ற அனைத்து வழிகளிலும் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்” என்றார்.

1964ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், கைவினைத் திறன், வடிவமைப்பு மற்றும் காலத்தால் மாறாத மதிப்பீடுகளுக்காக பாராட்டப்படும்; இந்தியாவின் மிக மதிப்புமிக்க நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. தங்கம், வைரங்கள், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்கள் ஆகியவற்றில் சிறப்பான கலெக்ஷன்களை வழங்கும் இந்த நிறுவனம், தற்போது தென்னிந்தியாவில் 65 மற்றும் சிங்கப்பூரில் ஒரு கிளை உட்பட மொத்தம் 66 ஷோரூம்களை நடத்தி வருகிறது. நகை விற்பனையைத் தாண்டி, சுகாதாரம், நம்பிக்கை மற்றும் மனிதநேயத்தை வளர்க்கும் சமூக முயற்சிகளில் ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



















