செய்திகள் :

I’m Game: ``எனக்கு மிஷ்கின் சாரோட நடிக்க பயமா இருந்தது.!" - நடிகை சம்யுக்தா

post image

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்.டி.எக்ஸ்’ படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த்திவ் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

சம்யுக்தா விஸ்வநாதன்
சம்யுக்தா விஸ்வநாதன்

அதில் கலந்துகொண்டு பேசிய Double Occupancy திரைப்படப் புகழ்நடிகை சம்யுக்தா விஸ்வநாதன், ``இந்த திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான மற்றும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். சிறுவயதிலிருந்தே சினிமா பார்த்து வளர்ந்த எனக்கு, திரையில் ஒரு எமோஷன் பார்க்கும்போது என்ன உணர்வு ஏற்படுகிறதோ, அதே உணர்வை ஆடியன்ஸிற்கு கடத்த வேண்டும் என்ற ஆசை இருந்தது. இயக்குனர் நஹோஸ் சார் கதையை விவரித்தபோதே இந்த படத்தில் நிச்சயமாக நடிக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

மிஷ்கின் சாருடன் முதலில் நடிக்க கொஞ்சம் பயமாக இருந்தாலும், போகப் போக அது மிகவும் எளிதாக மாறியது. இப்படத்தில் ஒரு தமிழ் பெண்ணாக நடித்திருப்பது எனக்கு மிகவும் புதுமையான அனுபவமாக இருந்தது. தாயம் விளையாட்டில் தொடர்ந்து 'தாயம்' விழுந்து முன்னேறுவது போல, இந்தப் படம் எனது திரைப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று நம்புகிறேன். எப்போதும் போல ஊடகங்களும், ரசிகர்களும் செப்டம்பர் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இத்திரைப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்." எனக் கேட்டுக்கொண்டார்.

What To Watch: 'சர்தார் 2', 'மண்டாடி', 'விஸ்வநாத் & சன்ஸ்' - இந்த வாரம் ரிலீஸ்கள் | முழு லிஸ்ட்

மண்டாடி: 'மண்டாடி' திரைப்படம் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையில் சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படம் திரையரங்குகளில் செப்டம்பர் 10-ஆம்... மேலும் பார்க்க

"நான் என் அடையாளத்தை இழந்துவிட்டதுபோல் உணர்ந்தேன்" - சமந்தா

நடிகை சமந்தா சமீபத்தில் 'The Hollywood Reporter' ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கிறார். மயோடிஸ் நோயால் பாதிக்கப்பட்டது குறித்து அந்த நேர்காணலில் பேசியிருக்கும் சமந்தா, "மயோடிஸ் நோயால் நான் பாதிக... மேலும் பார்க்க

ஆரண்ய காண்டம் : வன்முறை அழகியல்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 23

`சினி'ஸ்கோப் 23ஆரண்யகாண்டம்பசுபதியை கஜேந்திரனின் ஆட்கள் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். பசுபதி பயத்துடன் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறான். அதுவொரு பரபரப்பான சேஸிங் காட்சி. ஏதேதோ குழப்பமான பின்னணி இசை ... மேலும் பார்க்க

Mandaadi: "ஒரு மீனவனா நடிச்சதை நான் பாக்கியமாக நினைக்கிறேன்!" - நடிகர் சூரி

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'மண்டாடி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. Mandadi இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மு... மேலும் பார்க்க

Sardar 2 Review: அதிக பிரமாண்டம், அச்சுறுத்தும் களம்; ஆனாலும் இந்த சர்தார் சறுக்குவது எங்கே?

RAW ஏஜென்ட்டான விஜய் பிரகாஷ் (கார்த்தி), தனது தந்தை சர்தார் சந்திரபோஸின் (கார்த்தி) கடந்தகாலத்துடன் தொடர்புடைய முக்கியமான மிஷனுக்குள் இழுக்கப்படுகிறார். சில நொடிகளில் லட்சக்கணக்கான உயிர்களைப் பறிக்கக்... மேலும் பார்க்க

Mandaadi Review: புதிய களம், பழைய டெம்ப்ளேட்; ஆனாலும் மிரட்டும் தாட்டியக்காரன் இந்த மண்டாடி!

ஊரில் தன்னை பாய்மரப் படகு போட்டியில் சேர்க்க மறுக்கும் சட்டாப்புலியின் (சுஹாஸ்) மகனைக் கொல்ல முயற்சி செய்கிறார் மாரி (மிதுன் ஜெய் சங்கர்). ஆனால், இதில் மாரியின் குறி தவறிவிட, சட்டாப்புலியும் அவரின் ஆட... மேலும் பார்க்க