செய்திகள் :

"'Heart Beat 3'ல நான் இருக்கேனா?!" - 'கனா கண்டேனடி' சஞ்சனா ஷேரிங்ஸ்

post image

'ஹார்ட் பீட்' சீரிஸிலும், 'பொன்னி' சீரியலில் வில்லியாக நடித்து மக்களுக்குப் பரிச்சயமான சஞ்சனா, இப்போது 'கனா கண்டேனடி' தொடரில் நடித்து வருகிறார்.

இத்தொடருக்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.

Kana Kandenadi - Sanjana Interview
Kana Kandenadi - Sanjana Interview

நம்மிடையே பேசிய சஞ்சனா, "'கனா கண்டேனடி' சீரியல்ல என்னுடைய ரேவதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பை மக்கள் கொடுத்திருக்காங்க.

இப்போ நான் வெளில எங்க போனாலும் என்னைப் பற்றி கேட்பதைப் போலவே, சீரியல்ல என்னுடைய நண்பர்களாக வர்ற சைத்ரா, கவிதா பத்தியும் கேட்கிறாங்க.

சொல்லப்போனால், சீரியல்ல மட்டுமில்ல, ஆஃப் ஸ்கிரீன்லையும் நாங்க நல்ல நண்பர்கள். தினமும் காலேஜ் போகிற மாதிரிதான் ஷூட்டிங் ஸ்பாட் இருக்கும். நானும் கவிதாவும் ஸ்கூல்மேட்ஸ். நாங்க ஒண்ணாதான் படிச்சோம்.

அப்போ நாங்க நண்பர்கள்தான். கவிதா ஃபர்ஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட். நான் கடைசி பென்ச்லதான் இருப்பேன்" என்றவர், "'கனா கண்டேனடி' சீரியல் வாய்ப்பு எனக்கு 'பொன்னி' சீரியல் மூலமாகத்தான் கிடைச்சது.

அந்தச் சீரியல்ல நான் வில்லி கதாபாத்திரத்துல நடிச்சிருந்தேன். அந்தக் கேரக்டர் ரீப்ளேஸ்மெண்ட் கேரக்டர்தான். இதுக்கு முன்னாடி 'பிக் பாஸ்' தர்ஷிகா அந்தக் கேரக்டர்ல நடிச்சிருந்தாங்க.

அவங்க இதுக்கு முன்னாடி அந்தச் சீரியலுக்கு என்ன மாதிரியான விஷயங்கள் செய்திருக்காங்கனு பார்த்து, நானும் 'பொன்னி' சீரியலுக்குப் புது விஷயங்களைச் சேர்த்து நடிச்சேன்.

அந்தச் சீரியலுக்குப் பிறகு இந்தச் சீரியலுக்கு ஆடிஷன் பண்ணினேன். எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. ஏன்னா, எப்போதும் ஒரு விஷயத்துக்கு நம்ம 100 சதவீதம் கொடுக்கணும். நம்ம போட்ட உழைப்புக்கு எல்லாம் கிடைக்கும்னு நினைப்பேன். அப்படிதான் இந்தக் கேரக்டரும் கிடைச்சது" என்றார்.

Kana Kandenadi - Sanjana Interview
Kana Kandenadi - Sanjana Interview

மேலும் தொடர்ந்தவர், "'பொன்னி' சீரியல் மூலமாக எனக்கு வைஷ்ணவி நல்ல தோழி ஆகியிருக்காங்க. இப்போதும் அவங்ககூட டச்லதான் இருக்கேன். பிறகு, 'பிக் பாஸ்' சபரியும் நல்ல நண்பன்தான். அப்போ பார்த்த மாதிரிதான் இப்போதும் அவன் இருக்கான்.

ஒரு முறை அவனுக்கு கால் பண்ணி, ''பிக் பாஸ்'ல நடந்த கதையெல்லாம் சொல்லு டா'னு சொன்னேன். பிறகு அது பற்றியும் பேசினோம்" என்றவர், "ஹார்ட் பீட் சீரிஸிலும் நான் நடிச்சிருந்தேன்.

அந்த வாய்ப்பு எனக்கு முன்னாடியே கிடைச்சது. அப்போ நான் பெங்களூருல வேலை பார்த்துட்டு இருந்தேன். பிறகு, மற்றொரு வாய்ப்பு கிடைச்சது. அதுக்கு ஆடிஷன் பண்ணி நான் வந்துட்டேன். 'ஹார்ட் பீட்'ல என்னுடைய கேரக்டர் ரொம்பவே அழகானதாக இருக்கும்.

ஆனா, முதல்ல கொஞ்சம் பயமும் இருந்தது. என்னுடைய கேரக்டர் மொட்டை அடிச்ச மாதிரி மேக்கப் போட்டிருக்கணும். நான்தான்னு மக்களுக்குத் தெரியாதேனு ஒரு பயம் இருந்தது.

ஆனா, அந்தக் கேரக்டர் கண்டிப்பா பேசப்படும்னு சொன்னாங்க. அதே மாதிரி மக்கள்கிட்ட இருந்தும் நல்ல வரவேற்பு கிடைச்சது. அந்தக் கேரக்டர் எழுதப்பட்ட விதமும் ரொம்ப அழகாக இருக்கும்.

இப்போ 'ஹார்ட் பீட் 3' வரப்போகுது. அதுல நான் இருப்பேனாங்கிறது ஒரு சர்ப்ரைஸ்! வெயிட் பண்ணி பாருங்க." எனத் தொடர்ந்து பேசியவர், "நான் 18 வயசுலேயே மாடலிங் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.

Sanjana - Heart Beat
Sanjana - Heart Beat

படிச்சு முடிச்சதும் பெங்களூருல வேலைக்குப் போயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த நாலு மாசத்துலேயே மொத்தமா வெறுத்துட்டேன். காசு, பணம் இருக்கும். ஆனா, திருப்தியாக அது இருக்காது.

வேலை பார்த்துட்டு இருக்கும்போதே சைட்ல நடிப்புக்கான முயற்சிகள் செய்திட்டு இருந்தேன். அப்போதான், 'ஹார்ட் பீட்' வாய்ப்பு வந்தது.

எனக்கும் வீட்ல ஒரு வருஷம் நடிப்புல முயற்சி பண்றதுக்கு டைம் கொடுத்தாங்க. 'ஹார்ட் பீட்', 'பொன்னி', 'கனா கண்டேனடி'னு இப்போ வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு" என முடித்துக் கொண்டார்.

முழு பேட்டியைக் காண கீழே இணைக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

"சாண்ட்ரா இடத்துல வேற பொண்ணு இருந்திருந்தா எங்கிட்ட டைவர்ஸ் வாங்கியிருப்பாங்க" - பிரஜின் பேட்டி

''தமிழில் இதுவரை 16 படங்கள் வந்திடுச்சு. நாலு படம் ரிலீஸ்க்கு வெயிட்டிங். மலையாளத்துல 4. கன்னடம், தெலுங்கில் தலா 1. ஆனாலும் எனக்குப் பிறகு டிவியில இருந்து சினிமாவுக்குப் போன விஜய் சேதுபதி, சிவ கார்த்த... மேலும் பார்க்க

நீங்களும் ஆகலாம் பிக்பாஸ் போட்டியாளர்! 'பிக்பாஸ் தி காமன் மேன்' எதற்கு தெரியுமா?

விஜய் டிவியின் ஃபேவரைட் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 10 அடுத்த சில மாதங்களில் தொடங்க இருக்கிறது. வழக்கம் போல் இந்த சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்கவிருக்கிறார்.நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட... மேலும் பார்க்க

Kana Kandenadi: "சீரியல்ல நடிக்கணும்னு ஐ.டி வேலையை விட்டுட்டேன்" - 'கனா கண்டேனடி' டீம் பேட்டி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'கனா கண்டேனடி' சீரியலின் முக்கிய கதாபாத்திரங்களான ஜாய்சன் மற்றும் சைத்ராவிடம் பேசினோம். 'கனா கண்டேனடி' சீரியலில் அறிமுகமாகியிருக்கும் ஜாய்சன் அவரது முத... மேலும் பார்க்க

"ஆடிட்டருடன் திருமணம்... பத்து பேருக்கு மேல கூப்பிடலை; ஏன்னா..." - 'வாணி ராணி' ஜெனிப்ரியா

'வாணி ராணி', 'அழகு' உள்ளிட்ட சீரியல்களில் நடித்த ஜெனிப்ரியா என்ற சாராவுக்கு மோகன் சுந்தர் என்பவருடன் சென்னை அம்பத்தூரிலுள்ள அம்மன் கோவில் ஒன்றில் வைத்து கடந்த வாரம் திருமணம் நடைபெற்றுள்ளது.திருமணத்தில... மேலும் பார்க்க

''இலங்கை டு சரிகமப நிகழ்ச்சி பயணம்" - 'சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்' பைனலிஸ்ட்கள் பேட்டி

'ஜீ தமிழ்' தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் 'சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 5' நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கு தற்போது ஆறு பேர் பைனலிஸ்டாகத் தேர்வாகியுள... மேலும் பார்க்க

Kana Kandenadi: "இப்போது என்னிடம் பேசவே பயப்படுகிறார்கள்" - நடிகர் விக்னேஷ் ஷேரிங்ஸ்

'கிழக்குச் சீமையிலே' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துத் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர் நடிகர் விக்னேஷ். கடந்த சில வருடங்களாக சீரியல் பக்கமும் இவர் கவனம் செலுத்தி வருகிறார். விஜய் டிவியில்... மேலும் பார்க்க